Tuesday, April 26, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-9)

இராமனுடைய மனைவிமார்கள்

வால்மீகி இராமாயணத்தை மொழி பெயர்த்தவர்களில் மிகவும் முக்கியமானர் உயர்திரு சீனிவாச அய்யங்கார். அவர் தன்னுடைய மொழி பெயர்ப்பில் இப்படிக் கூறுகின்றார்:

இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் தன்னுடைய காம இன்பத்திற்காக அரசப்பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார். (அயோத்தியா காண்டத்தின் 8ஆவது அத்தியாயம் பக்கம்- 28)

இராமனின் மனைவிமார்கள் என்ற சொல் இராமாயணத்தில் பல பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இராமன் தன் தந்தையை முட்டாள் மடையன் என்று பல நேரங்களில் கேவலமாகப் பேசியுள்ளான். (அயோத்தியா காண்டம் 53-வது அத்தியாயம்)

பெண்கள், குழந்தைகள் பற்றி கடவுள் இராமன்
இராமன் பல பெண்களின் மூக்கு மார்பு, காது ஆகியவற்றை வெட்டி சித்திரவதைப்படுத்தினான். அவர்களை நிரந்தரமாக மானபங்கப்படுத்தினான். எடுத்துக்காட்டாக சூர்பனகை, அய்யம்முகி.

கடவுள் இராமன் சொன்னான்:
"பெண்களை நம்பக்க கூடாது. மனைவியிடம் இரகசியங்களைப் பேசக் கூடாது". (அயோத்தியா காண்டம், அத்தியாயம் 100)

இராமன் சம்புகா என்பவனைக் கொலை செய்தான். காரணம் அவன் தவம் செய்தான். அவன் தவம் செய்வது அவனுக்கு தடை செய்யப்பட்டது. அதற்குக் காரணம் அவன் சூத்திரன். (உத்திர காண்டம், அத்தியாயம் 76)

இராமன் தன் கைகளைப் பார்த்து இப்படிக் கூறினான். வலதுகரமே! இந்தச் சூத்திரனைக் கொன்று விடு. ஏனெனில் இந்தச்சூத்திரனைக் கொல்வது தான் இறந்து போன பிராமண பாலகனை மீட்டுத் தரும்.

சூத்திரன் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் இராமன் "சம்புகா" என்பவனைக் கொன்றான். அந்தச் சூத்திரன் அப்போது செய்த தவறு அவன் தவம் செய்தான்.

இராமனின் மரணம்
இராமன் ஒரு சாதாரண மனிதனைப்போல் ஆற்றில் மூழ்கி அமிழ்ந்தான். இறந்தான் (உத்திர காண்டம், அத்தியாயம் - 106)

கடவுள் என்பவர் இறந்து விடுகின்றார். பாவம், கடவுள் எப்படி இறப்பார்? அவர் இறந்த பின் யார் இந்த உலகை நிர்வகிப்பார்?

எல்லாமே கேலிக் கூத்து. ஏன்? இவை எதுவுமே உண்மையல்ல என்பது தான் உண்மை.

இராமன் கடவுளே இல்லை.

ஒரு கவியின் கற்பனையில் உதித்த காவிய நாயகன்.

காமம் கரைபுரண்டோடும் சீதையும், ஆண்மை குன்றிய இராமனும்.

சீதை இராமனிடம் கூறினாள்: "தன் மனைவியைப் பிறருக்குக் கொடுத்து பிழைக்கும், பெண்களின் பின்னே அலையும் ஓர் மனிதனைவிட நீ எந்த விதத்திலும் உயர்ந்தவன் இல்லை. நீ என்னுடைய விபச்சாரத்தில் இலாபம் அடைய விரும்புகின்றாய்"

இராமனிடம் சீதை இன்னும் சொன்னாள்:

"நீ ஆண்மைக் குன்றியவனாகவும், இங்கிதம் இல்லாதவனாகவும் இருக்கின்றாய். நீ ஒரு வெகுளி"

இராவணனின் மாளிகையில் அடியெடுத்து வைத்ததும் இராவணனின் பால் அவள் அன்பு கொள்ள ஆரம்பித்தாள். (ஆதாரம்: ஆரிய காண்டம், அத்தியாயம் -54)

சீதையின் கற்பைப் பற்றி இராமன் விரிவாக வினவிய போது சீதை மறுத்தாள், மரணித்தாள். (உத்திர காண்டம், அத்தியாயம் - 97)

குருவதி - இராமனிடம் இப்படிச் சொன்னாள்: பெரியவரே! நீங்கள் எப்படி சீதையை உங்களை நீங்கள் நேசிப்பதை விட அதிகமாக நேசிக்கின்றீர்கள்? என்னொடு வாருங்கள் நீங்கள் அவ்வளவு ஆழமாக நேசிக்கும் மனைவியின் மனதில் இருக்கின்றது என்பதைப் பாருங்கள்.

இராவணனை இன்னும் அவளால் மறக்க இயலவில்லை. அவள் தன் கைவிசிறியில் இராவணனின் படத்தை வரைந்து வைத்திருக்கின்றாள். அதைத் தன் மார்போடு அடிக்கடி அணைத்துக் கொள்கின்றாள். அவள் படுக்ககையில் படுத்திருக்கின்றாள். ஆனால் கண்ணை மூடிக் கொண்டு இராவணனின் சிங்காரத்தை நினைத்து சிலிர்த்துக் கிடக்கின்றாள்.

இதனை செவிமடுத்ததும் இராமன் சீதையினிடம் ஓடினான். அங்கே சீதை படுத்திருந்தாள், மார்போடு அணைத்திருந்த கைவிசிறியில் இராவணனின் படம் இருந்தது.

(திருமதி சந்தரவதி என்ற பெண்மணி எழுதிய வங்காள மொழி இராமாயணத்தில் பக்கஙகள் 199, 200 ஆகியவற்றில் காணப்படுகின்றது)

கடவுள் இராமனைப் பற்றி தலைவர்கள் என்ன சொன்னார்கள்?

"என்னுடைய இராமன் இராமாயணத்தில் வருகின்ற இராமனல்ல" - மகாத்மா காந்தி

"இராமாயணம், மகாபாரதம் இவை அரேபிய இரவுகள் என்ற கதைகளே தவிர வேறல்ல" ஜவஹர்லால் நேரு.

"இராமன் கடவுளல்ல. அவன் ஒரு கதாநாயகன்!" -இராஜகோபாலாச்சாரியார்.

"இராமாயணம் தெய்வத்தின் கதை அல்ல. அது ஓர் இலக்கியம்." கலியுக கம்பன் டி.கே.சிதம்பரநாத முதலியார்.

http://www.dalitstan.org/books/awake/index.html

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-8)

ராமா! ராமா!!
பிராமணீயத்தின் குருபக்தி!

பிராமணர்கள் ஏனைய இந்தியர்கள் பின்பற்றிடும் மதங்களையும், மார்க்கங்களையும் விமர்சிக்கின்றார்கள்.

அதே நேரத்தில் தங்களது மதத்தை, அதில் புனிதமாகப் போற்றப்படும் நூல்களை அறிவுக்கண்ணோடு பார்க்க மறுக்கின்றனர்.

அமெரிக்காவைச் சார்ந்த அறிஞர் சார்லஸ் என்பவர் ஹிந்து அல்லது பிராமணர் என்பதை இப்படி விரித்துரைக்கின்றார்.

ஹிந்து என்பதை வரையறுத்துக் கூறிவிடுவது மிகவும் எளிது. ஹிந்து என்பவன் கடவுளின் பெயரால் சொல்லப்படுகின்ற எதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவான். அதன் ஆதாரங்களைப் பற்றியோ உண்மையைப் பற்றியோ ஒரு போதும் கவலைப்பட மாட்டான்.

பிராமணர்கள் சொல்லுகின்றார்கள்:
கடவுள் இராமன அவதாரம் எடுத்து அதாவது மனிதனாகப் பிறந்து பூமிக்கு வந்தான். காரணம் அவன் மனிதர்களின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்து கொள்ள விரும்பினான்.

இராமன் உண்மையிலேயே கடவுளாக இருந்தால் அவன் மனிதர்களின் கஷ்ட-நஷ்டங்களை அவதாரம் எடுக்காமலே அறிந்திட இயலாதா?

கழுதை, பாச்சான், பல்லி இவற்றின் துன்பதுயரங்களை அறிந்திட கடவுள் கழுதையாகவும், பாச்சானாகவும் பல்லியாகவும் அவதாரம் எடுத்துத் தான் வரவேண்டுமா?

தன்னால் படைக்கப்பட்டவைகளின் பரிதாபத்தைப் படைத்தவனால் புரிந்திட இயலாதா?

இந்தக் கடவுள் இராமன் தான் இராமாயணம் என்ற கற்பனைக் காவியத்தின் கதாநாயகன்.

இந்தக் காவியத்தை படைத்தவர் எழுத்தாளர் - கவி வால்மீகி.

இந்தக் காவிய நாயகன் இராமன், தசரன் என்பவரின் மகன். தசரதன் பனாரஸ் என்ற மாநிலத்தின் அரசன்.

கடவுள் இராமனின் தகப்பனார் மன்னன் தசரதனுக்கு மூன்று மனைவிமார்கள்.

கவுசல்யா, கைகேயி, சுமித்ரா என்பவை அவர்களின் பெயர்கள்.

இந்த மூன்று மனைவிமார்களைத தவிர பலநூறு வைப்பாட்டிகளும் இருந்தனர். கடவுள் இராமனின் தந்தை அரசன் தசரதனுக்கு இந்த இராமாயணத்தின்படி கடவுள் இராமன் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை தன்னுடைய மனைவி சீதையைக் காப்பாற்றுவதிலேயே செலவு செய்ய வேண்டியதாயிற்று. தேவி சீதையோ இராவணன் என்ற வீரனிடம் சிக்கிக் கொண்டிருந்தாள்.

மனைவி மாற்றானிடம் மாட்டிக் கொண்டிருக்கும் போது கூட கடவுள் இராமன் எந்தக் குறையுமின்றி வாழ்க்கையை சொட்டு விடாமல் சுவைத்து கொண்டிருந்தான்.

சுக்ரீவனிடம் - கடவுள் இராமன்
கடவுள் இராமன் நாடு துறந்து காடு புகுகின்றான் தன் மனைவியோடு.

சுக்ரீவன் மான் வேடம் பூண்டு தோற்றந் தந்து கடவுள் இராமனை ஏமாற்றி விடுகின்றான்.

கடவுள் இராமனால் சாதாரண சுக்கிரீவன் பூண்டிருந்த மாறுவேடத்தைக் கூட கண்டு கொள்ள இயலவில்லை.

மனைவியை மீட்க மன்றாடிய கடவுள்
இராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கையேந்தி மனைவிப் பிச்சை கேட்டான்.

குரங்குக் கடவுள் ஹனுமான் மனிதக் கடவுள் இராமனின் மனைவியை மீட்டுத்தரும் மகத்தான சாதனையைச் சாதித்திட இசைகின்றான். ஆனால் ஒரு நிபந்தனையை விதிக்கின்றான்.

தான் மனைவியை மீட்டுத்தரும் இந்தச் சாதனையைத் துவங்குமுன் கடவுள் இராமன், குரங்குக் கடவுள் ஹனுமானின் சகோதரனை கொலை செய்திட உதவி செய்திட வேண்டும்.

இப்படி சகோதர கொலையை கைமாறாகக் கேட்கின்றான் ஒரு கடவுள் இன்னொரு கடவுளிடம்.

கடலுக்குக் குறுக்கே பாலங்கட்டி கடலைக் கடந்து தனது சொந்த மனைவியை மீட்க கடவுள் இராமணனுக்கு 12 ஆண்டுகள் ஆயின.

ஆனால் இந்தக் கடவுளின் மனைவியை கடத்தி செல்ல தீயவன் இராவணனுக்கு ஒரே நாள் தான் தேவைப்பட்டது. சொல்லுங்கள் இதில் யார் ஆற்றல் மிக்கவன்?

கடவுள் இராமனா? தீயவன் இராவணனா?


ஹனுமான் மலைகளைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றிடும் ஆற்றல் நிறைந்தவன் எனப் பேசப்படுகின்றது. இது உண்மையானால் அவன் இராமனையே தூக்கிக் கொண்டு லங்காபுரத்திற்குப் பறந்திருக்கலாம். இதன் மூலம் அவர்கள் சீதையை வெகு சீக்கரமாகவே மீட்டிருக்கலாம்.

இந்த 12 ஆண்டுகளாக இராவணன் சீதையை என்னென்ன செய்தான் என்பதை யாரறிவார்கள். ஒரு தீயவன் தீயனவற்றைத் தான் செய்திருப்பான்.

ஹனுமான் இராமனுக்கு உதவி செய்வதற்கு முன்னால் இராமனைக் கொண்டு தனது சசோதரனை கொலை செய்தான். பின்னால் இருந்து அம்பெய்துதான் ஹனுமானின் உடன் பிறப்பை வீழ்த்தினான் இராமன்.

இராமன் உண்மையிலேயே கடவுளாக இருந்தால் இந்த அற்பச் செயலைச் செய்திருப்பானா?

இறைச்சியுண்ட கடவுள் இராமன்
இராமன் வனவாசம் போக வெண்டும் என்ற நிலைவந்த போது இராமன் மெத்த வருத்தத்தோடு தன் தாயாரிடம் சொன்னான்.

"அம்மா நான் இராஜாங்கத்தையும் பரிபாலனத்தையம் இழக்க வெண்டும். மன்னர்களுக்கே உரித்தான எல்லா சுகங்களையும் இழக்க வேண்டும். சுவை மிகுந்த இறைச்சி உணவுகளையும் இழக்க வேண்டும். (அயோத்தியா காண்டம் 20, 26, 94 ஆகிய அத்தியாயங்கள்)

http://www.dalitstan.org/books/awake/index.html

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-7)

மேலை நாடுகளின் நிறவெறிக் கொள்கையும் இந்தியாவின் உயர்ஜாதி பிராமணவாதமும்

இந்தியாவில் 5 %-க்கும் குறைவுதான் பிராமணர்கள். இவர்கள் 95% இநதியக் குடிமக்களை ஆட்சி செய்து வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளயைர்கள் 15% தான். இவர்கள் 85% கறுப்பர்களை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இந்தியா அடிக்கடி நிறவெறிக் கொள்கையை அதாவது கறுப்பர்களை வெள்ளையர்கள் ஆட்சி செய்யும் அநீதியை அடிக்கடி குறை கூறுவதுண்டு.

அதே அநீதியை இந்தியாவில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அவர்களைக் குறைகூற எந்தத் தகுதியுமில்லை. இதை ஏனோ உணர்ந்து கொள்ளத் தவறி விட்டனர்.

ஜனநாயகம், மதச்சார்பிண்மை ஆகியவற்றைப் பற்றி வாய்நிறையப் பேசுகின்றோம்.

அதேபோல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனப் பீற்றிக் கொள்கின்றோம்.

ஆனால் இந்த நாட்டில் பெருமபான்மையாக வாழும் ஒரு சமுதாயத்தை தீண்டத்ககாதவர்களாகவும், பார்க்கத்தகாதவர்களாகவும் ஆக்கி வைத்திருக்கின்றோம்.

உண்மை நிலை இப்படி இருக்க சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் இவற்றைப் பற்றிப் பேசிட நமக்கு என்ன தகுதி இருக்கின்றது?

இந்தியாவின் உண்மையான குடிகளே! இந்த ஆதிக்கவாதிகளை அப்புறப்படுத்த அணி திரளுங்கள்.

மக்கள் தொடர்பு கருவிகள் யார் பிடியில்?

இன்று இந்த நாட்டில் வெளிவரும நாளிதழ்கள், மாத, வார, இதழ்கள் இவற்றில் யார் முழுமையான ஆதிக்கம், செலுத்துகின்றார்கள்? இவற்றில் 81 சதவீதம் பிராமணர்கள் பிடியில் தான்.

இன்று நாட்டில் வெளிவரும செய்திகளை மக்களுக்குச் சொல்லிடும் பத்திரிக்கைகள் இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா இவை அனைத்தும் பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருப்பவை.

இவற்றில் பணியாற்றுபவர்களும் பிராமணர்கள் தாம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் 93 சதவீதம் பிராமணர்கள்.

ஹிந்து 97 சதவீதம் பிராமணர்கள்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா 73 சதவீதம் பிராமணர்கள். இவர்கள் (பிராமணர்கள்) வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் தங்கள் ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டிவிட்டார்கள்.


பணமும் - வளமும் - பிராமணர்களும்
மனுஸ்மிர்தி வித VII 133 இப்படிச் சொல்லுகின்றது. பிராமணர்களை வரிவிதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. அவர்களை அரசுத்துறை செலவில் பராமரிக்க வேண்;டும். சூத்திரர்கள் என்ற கீழ்ஜாதி ஹிந்துக்கள் பற்றி மனுஸ்மிர்தி இப்படிக் கூறுகின்றது. விதி எண்: X - 129-ல், செல்வத்தைச் சேர்த்துக் கொள்வது சூத்திரர்களுக்கு ஆகாது. அவர்களுக்கு அதற்குரிய திறமைகள் இருந்தாலும சரியே! சூத்திரன் செல்வத்தை சேர்த்துக் கொள்வது என்பது பிராமணனுக்கு வேதனையைத் தரும். இன்னும் பிராமணன் பலத்தை பிரயோகித்துச் சூத்திரனுடைய செல்வத்தை அபகரித்துக் கொள்ளலாம்.

பஞ்சவனிஷ் பிரஹமான் 3-1/11 இப்படிக் கூறுகின்றது.

சூத்திரன் செல்வத்தை சேர்த்துக் கொண்டாலும் அவன் எப்போதும் ஓர் அடிமையாகவே இருப்பான். அவனுடைய தலையாய பணி உயர்ஜாதியனரின் கால்களை கழுவுவதாகும்.

துளசிதாஸ் இவர் ஒரு பிராமணன். இவர் தன்னுடைய நூலில் - அதாவது இராமாயணத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்.

சூத்திரன் ஒருவன் கற்றவனாகவும், நல்லொழுக்கமுள்ளவனாகவும் இருந்தாலும் அவனுக்கு எந்த மதிப்புமில்லை.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது எல்லா தொழிற்சாலைகளையும் பிராமணர்களே எடுத்துக் கொண்டார்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் இன்று நாட்டிலுள்ள 60 சதவீதம் தொழில்களின் மேல் ஏகபோக ஆதிக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.

60 சதவிகிதம் ஆலைகளை அடக்கியாளும் இவர்கள் நாட்டின் மொத்த குடிமக்களுடன் 5 சதவீதம் தான் என்பதை மற்க்கலாகாது.

இதேபோல் இந்த 5 சதவிகிதத்தினர் தான் நாட்டின் உயர்பதவிகளில் 60 சதவிகிதம் பதவிகளை வகிக்கின்றனர்.

இதோ இந்தப் புள்ளி விபரத்தைப் பாருங்கள். இந்த இந்தியா இன்றும் யார் கைகளில் சிச்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது என்ற உண்மை புலப்படும்.

1 நாடாளுமன்றத்தின் மக்கள் சபையில் 45%
2 நாடாளுமன்றத்தின் மேல் சiபியல் 36%
3 கவர்னர்கள் - L.G. 50%
4 கவர்னர்களின் செயலாளர்கள். 54%
5 மத்திய அமைச்சரவையின் செயலாளர்கள் 53%
6 மத்திய அமைச்சரவையின் தலைமை செயலாளர்கள் 54%
7 அமைச்சர்களின் தனிச் செயலாளர்கள் 70%
8 நீதிபதிகளின் தனி செயலாளர்கள் 62%
9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் 51%
10 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 56%
11 உயர்நீதிமன்ற நீதிபதிகள் - கூடுதல் நீதிபதிகள் 50%
12 இந்தியாவின் பிரதிநிதிகளாக வெளிநாட்டுத் தூதுவர்கள் 41%
13 பொது நிறுவனங்களில் தலைமை பொறுப்பாளர்கள் (மத்திய அரசின் கீழ் இயங்குபவை) 57%
14 மாநிலை அரசுகளின் கீழ் இயங்கும் அரசின் பொது நிறுவனங்களின் முதன்மைப் பொறுப்பாளர்கள் 82%

ஆதாரம் : Voice of the Weak, Oct, 1989)

ஏனைய நிறுவனங்களில்
வங்கிகள் 57%
விமானத் துறை 61%
IAS அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியாளர் போன்ற பொறுப்பில் இருப்பவர்கள்) 72%
IPS காவல்துறையின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் 61%
வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்கள் 83%
CBI மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள், சுங்கவரி அதிகாரிகள் ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள் 72%

இது தான் இந்த நாட்டில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளின் நிலை.

அரசு இயந்திரத்தை இயக்கிடும் அத்தனை பதவிகளும், அரசு உதவியுடன் நடக்கும் நிறுவனங்களை நிர்வகிக்கும் முக்கியப் பொறுப்புகளும் பிராமணர் கையில் - இப்படி, அரசின் கஜானா முழுவதும் ஒரு சாராருக்கே சம்பளம் சலுகை என்று வழங்கப்பட்டு விடுகின்றது.

இந்த நிலை மாறி வேண்டும். அரசுத் துறையில் கிடைக்கும் வேலை வாய்ப்பு வசதிகள் ஏனைய மக்களுக்கும கிடைத்திட வேண்டும் எனப பரிதுரைப்பதே மண்டல (குழு) கமிஷன் அறிக்கை.

பரிந்துரை

இந்தியாவை முழுமையாகத் தின்று ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும் பிராமண ஏகாதிபத்தியம், இந்த மண்டல் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதில் அத்தனை முட்டுக் கட்டைகளை போட்டு வருகின்றது. இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றுவரை இந்தியாவை பிராமணர்கள் தான் பிரதமர் பதவியிலிருந்து ஆண்டு வருகின்றனர். விபி சிங் மட்டும் தான் இதில் பிராமணர் அல்லாதவர்.

ஹிந்துக்களே, இந்த நிலைமை இன்றே அகற்றிட முன்வராவிட்டால்,

உங்கள் குழந்தைகள், குழந்தைகளின் குழந்தைகள், இப்படி உங்கள் சந்ததியினர் அனைவரும் இந்த ஆரிய வந்தேரிகளால் அடிமைப்படுத்தப்பட்டு விடுவார்கள்.


கல்வி மக்களின் பிறப்புரிமை

இந்திய அரசியல் நிர்ணயச்சட்டம் எல்லோருக்கும் சம வாய்ப்புகள் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினாலும், இன்று வரை உயர்கல்விகள், விஞ்ஞான பொறியியல், மருத்துவக் கல்விகள் ஒரு சாராருக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் மட்டுந்தான் கடவுளின் பெயரால் வேதத்தின் பெயரால் ஒரு இனத்திற்கு கல்வி மறுக்கப்படுகின்றது.

இந்தியாவின் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 100க்கு 30 பேர் தான்.

ஆனால் பிராமணர்கள் மட்டும் 100க்கு 100 பேரும் கல்வி கற்று விடுகின்றனர்.

அரசின் உதவியின் கீழ் அமெரிக்காவிலிருக்கும் அல்லது அமெரிக்காவில் கல்வி கற்கும் டாக்டர்களில் 67 சதம் பேர் பிராமணர்கள்.

இந்தியாவின் செலவில் கல்வி கற்றுத்தேறிய இவர்கள் இந்தியாவில் மருத்துவ உதவி கிடைக்காமல் கதறும் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்து வாழ்வதை விடுத்து அமெரிக்கா முதலான மேலை நாடுகளில் சென்று சம்பாதித்துக் குவிக்கின்றனர்.

சட்டத்தைக் கற்று வழக்கறிஞராக இருப்பவர்கள் 53 சதம் பிராமணர்கள்.

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களில் 51 சதம் பிராமணர்கள்.

இதெல்லாம் எப்படி அவர்களில் சாதிக்க முடிகின்றது. அவர்களிடத்தில் நாம் தான் ஏனைய இனங்களுக்கெல்லாம் எஜமானர்கள் என்ற அகங்காரம் குடி கொண்டிருக்கிறது. எதையும் ஏனைய இனங்கிடமிருந்து அபகரித்துக் கொள்ளும் உரிமை இருக்கின்றது என்பன போன்ற ஆனவங்களின் செயல் வடிவம் தான் மேலே சொன்ன சாதனைகள்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களே! இந்த அநீதிகளுக்கெதிராக போராட வேண்டாமா? நமது எதிர்கால சந்ததிகளை இந்த அடிமைத்தளைகளிலிருந்து விடுவித்திட வேண்டாமா? எனவே உங்கள் நெடுந்தூக்கம் கலைந்து விழிமின்! எழுமின்!!

http://www.dalitstan.org/books/awake/index.html

Wednesday, April 20, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-6)

3. வேதமும் கீழ்ஜாதி மக்களும்

பிராமணர்களைப் பற்றித் தீதாகப் பேசிய சூத்திரனின் நாக்கை அறுத்திட வேண்டும். முதல் மூன்று உயர்ஜாதியனரோடும் தன்னை சமமாக எண்ணும் அளவுக்கு எந்தக் கீழ் ஜாதிக்காரனும் நெஞ்சுரம் கொண்டால் அவனை சவுக்கால் அடிக்க வேண்டும். (அப்பஸ்தம்பா தர்மல் சூத்திரம் : 111-10-26)

வேதம் ஓதுவதை காதால் கேட்டுவிட்டால் ஈயத்தைக் காய்ச்சி அவன் காதுகளில் ஊற்றிடவேண்டும். அவன் வேதத்தை உச்சரித்தால் அவனது நாக்கை அறுத்துத் துண்டாக்கிட வேண்டும். வேத நாதங்களை அவன் உள்ளத்தில் தேக்கி வைத்தால் அவனது உடலைக் கண்ட துண்டங்களாகத் துண்டாடிட வேண்டும். மனுவின் விதி 167-272 கூறுகின்றது.

பிராமண தர்மத்தை சூத்திரன் ஒருவன் கற்றுக் கொள்ளவோ, கற்றுக்கொடுக்கவோ துணிவானேயானால் அரசன் நன்றாக சூடான எண்ணையை அவனுடைய காதுகளிலும், வாயிலும் ஊற்றிட வேண்டும். மனுவின்விதி இன்னும் சொல்கின்றது.

பிராமணன் என்னதான் குரூரமான குற்றத்தைச் செய்தாலும் அவனைத் தண்டிக்க இயலாது.

இப்படி ஒரு அநீதி வேதத்தின் பெயரால் இந்த உலகில் எங்கேயும் இருக்கும் என எதிர்பார்ப்பதற்கில்லை.

காந்தியைக் கொன்றவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுவரும் அநீதிகள் சில சிறுமேற்கோள்கள்!

ஹரிஜனப் பெண்கள் நிர்வாணமாக வீதிகளில் உலாவர வைக்கப்பட்டார்கள். கரண்ட் 6-4-1983

தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்த ஒருவனின் ஆடை பிராமணன் ஒருவனின் ஆடை மீது பட்டுவிட்டது என்பதனால் அந்தத் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்தவன் கடினமாகத் தாக்கப்பட்டான் - டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் 18-11-1984

ஹரிஜனங்கள் குடிக்கத் தண்ணீர் எடுக்கும் கிணற்றில் உயர்ஜாதி ஹிந்துக்கள் இறந்த மிருகங்களையும் மனித மலத்தையும் எறிந்து, ஹரிஜனங்கள் குடிக்கத் தண்ணீர் எடுத்துக் கொள்ள இயலாமல் செய்தார்கள். காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. - டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் 18-11-84

கோயிலில் கடவுளைக் கும்பிட தனக்கும் உரிமை வேண்டும் என்று வேண்டிக் கொண்ட ஒரு ஹரிஜன் வன்மையாகத் தாக்கப்பட்டான். மனித மலம் அவன் வாயிலே திணிக்கப்பட்டது. இது தாத்தூர் என்ற கிராமத்திலே நடந்து (சோராப் தாலூகா). -டெக்கான் ஹெரால்டு நாளிதழ் 5-2-88

வெள்ளத்தால் சூழப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களைப் படகில் ஏற்றிப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். போகும் வழியில் படகில் இருக்கும் பெண்களில் சிலர் ஹரிஜனப் பெண்கள் என்பதைக் கண்டு கொண்டனர். அவர்களைப் படகிலிருந்து தூக்கி தண்ணீரில் எறிந்தனர். -பிளிட்ஸ் 18-3-84

1970ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் நாள் இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் நாடாளுமன்றத்தில் பின்வரும் தகவலைச் சொன்னார்கள். (இது பிராமணர்களின் கணக்கு) கடந்த மூன்று வருடங்களில் 1117 ஹரிஜனங்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் பால்மணம் மாறாத 5 வயது அரிஜனச் சிறுமி தனம், தாகம் தணிக்கப் பள்ளிக் கூடத்தில் தண்ணீர் குடித்ததற்காக உயர்ஜாதி வகுப்பாசிரியரால் தாக்கப்பட்டு கண்பார்வை இழந்ததும் 1995ம் ஆண்டு ஆகஸ்டு திங்களில் தான்.

http://www.dalitstan.org/books/awake/index.html

Tuesday, April 19, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-5)

1. கீழ்ஜாதி ஹிந்துக்களின் பரிதாபம்

தீண்டத்தகாதவர்கள் "ஹிந்துக்கள்" அல்ல - இப்படிப் பறை அறிவிக்கின்றார் பூரி சங்கராச்சாரியார்.

இந்த சங்கராச்சாரியாரைத் தான் இந்த பிராமணர்கள் தங்களுடைய மிகப்பெரிய தலைவராகக் கொண்டாடுகின்றார்கள். (Indian Express Aril 4, 1989)

"மனு" என்ற ஹிந்து தர்ம சாஸ்தரம் கூறுகின்றது.

சூத்திரன் - காகம், தவளை, நாய் இன்னும் இவை போன்ற மிருகங்களைப் போலாவான். இவற்றைப் போல் இவன் ஊனம் உள்ளவன். இவற்றிலுள்ள பலவீனங்கள் அனைத்தும் இவனுக்கு உண்டு.

சூத்திரர்களுடைய சொத்துக்களையும், செலவங்களையும் ஏய்த்துப் பறித்துக் கொள்வது உயர் ஜாதியினருக்கு அனுமதிக்கப்பட்டது.

சூத்திரர்களுக்கு செல்வத்தைச் சேர்த்து வைத்துக் கொள்ளும் உரிமையோ, அடுத்தவர்களைச் சார்ந்து வாழாத ஓர் நிலையை உருவாக்கிக் கொள்ளும் உரிமையோ இல்லை.

வெவ்வேறு ஜாதியினரும் வெவ்வேறு விகிதங்களில் வட்டி கொடுக்க வேண்டும். கீழ்ஜாதியனர் உயர்விகிதத்தில் வட்டி கொடுக்க வேண்டும்.

சூத்திரர்களின் "சாட்சியம்" சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

தங்களை இந்த நாட்டின் நிரந்தர ஆட்சியாளர்களாகவும் அதிகாரிகளாகவும் ஆக்கிக் கொள்ள இந்த நாட்டுக் குடிமக்களை பல்வேறு ஜாதியினர் எனப் பிரித்துப் பலவீனப்படுத்தி விட்டார்கள் ஆரியர்கள் - பிராமணர்கள்.

அண்மையில் அரசு மேற்கொண்ட ஓர் கணிப்பில் இந்தியாவில் 2000 ஜாதிகள் இருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு ஜாதியினரும் தனது ஜாதி தான் உயர்ந்து. ஏனைய ஜாதிகளெல்லாம் கீழானது எனப் பேசிப் பிரிந்து நிற்கின்றனர்.

ஒரு ஜாதியைச் சார்ந்தவன் இன்னொரு ஜாதியைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாட்டான். இரண்டு ஜாதியினர் ஒன்றாய் ஓரிடத்தில் குழுமுவதில்லை.



2. கொத்தடிமைகள்

பிராமணர்களும் - வேதங்களும் சேர்ந்து கொத்தடிமை முறையை இந்தியாவில் ஏற்படுத்தி விட்டார்கள். இந்தியா சுதந்திரமடைந்து ஏறத்தாழ 50 ஆண்டுகளாகியும் இந்தக் கொத்தடிமை முறையிலிருந்து விடுபட இயலவில்லை.

10-5-1987 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் இப்படி ஓர் செய்தியைத் தருகின்றது.

கொத்தடிமைகள் விடுதலை இயக்கத்தின் தலைவர் கூறுகின்றார்:
பீகார் மாநிலத்தின் தென் மாவட்டங்களான சாம்ரான், கோபால் கஞ்ச் போன்றவற்றில் மட்டும் 20000 ஹரிஜன மக்கள் கொத்தடிமைகளாக வாழ்ந்து வருகின்றார்கள்.

நாம் 20-ம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விஞ்ஞானத்துறையில் அரிய பல சாதனைகளை நித்தம் நித்தம் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனாலும் இந்தியாவின் பல பாகங்களில் கீழ் ஜாதியினர் சில தெருக்களில் போகவே இயலாது. இன்னும் சில தெருக்களில் அவர்கள் தங்கள் செருப்புக்களைக் கழற்றித் தலையில் வைத்துக் கொண்டுதான் நடக்க முடியும். இன்னும் பல டீ-கடைகளில் கீழ் ஜாதி ஹிந்துக்களுக்குத் தனி "டப்பாக்கள்" வைக்கப்படிருக்கின்றன.

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த இராஜ கோபாலாச்சாரியார் என்ற இராஜாஜி வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழித்திட ஓர் திட்டத்தைக் கொண்டு வந்தார். அது குலத்தொழில் திட்டம் என்பதாகும். இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு சமுதாயத்தினரும் அதாவது ஒவ்வொரு குலத்தினரும் தங்கள் மூதாதையர்கள் செய்து வந்த தொழில்களை அப்படியே செய்து வரவேண்டும் என்பதாகும்

இந்தத் திட்டத்தை அவர் அறிவித்தாரோ இல்லையோ பிராமணப் பத்திரிக்கைகள் அனைத்தும் ஒன்றாய் இணைந்து இந்தத் திட்டத்தைப் புகழ்ந்து எழுதின.

இந்தக் குலத்தொழில் திட்டத்தின் நோக்கம், கீழ்ஜாதியினர் தங்களது கீழான தொழிலைத் தொடர்ந்து செய்து வர வேண்டும். மேல் ஜாதியினர் தாங்கள் பிடித்து வைத்திருக்கின்ற உயர் பதவிகளில் நிரந்தரமாக அமர்ந்திட வேண்டும் என்பதாகும்.

கீழ்ஜாதியினர் என பிராமணர்கள் முத்திரைக்குத்தி மூடிப்போட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏன் ஏழைகளாகவே இருந்து கொண்டிருக்கின்றார்கள்?

பிராமணர்கள் அவர்களை எந்த நிலையிலும் எந்த வகையிலும் முன்னேறவிடுவதில்லை. அதிகாரம் அனைத்தும் இருக்கும் இரசு பதவிகள் எல்லாம் அவர்களின் கைகளில் இருக்கின்றன.

இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கின்து என்பதை மக்களுக்குச் சொல்லிட வேண்டிய செய்தி நிறுவனங்களான பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி இவை அனைத்தும் அவர்களின் கைகளில் இருக்கினறன. கல்வித்துறை அவர்களின் கைகளிலிருக்கின்றது.

இந்த நாட்டிலே புழங்கும் பணத்தில் பெரும்பகுதி அவர்களின் கைகளிலேயே புழங்குகின்றது. இத்தனையையும் தங்கள் கைகளிலேயே வைத்துக் கொண்டிருக்கும் அவர்கள் விஞ்ஞானிகளாகவும், டாக்டர்களாகவும் ஆகிவிடுகின்றார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

இத்தனை வசதிகளும், வாய்ப்புகளும், நிதிவளங்களும், எந்த சமுதாயத்தின் கைகளிலே இருந்தாலும் அந்தச் சமுதாயம் முன்னேறும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

நிச்சயமாக இன்று அமுக்கப்பட்டவர்களாகவும், நசுக்கப்பட்டவர்களாகவும் இருந்து கொண்டிருக்கும் மக்களிடம் இதே வசதிகள் இருக்கமேயானால் அவர்களும் முன்னேறி இருப்பார்கள். இந்த நாட்டையும் முன்னேற்றி இருப்பார்கள்.

http://www.dalitstan.org/books/awake/index.html

Monday, April 18, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-4)

ஹிந்து தீவிரவாத அமைப்புகள்

1. ராஷ்டிரிய சுயம் சேவக் சங்
டாக்டர் கேசவ் பாலிராம் ஹெக்டேவர், என்ற சித்புரம் சித்பவன் பிராமணர் தான் R.S.S. என்ற இந்த அமைப்பை நிறுவியவர். இன்று இவர்கள் பெரியதொரு சக்தியாக வளர்ந்துவிட்டார்கள். இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பெரிய வேட்டாக மாறிவிட்டார்கள்.

இவர்கள் கொள்கைகள் கோட்பாடுகள் இவைபற்றி நம்மவர்கள் பலர் அறியமாட்டார்கள். இவர்களின் கொள்கைகளுள் சில:

பெண்களை நம்பாதே!

இவர்கள் பெண்களின் வாக்குரிமையை எதிர்கின்றார்கள் - மறுக்கின்றார்கள்.

சித்பவன் பிராமணர்கள் மட்டுமே இந்த அமைப்பின் தலைவர்களாக இயலும். (இவர்களின் கண்கள் நீலநிறமாக இருக்கும். கீழ் சாதியினர் இவர்களை நல்ல பாம்புகள் என அழைப்பார்கள்)

இவர்கள் கம்யூனிசம், சீக்கிய இஸம் - கிறிஸ்தவம் - இஸ்லாம் இவை அனைத்தையும் எதிர்க்கின்றார்கள்.

இவர்களின் மிக முக்கியமான கொள்கை, ஆரியர்கள், பிராமணர்கள் மட்டும் தான் இந்தியாவை ஆட்சி செய்திட வேண்டும்.

இவர்கள் திராவிட இயக்கங்களுக்குப் பகிரங்கமான வைரி.

எல்லாவிதமான ஆட்கொல்லி - தீவிர - வன்முறைப் பயிற்சிகளையும் இந்த அமைப்பினர் தங்கள் அமைப்பைச் சார்ந்தவர்களுக்குத் தருகின்றார்கள்.

உடன்கட்டை ஏறுவதை இவர்கள் ஆதரிக்கின்றார்கள்.

இந்த அமைப்பு சமஸ்கிருதத்தை இந்திய நாட்டின் தேசிய மொழியாக ஆக்கிடத் துடிக்கின்றது.

வதந்திகளைப் பரப்புவதிலும், மக்களைப் பொய் சொல்லித் திருப்புவதிலும் இவர்கள் தனிப்பயிற்சிப் பெறுகின்றார்கள்.



R.S.S.-ன் சாதனைகள்:
மகாத்மா காந்தியைக் கொலை செய்தார்கள்.
(தாயகத் தந்தை அண்ணல் காந்தி அவர்களைக் கொலை செய்ததற்கு R.S.S. காரர்கள் சொல்லும் காரணம்: அவர் பல்வேறு வகுப்பாரிடையேயும் ஒற்றுமையை வளர்த்தார். எல்லா மக்களும் சமம் எனப் போதித்தார். எல்லா மக்களையும் போலத்தான் கீழ் ஜாதி ஹிந்துக்களும் என்பதை வலியுறுத்தினார்).

டாக்டர் அம்பேத்கார் அவர்களுக்கு விஷம் தந்து கொலை செய்ய முயன்றார்கள்

காமராசநாடார் அவர்களைக் கொலை செய்ய முயன்றார்கள்.

கொலை செய்யும் எண்ணத்தோடு கர்பூரி தாகூர் அவர்களைத் தாக்கினார்கள். ஏனெதில் அவர் சவரத் தொழிலாளி சமுதாயத்தைச் சார்ந்தவர்.

அண்மை காலத்தில் இவர்கள் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் இவர்களை தங்கள் இயக்கத்தில் இணைத்துத் தங்களது பொதுக் கொலைத் திட்டத்தை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்கள்.


சிவசேனை
சொல்லுங்கள் - நாங்கள் அனைவரும் ஹிந்துக்கள். இது தான் சிவசேனாவின் தற்போதைய முழக்கம்.

இந்த அமைப்பு இந்தியர்களின் நலனுக்காகவோ இந்தியாவின் நலனுக்காகவோ இயங்குவதல்ல. மாறாக ஹிந்து வெறித்தனத்தின் துறுத்தி.

பால் தாக்ரே என்பவர் தான் இந்த அமைப்பை நிறுவியவர்.

பம்பாயில் வாழும் மலையாளிகள் - தமிழர்கள் - கன்னடத்தவர்கள் ஆகியோரைப் பம்பாயை விட்டு வெளியேற்ற வேண்டும். இதுவே இவர்களின் முதல் கொள்கையாக இருந்தது.

இதில் இவர்களுக்கு அதிக வெற்றி கிடைத்திடவில்லை.

தங்களது நிராதரவற்ற நிலையை மறைத்திடவே இவர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோரை வெறுப்பதைத் தங்கள் கொள்கையாக ஆக்கிக் கொண்டார்கள்.

ஹிந்துக்களே! உங்களை மதித்து வாழும் சகோதர இந்தியர்களாகிய சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இவர்களோடு சண்டை போடுவதற்கு பதிலாக

உங்கள் மீது அடக்குமறைகளைக் கட்டவிழ்த்து விட்டு உங்கள் உரிமைகளைச் சூறையாடும் ஜாதி முறையை எதிர்த்து நீங்கள் ஏன் போராடக் கூடாது?

நாங்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்ற முழக்கத்தை விட்டு, நாங்கள் அனைவரும் இந்தியர்கள் என்று முழங்குங்கள். தலை நிமிர்ந்து நில்லுங்கள்.


PAC: PROVINCIAL ARMED CONSTABULARY
இஃதோர் ஹிந்து காவல்துறை (இவர்கள் R.S.S. சார்புடையவர்கள்) ஆனால் இந்தியக் காவல்துறை என்ற பெயரில் இயங்கி வருகின்றார்கள்.

இந்திய அரசின் சம்பளத்தை அதிகமாகப் பெற்றுவரும் இந்தக் காவல்துறையில் இன்றுவரை ஹிந்துவல்லாத ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை.

பிரபல பத்திரிக்கையாளர் குஷ்வந்த் சிங் ஹிந்துஸ்தான் டைம் என்ற பத்திர்ககையில் இதுபற்றி இப்படி எழுதுகின்றார்.

"மீரட், டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற கலவரங்களின்போது இறந்தவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களே! இவர்கள் அனைவரும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்களே! குறிப்பாக PAC - யின் துப்பாக்கிக் குண்டுகள் தாம் முஸ்லிம்களைப் பிணங்களாக்கின. அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கும் செய்தி நிறுவனங்கள் அப்பட்டமான இந்த உண்மையை சுருட்டி மறைக்கின்றன."

தனியார்கள் நடத்திய விசாரணை ஒன்றில் R.S.S. தலைவர்களில் ஒருவர் தான் (இவர் முன்னாள் காவல்துறை D.I.G.) இந்த மீரட் படுகொலைகளைத் திட்டமிட்டு நிறைவேற்றிக் கொடுத்தார் என்ற உண்மை தெரியவந்நது.

மீரட்டில் நடந்த கூட்டுப் படுகொலை குறித்து Amnesty International உலக மனித உரிமைக் கழகத்தின் அறிக்கையை ராய்ட்டர் செய்தி நிறுவனம் 19-11-11992 -ல் இப்படித் தருகின்றது.

Amnesty International உலக மனித உரிமைக்கழகம் மீரட்டில் தான் நடத்திய விசாரணைக்குப்பின் இப்படி முடிவு செய்துள்ளது. வகுப்புக் கலவரம் நடந்த அன்றும் மறுநாளும் முஸ்லிம்களைக் கொன்று குவித்ததற்கு முழு பொறுப்பும் PAC-ஐயே சாறும். இதற்கான வலுவான ஆணித்தரமான ஆதாரங்கள் இருக்கின்றன. வகுப்புக் கலவரத்தின் போது கைது செய்யப்பட்ட ஐந்து முஸ்லிம்கள் ஜெயிலில் வைத்து இறந்து போனார்கள். இதற்கு, கைது செய்த பிறகு அவர்கள் மீது காவல் துறையினர் கட்டவிழ்த்து விட்ட தாக்குதல் தான் காரணம்.

PACஐ வழிநடத்திய காவல்துறை அதிகாரிகள் (இவர்கள் அத்தனைபேரும் உயர்ஜாதி ஹிந்துக்கள்) முஸ்லிமகளை காவல்துறை ஊர்திகளில் ஏற்றிச் சென்று பின்னர் சுட்டுத் தள்ளினார்கள். பின்னர் பிணங்களை எடுத்துச் சென்று ஆறுகளிலும், குளங்களிலும் வீசினார்கள். இவை அனைத்திற்கும் தெளிவான அத்தாட்சிகள் நேரில் கண்ட சாட்சியங்கள் இருக்கின்றன.

செய்திகளை இருட்டடிப்புச் செய்யும் பிராமணர் செய்தித் துறை

Amnesty International-ன் உலக மனித உரிமைக் கழகத்தின் இந்த அறிக்கையை பிராமணர்களின் செய்தித்துறை முற்றாக இருட்டடிப்புச் செய்துவிட்டது. இந்த அறிக்கையையும் அது அம்பலப்படுத்திய உண்மைகளையும் மேலை நாட்டு செய்தி நிறுவனங்களின் மூலம் தான் தெரிந்திட இயன்றது.


(தொடரும்..)


இந்த புத்தகம் கிடைக்குமிடம்:
அறிவுலகம், 32, 3வது அவின்யூ, அசோக் நகர், சென்னை - 600 083
அச்சிட்டோர்: கலைவாணி அச்சகம், மதுரை 625 020

http://www.dalitstan.org/books/awake/index.html

Sunday, April 17, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-3)

வாசக அன்பர்களே! ஹிந்து மதத்தின் இனிய நண்பர்களே! இந்த இந்திய நாட்டின் குடிகளே!!

இந்த நூலின் மேற்கோள்கள் காட்டப்பட்ட ஆதார நூல்களை கண்டு அவற்றில் இழையோடும் மறுக்கவியலாத அத்தாட்சிகளைக் கண்டு நீங்கள் அதிர்ச்சி அடையப்போகின்றீர்கள். அனைத்தும் பிரமணர்களின் வேத நூல்கள்.

இந்த நூலின் உள்ளடக்கத்தில் இதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள ஆதாரங்களில் ஏதேனும் ஐயங்களிருந்தால் பிராமணர்கள் மறுக்க முன்வரட்டும்! அவர்களைச் சந்திக்க இந்த ஆசிரியர் தயார்.

எழுத்து மூலம் நடக்க வேண்டும் என்றால் அப்படியே நடக்க - நடத்த ஒத்துக் கொள்கின்றோம்.

பிராமணர்கள் என்பவர்கள் யார்?

பிராமணர்கள் என்ற சொல்லில் இந்தியாவிலுள்ள எல்லா உயர்ஜாதி ஹிந்துக்களும் அடங்குவார்கள்.

"பிரம்மா"வின் தலையிலிருந்து பிறந்ததால் அவர்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு பிரஜைகள் என எண்ணுகின்றார்கள்.

பிராமணனை வணங்குவது, வழிபடுவது என்பது இறைவனை வழிபடுவது என்பதாகும் என்று போதிக்கின்றார்கள்.

பிராமணனுக்கு பணிவிடைகள் செய்வது அவனுக்கு காணிக்கைகள் தருவது - இவை இறைவனுக்கு பணிவிடை செய்வது, இறைவனுக்குக் காணிக்கை தருவது என்பதாகும்.

இந்த எண்ணங்கள் தாம் ஏனைய ஹிந்துக்களின் உள்ளங்களில் பதிய வைக்கப்பட்டுள்ளன.

இப்படி அவர்களைச் சிந்தனை அடிமைகளாக ஆக்கிவிட்ட பின்,

5 சதவீதம் பிராமணர்களும் 95 சதம் ஏனைய இந்தியர்களை ஆள்வது என்பது எளிதாகி விட்டது.

இந்தப் பிராமணர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியவிற்குள் ஊடுருவி ஆக்கிரமித்தவர்கள். கைபர் கணவாய் வழியாகத்தான் அவர்கள் தங்கள் ஊடுருவலையும் ஆக்கிரமிப்பையும் அரங்கேற்றினார்கள். மெல்ல மெல்ல இந்த நாட்டின் குடிமக்களை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் ஆதிக்கவாதிகளாகவும் ஆனார்கள்.

பிராமணர்களுக்கிடையே பிளவு:

தென்னிந்தியாவில் பிராமணர்களுக்கிடையேயுள்ள பிளவுகளில் முக்கியமானவை அய்யர் மற்றும் அய்யங்கார் என்பதாகும்.

இந்த இரண்டு பிரிவினரையும் முழுமையாகப் பார்த்தால் - இவர்களுடைய கடவுள்கள் - இவர்களுடைய இலக்கியங்கள் - இவர்களுடைய குடும்பங்கள் - இவர்களுடைய கலாச்சாரங்கள் இவையெல்லாம் வெளிச்சத்திற்கு வரும். இவற்றிற்கெல்லாம் மேலாக இவர்கள் ஆண்டாண்டு காலமாக பதவி, செல்வாக்கு ஆகியவற்றிற்காகத் தங்களுக்குள்ளேயே முட்டி மோதிக் கொண்டு வரும் வரலாறும் அம்பலமாகும்.

அய்யர்கள் - அவர்களின் உடல் அமைப்பால் ஆரிய ஆக்கிரமிப்பாளர்களின் நேரடி வாரிசுகளாவார்கள்.

அவர்கள் நல்ல நிறம் - நீண்ட மூக்கு இவற்றைக் கொண்ட ஜெர்மானியர்களைப் போல் தோற்றந் தருகின்றார்கள்.

மனுஸ்மிர்தி - மனுதர்மம் - அதாவது ஹிந்து மதத்தின் வேதநூல், பிராமணர்களைப் பற்றி இப்படிக் கூறுகின்றது.

அ). பிராமணன் தர்மத்தை நிறைவு செய்வதற்காகப் பிறந்தவன். இந்த உலகில் என்னென்னவெல்லாம் இருக்கின்றனவோ இவை அனைத்தும் ஒரு பிராமணனுக்குச் சொந்தம். அவன் பிறப்பால் அடைந்த உயர்வால் அவன் அத்தனைக்கும் சொந்தக்காரனாகின்றான். இந்த உலகில் இருப்பவை அனைத்தும் பிராமணனின் தயவால் ஜீவித்துக் கொண்டிருக்கின்றன.

ஆ). அறிவற்றவனோ அறிவாளியோ எந்த நிலையிலும் ஓர் பிராமணன் உயர்ந்தவனே!

மூன்று உலகங்களும் அவற்றிலிருக்கும் கடவுள்களும் பிராமணனால் இருந்து கொண்டிருக்கின்றன.

டாக்டர் அம்பேத்கார் அவர்கள் இப்படிக் கூறுகின்றார்கள்:

பிராமணர்களின் கொள்கைகள் ஆறு. அவை:

1. பல்வேறு வகுப்பாருக்கும் இடையே தராதரம் அது நிரந்தரம்.

2. சூத்திரர்களையும் தீண்டத் தகாதவர்களையும் நிராயுதபாணிகளாக ஆக்கிவிடுவது.

3. சூத்திரர்களுக்கும் தீண்டத் தகாதவர்களுக்கும் கல்வியை முற்றாக மறுத்துவிடுவது.

4. சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் அதிகாரங்களை முற்றாகத் தடை செய்துவிடுவது. அல்லது மறுத்துவிடுவது.

5. சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் சொத்து உரிமையை மறுத்துவிடுவது.

6. பெண்களுக்கு அடிப்படை உரிமைகளை மறுத்துவிடுவது. அவர்களை அமுக்கப்பட்டவர்களாகவே வைத்துக் கொண்டிருப்பது.

ஆக ஏற்றத்தாழ்வுகள் பிராமணர்களின் அதிகார பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட, அடிப்படைக் கோட்பாடு மனுஸ்மிர்தி. J.A. Duboils (டுபாயிஸ்) என்பவர் Hindu Manners Customs and Ceremonies என்ற நூலில் (Oxford Third Eidtion 1906, Page 139) ஹிந்து மந்திரம் ஒன்றை இப்படி மொழிபெயர்த்துள்ளார்.

இந்த பிரபஞ்சம் கடவுள்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றது.

கடவுள்கள் மந்திரங்களின் சக்தியின் கீழ் இருக்கின்றார்கள்.

மந்திரங்கள் பிராமணர்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றன.

எனவே பிராமணர்கள் நமது கடவுள்கள் அல்லது கடவுள்களை கைகளில் வைத்துக் கொண்டிருப்பவர்கள்.

(தொடரும்..)

இந்த புத்தகம் கிடைக்குமிடம்:
அறிவுலகம், 32, 3வது அவின்யூ, அசோக் நகர், சென்னை - 600 083
அச்சிட்டோர்: கலைவாணி அச்சகம், மதுரை 625 020

http://www.dalitstan.org/books/awake/index.html

Saturday, April 16, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-2)

முன்னுரை
Dr. சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA)

கண்ணியமிக்க வாசகர்கள் கவனத்திற்கு!

இந்நூலில் இடம்பெற்றுள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை.

ஆதாரங்கள் பட்டியல்கள், நூல்கள், நூல்களின் விபரங்கள் அனைத்து முகவரியுடன் பின்னால் தரப்பட்டுள்ளன.

இந்நூலுக்கு பதிப்புரிமை இல்லை. இதை மொழி பெயர்த்துக் கொள்ளலாம். அச்சிட்டுக் கொள்ளலாம். முன் அனுமதியின்றி விற்பதை செய்து கொள்ளலாம்.

நீங்கள் ஓர் உண்மையான ஹிந்துவாக இருந்தால்..

இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்..

ஏனைய ஹிந்து சகோதரர்களையும் இந்த நூலைப் படிக்கத் தூண்டி - உண்மையை ஊரறியச் செய்யுங்கள்.

இந்த இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.

நீங்கள் இந்தக் கடமையில் தவறுவீர்கள் என்றால் உங்கள குழந்தைகள், உங்கள் குழந்தைகளின் குழந்தைகள், அவர்களின் சந்ததிகள் அத்தனை பேரும் தொடர்ந்து கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

இதை ஆங்கில அறிஞன் எட்மண்ட்பர்க் இப்படிச் சொன்னான்:

"அநீதியைக் கண்ணெதிரே கண்டும் (போராடாமல்) அமைதியாக அமர்ந்திருப்பவர்கள் ஆபத்தானவர்கள்"

தாயகத்தை தற்காக்க வாருங்கள்
நாம், நமது தாய் நாட்டை நேசிக்கின்றோம்! நாம் யாரையும் வெறுப்பதில்லை!

இந்தியர்கள் என்ற அளவில் நாம் நமது தாய் நாட்டை, அதைத் தொற்றிக் கொண்டிருக்கும் - தொடர்ந்து கொண்டிருக்கும் தொல்லைகளிலிருந்து காப்பாற்றுவோம்!

அதன் குடிமக்களுக்கிடையே ஒற்றுமையைப் போற்றி வளர்ப்போம். இவற்றை மனதிற் கொண்டே இந்நூல் எழுதப்பட்டது.

மதம் என்பது என்ன?
மதம் என்பது ஒரு வாழ்க்கைநெறி - நடைமுறை வழக்கம்.

அதன் நோக்கம்:
இந்த உலகிலும் - அடுத்த உலகிலும் வெற்றி!

மதம் என்பது நீதி, அன்பு, மனிதம் - சம உரிமைகள் என்பவற்றின் அடிப்படையில் அமைந்ததாய் இருந்திடல் வேண்டும். மதம் மனிதனின் இயல்புகளோடு பொருந்திப் போக வேண்டும். மனிதர்கள் அனைவரும் இறைவனால் படைக்கப்பட்டவர்களே! இறைவன், தான் படைத்த மனிதர்களுக்கிடையே, வேற்றுமை பாராட்டுவதில்லை. இறைவன், வலியவன், மெலியவனை ஆக்கிரமிப்பதை - அடிமைப்படுத்தி அநியாயம் செய்வதை அனுமதிப்பதில்லை, ஆதரிப்பதில்லை. காரணமின்றி தண்டிக்கப்படுபவர்கள் மீது இறைவன் அனுதாபம் கொள்கிறான். அடுத்தவர்களை மதத்தின் பெயரால் அடிமைப்படுத்துவது - அடிமுட்டாள் ஆக்குவது, ஏய்ப்பது - கொலை பாதகங்களைச் செய்வது - இவற்றின் மூலம் எந்த மனிதனும் இறைவனை அடைந்திட இயலாது.

இந்தியாவில் எராளமான மதங்கள் இருக்கின்றன. ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்கள் ஏனைய மதங்களைப் பின்பற்றுபவர்களையும் - மதங்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

வருந்தத்தக்க அளவில், உயர்ஜாதி பிராமணர்கள், பாமர ஹிந்துக்களின் உள்ளங்களில், ஏனைய மதங்களின் பால் வெறுப்பையும் துவேஷத்தையும் வளர்த்து வருகின்றார்கள்.

இதனால் சுமுகமான வாழ்க்கைக்குப் பெருமளவில் பங்கம் ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் - கிருஸ்துவர்கள் - கீழ்ஜாதி ஹிந்துக்கள் - இவர்களின் இரத்தங்கள் ஆறாக ஓட்டப்படுகின்றன.

கீழ்ஜாதி ஹிந்துக்களின் இரத்தத்தை ஆறாக ஓட்டுபவர்கள் - அவர்களின் பெண்களைக் கற்பழித்து - அவமானப்படுத்தி - அல்லல்களுக்கு உள்ளாக்குபவர்கள் - இந்த உயர்ஜாதி ஆணவ பிராமணர்களே!

இந்தப் பிராமணர்கள் இந்த இனக் கலவரங்களை என்றென்றும் நிரந்தரமாக ஆக்கிக் கொள்ள - அதில் ஆதாயம் தேடிக் கண்டெடுத்த யுக்திதான்:

6000 கிறிஸ்துவ ஆலயங்கள் - (இதில் மண்டைக்காடு - நீலக்கால் ஆகிய இடங்களிலுள்ள கிறிஸ்துவ ஆலயங்களும் அடங்கும்)

3000 பள்ளிவாயில்கள். இவையெல்லாம் ஒரு காலத்தில் கோயில்களாக இருந்தன என்ற பொய்ப்பிரச்சாரம்.

இவர்கள் திட்டமிட்டு அதிவேகமாகப் பரப்பி வரும் இந்தப் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எந்த விதமான வரலாற்று ஆதாரங்களோ - விஞ்ஞான ஆதாரங்களோ இல்லை.

பத்திரிக்கைகளின் எந்தப் பக்கம் பார்த்தாலும் - ஹிந்துக்கள் முஸ்லிம்களைக் கொன்றார்கள் - ஹிந்துக்கள் கீழ் ஜாதியினரைக் கொன்றார்கள் - என்றே செய்திகள். இவைகள் யாரால் - எப்படி நடக்கின்றன என்பதை நீங்கள் எப்போதாவது ஆழ்ந்து கவனித்தது உண்டா?

இவற்றை தூண்டுபவர்களும் - திட்டம் போட்டுத் தருபவர்களும் உயர்ஜாதி பிராமணர்கள் தாம்.

பிரமாணர்கள் இந்த நாட்டின் குடிமக்களது மதங்களை குறை கூறியும் கிண்டல் செய்தும் வருகின்றார்கள். ஆனால் அவர்கள் தங்களின் சொந்த மதத்தை - அதன் விதிமுறைகளை - அதே விமர்சன கண்களோடு பார்க்க மறுக்கின்றார்கள். ஆகவே தான் நாம் இந்த நூலை எழுதிட வேணடிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

விருப்பு வெறுப்பின்றி நாம் ஓர் அறிவுப்பூர்வமான ஆராய்ச்சியை மேற்கொள்வோம்.

இந்த ஆராய்ச்சியில் பிராமணர்கள் வேதம் என்று சொல்லுபவற்றில் என்னென்ன இருக்கின்றன என்பதைக் கண்டறிவோம். அவற்றை உலக மக்களின் பார்வைக்குக் கொண்டு வருவோம்.

அன்புடன் தாயகப் பணியில்
Dr. சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA)

(தொடரும்..)

இந்த புத்தகம் கிடைக்குமிடம்:
அறிவுலகம், 32, 3வது அவின்யூ, அசோக் நகர், சென்னை - 600 083
அச்சிட்டோர்: கலைவாணி அச்சகம், மதுரை 625 020

http://www.dalitstan.org/books/awake/index.html

Friday, April 15, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-1)

பரிந்துரை
(Dr. G. சிரீவத்சா M.A., Ph.d,. London)

"இந்துக்களே! விழிமின்! எழுமின்! என்ற இந்நூலை எல்லா இந்து நண்பர்களுக்கும் பரிந்துரைப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்!

உண்மையை உலகுக்கு உரக்கச் சொல்லியாக வேண்டும். இந்த சீரிய கடமை இந்நூலின் மூலம் நிறைவேறியுள்ளது.

இந்நூலை நடுநிலையோடு படிக்கின்ற அனைவரும் இதில் அமிழ்ந்து கிடக்கின்ற உண்மைகணை அட்டியின்றி ஏற்றுக் கொள்வார்கள்.

நான் ஓர் இந்து! என்னால் இந்நூலை ஆரம்பத்தில் அப்படியே ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

ஆகவே, இந்த நூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள நூல்கள், ஒலி நாடாக்கள், ஒளி நாடக்கள் ஆகியவற்றை நான் நேரே படிக்க வேண்டும் - பார்க்க வேண்டும் என விரும்பினேன். இவற்றையெல்லாம் அதாவது இதில் ஆதாரமாகக் காட்டப்பட்டுள்ள அனைத்தையும் பார்வை இட்ட பிறகே, என்னால் இந்த நூலை ஏற்றுக் கொள்ள இயலும். அதன் பின்னரே இந்த நூலை ஏனைய இந்து நண்பர்களுக்கும் பரிந்துரைப்பது பற்றிச் சிந்திக்க இயலும் என்று கூறினேன். அத்தனை மூல நூல்களையும் ஆதாரங்களையும் கொண்டு வந்து தந்தார்கள்.

படித்தேன் - பார்த்தேன் - அதிர்ந்து போனேன். அதன் பின் இந்த நூலை எல்லோருக்கும் பரிந்துரைப்பது மட்டுமல்ல, எப்படியேனும் படிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

இந்த இந்தியத் திருநாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற இனம் இந்த நாட்டுக்குச் சொல்லொண்ணா துரோகங்களை இழைத்துள்ளது.

இந்த நாட்டைத் தாய் நாடாகக் கொண்ட எந்தக் குடிமகனும் இதைப் பொறுத்துக் கொள்ளவே மாட்டான்.

மக்களுக்குச் செய்திகளைச் சொல்லுகின்ற அத்தனை செய்தி நிறுவனங்களையும் - பத்திரிக்கைகளையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துக்கொண்டு, இவர்கள் இந்தியாவிலுள்ள இளைஞர்களின் உங்ளங்களில் விஷ வித்தை ஊன்றி வளர்த்து வருகின்றார்கள்.

R.S.S-ம் அதன் பரிவார அமைப்புகளும், முழுமையான இராணுவப் பயிற்சியைப் பெற்றிருக்கின்றன.

இவை இந்தியாவிலிருக்கின்ற ஏனைய குடிமக்களைக் கொலை செய்வதையே குறியாகக் கொண்டு திட்டம் தீட்டிச் செயல்படுத்தி வருகின்றன.

தீண்டாமை, இன துவேஷம், ஜாதி அமைப்பு இவை இந்த இந்தியத் திருநாட்டை அழைக்கழித்து அவமானப்படுத்தி வருகின்றன.

ஓர் இனம், கல்விச் செல்வம், அரசியல், செய்தித்துறை ஆகியவற்றில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி நாங்கள் தான் இந்த நாட்டை ஆதிக்கம் - அதிகாரம் செலுத்தத் தகுந்த இனம் என்பதை காட்டி வருகின்றது.

இந்த இனத்தைச் சார்ந்தவர்கள் ஏன் ஆங்கிலேயர்களை வெளியேற்றினார்கள் என்பதை இப்போது தான் நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.

ஹிந்துக்களாகிய நமது வேத நூல்கள என்ற புனித நூல்கள் எதை நமக்குக் கற்றுத் தருகின்றன?

நமக்கு எத்தனை கடவுள்கள்?

வேதங்கள், புனிதங்கள் என்றெல்லாம் போற்றப்படுகின்ற நமது புனித நூல்கள் ஏதேனும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவைகளா? அல்லது அத்தனையும் கற்பனையில் கரைபுரண்டோடிய கட்டுக்கதைகளா?

நமது மனிதக் கடவுள்களான இராமன், சீதை, சிவன், பார்வதி, பிரம்மா, கணேசன், கிருஷ்ணன் அவர்களைப் பற்றி இவை என்ன சொல்லுகின்றன?

இவர்களுடைய கதைகளில் பிரவாகமெடுத்து ஓடும் ஆபாசங்களைச் சகிக்க இயலுமா?

இவற்றைப் படியுங்கள் - அல்லது படிக்கும் போது பக்கத்தில் நின்று கேளுங்கள். பரலோகம் புகுவீர்கள் என்றெல்லாம் போதித்தால் புத்திக்கு பொருத்தமானதாக இருக்கின்றனவா?

நிச்சயமாக என்னால் இவற்றை என்னுடைய தாயாரிடமோ, மகனிடமோ, சகோதரியிடமோ படித்துக் காட்டிட இயலாது.

நிச்சயமாக இதை உங்களாலும் செய்திட இயலாது என்றே நினைக்கின்றேன்.

வெளிநாட்டைச் சார்ந்த ஒருவன் நம்மிடம் லிங்கம், யோனி இவை என்ன? என்று கேட்டால் என்ன சொல்வது? விபூதி, சூரிய வழிபாடு, சிறுநீரைக் குடிக்கப் பரிந்துரைப்பது இவையெல்லாம் நமது அறியாமையின் அடையாளச் சின்னங்கள்.

மதம் என்பது மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள உறவு பற்றியது. அது மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள உறவு பற்றியோ, கீழான நிலைகளைப் பற்றியோ விரித்துரைப்பதில்லை.

இறைவனை அடைவதற்கு சிறந்த வழி நம்மோடு வாழுகின்ற ஏனைய மனிதர்களை அன்போடு நடத்துவது, மதிப்பது, நியாயம் வழங்குவது - சமஉரிமைகளைக் கொடுப்பது என்பவையே!

உலகிலுள்ள பெரும்பாலான மதங்கள் இவற்றையே போதிக்கின்றன.

ஆனால் ஆரியர்களிடமிருந்து அவதாரம் எடுத்த ஹிந்து மதம் இவற்றிற்கு நேர் எதிரானவற்றையே போதிக்கின்றது.

உயர் ஜாதியினராகிய பிராமணர்களிடம் அடுத்தவர்களை அடிமைப்படுத்தவும் - ஏமாற்றவும் பணிக்கின்றது இந்த ஹிந்துமதம்.

ஹிந்து வேதங்கள் - அன்று முதல் இன்று வரை பிராமணர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்துள்ளது. ஏனெனில் 95 சதவீதம் இந்திய குடிமக்களை இவர்கள் தாம் இத்தனை நாட்களாக ஆண்டு வந்திருக்கின்றார்கள்.

நீங்களும் நானும் நமது தாய் நாட்டின் தலையெழுத்தை ஒரே இரவில் மாற்றிட இயலாது. ஆனால் நமது தாய்நாட்டின் மீதுள்ள பற்றை அடிப்படையாகக் கொண்டு தாய்நாட்டைத் தகாதவர்களிடமிருந்து காப்பாற்றியே ஆக வேண்டும். இதற்காக நாம் நம்மால் இயன்ற அனைத்தையும் அவசியம் செய்தாக வேண்டும்.

(தொடரும்..)

http://www.dalitstan.org/books/awake/index.html

இப்புத்தகம் கிடைக்குமிடம்:
அறிவுலகம், 32, 3வது அவின்யூ, அசோக் நகர், சென்னை - 600 083
அச்சிட்டோர்: கலைவாணி அச்சகம், மதுரை 625 020

நியூட்டன்முகி

நியூட்டன் ஏம்ப்பா தற்கொலை பண்ணிக்னான்?
Here is the reason (ensoy)

Once, Newton came to India and watched a few Tamil movies that had his head spinning. He was convinced that all his logic and laws in physics were just a huge pile of junk and apologized for everything he had done.

In the movie of Rajanikanth, Newton was confused to such an extent that he went paranoid. Here are a few sences

1) Rajanikanth has a Brain Tumor which, according to the doctors can't be cured and his death is imminent. In one of the fights, our great Rajanikanth is shot in the head. To everybody's surprise, the bullet passes through his ears taking away the tumor along with it and he is cured! Long Live Rajanikanth!

2) In another movie, Rajanikanth is confronted with 3 gangsters. Rajanikanth has a gun but unfortunately only one bullet and a knife. Guess, what he does? He throws the knife at the middle gangster? & shoots the bullet towards the knife. The knife cuts the bullet into 2 pieces, which kills both the gangsters on each side of the middle gangster & the knife kills the middle one.

3) Rajanikanth is chased by a gangster. Rajanikanth has a revolver but no bullets in it. Guess what he does. Nah? Not even in your remotest imaginations. He waits for the gangster to shoot. As soon as the gangster shoots, Rajanikanth opens the bullet compartment of his revolver and catches the bullet. Then, he closes the bullet compartment and fires his gun. Bang..the gangster dies..

This was too much for our Newton to take! He was completely shaken and decided to go back. But he happened to see another movie for one last time, and thought that at least one movie would follow his theory of physics. The whole movie goes fine and Newton is happy that all in the world hasn't changed. Oops, not so fast!

The 'climax' finally arrives. Rajanikanth gets to know that the villain is on the other side of a very high wall. So high that Rajanikanth can't jump even if he tries like one of those superman techniques that our heroes normally use. Rajanikanth has to desperately kill the villain because it's the climax.

(Newton dada is smiling since it is virtually impossible?)

Rajanikanth suddenly pulls two guns from his pockets. He throws one gun in the air and when the gun has reached above the height of the wall, he uses the second gun and shoots at the trigger of the first gun in air. The first gun fires off and the villain is dead.

Newton Commits Suicide!!!!!!!!!!


மின்னஞ்சலில் அனுப்பித் தந்த நண்பர்களுக்கு நன்றி