("ஆர்.எஸ்.எஸ் - ஓர் அபாயம்" - தொடர் 16)
முதலாம் உலக மகாயுத்தம் துவங்கியபோது, ஜெர்மன் மொழியைப் படிக்க ஆரம்பித்தவர்கள் இந்த நாட்டுப் பார்ப்பனர்கள்! காரணம் ஜெர்மன்காரர்கள் கையில் இந்திய ஆட்சி வந்து விடும் என்று நம்பி, அந்த ஆட்சியிலே தாங்கள் செல்வாக்குப் பெற்று விடலாம் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கிடந்தனர்!
ஜெர்மன்-பாசிச இயக்கத்தலைவர் ஹிட்லர் மீது ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு எப்போதுமே மரியாதை உண்டு. ஹிட்லரின் ஸ்வஸ்திக் கொடி அமைப்பையே, தங்கள் கொடியாக வைத்துக் கொண்டிருந்ததுதான் இந்த ஆர்.எஸ்.எஸ்.கூட்டம்! "இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு ஹிட்லர் தான் குரு, காந்தியாருக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை இவர்கள் பரப்பி வந்தார்கள். சுதந்திரப் போராட்ட உணர்வுகள், மதச்சார்பின்மை ஆகியவற்றை எதிர்த்து பிரச்சாரம் செய்துவந்தனர். ஜனநாயகத்தை அவர்கள் கடுமையாக வெறுத்தார்கள். அது மேற்கத்திய நாடுகளின் இறக்குமதி என்றார்கள். அதே அளவுக்கு சோஷலிசத்தின் மீதும் அவர்களுக்கு வெறுப்பு உண்டு. காரணம் சோஷலிசம் இந்து கலாச்சாரத்துக்கு எதிரானது என்று அவர்கள் உணர்ந்தார்கள். காந்தியாரை ஒரு தலைவராகவே ஏற்றுக் கொள்ளவில்லை.
1965ம் ஆண்டில்தான், மிகவும் சிரமத்தோடு வேறு வழியின்றி தங்களின் அன்றாடப் பிரார்த்தனையில் காந்தியார் பெயரையும் சேர்த்துக் கொண்டனர்."
நாம் மேலே எடுத்துக் காட்டியிருப்பது - மறைந்த சோஷலிஸ்ட் தலைவர் மதுலிமாயி அவர்கள் 'சண்டே' பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியைத்தான்,(10-6-1979 'சண்டே' இதழ்) இந்த பின்னணியில், முதலாவது உலகப் போரைப் பயன்படுத்தி உள்நாட்டில் ஆயுதப்புரட்சி நடத்திட இவர் போட்ட திட்டத்தின் நோக்கத்தை உணர்ந்து கொள்ளமுடியும்.
நன்றி:
விடுதலை இராசேந்திரன் அவர்களின் "ஆர்.எஸ்.எஸ் - ஓர் அபாயம்"
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல தகவல்கள் எம்.ஈ.ஏ.
பிரிட்டீஷாரை எதிர்த்த ஜெர்மானியரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட இதே ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கும்பல், இங்கே பிரிட்டீஷாருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதை அனைவரும் அறிவர். அன்றைய ஆர்.எஸ்.எஸ். வழியையே இன்றைய அத்வானி பயன்படுத்தி, ஜின்னா சனநாயகவாதி என்றும், பாபரி மசூதி விவகாரத்திலும் ஆடிய நாடகங்கள் என்பது தெளிவு. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். கும்பல் விசுவ இந்து பரிசத் போன்று பெரிய அளவில் எதிர்ப்பு எதனையும் வெளிப்படுத்தவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
Post a Comment