Sunday, April 17, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-3)

வாசக அன்பர்களே! ஹிந்து மதத்தின் இனிய நண்பர்களே! இந்த இந்திய நாட்டின் குடிகளே!!

இந்த நூலின் மேற்கோள்கள் காட்டப்பட்ட ஆதார நூல்களை கண்டு அவற்றில் இழையோடும் மறுக்கவியலாத அத்தாட்சிகளைக் கண்டு நீங்கள் அதிர்ச்சி அடையப்போகின்றீர்கள். அனைத்தும் பிரமணர்களின் வேத நூல்கள்.

இந்த நூலின் உள்ளடக்கத்தில் இதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள ஆதாரங்களில் ஏதேனும் ஐயங்களிருந்தால் பிராமணர்கள் மறுக்க முன்வரட்டும்! அவர்களைச் சந்திக்க இந்த ஆசிரியர் தயார்.

எழுத்து மூலம் நடக்க வேண்டும் என்றால் அப்படியே நடக்க - நடத்த ஒத்துக் கொள்கின்றோம்.

பிராமணர்கள் என்பவர்கள் யார்?

பிராமணர்கள் என்ற சொல்லில் இந்தியாவிலுள்ள எல்லா உயர்ஜாதி ஹிந்துக்களும் அடங்குவார்கள்.

"பிரம்மா"வின் தலையிலிருந்து பிறந்ததால் அவர்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு பிரஜைகள் என எண்ணுகின்றார்கள்.

பிராமணனை வணங்குவது, வழிபடுவது என்பது இறைவனை வழிபடுவது என்பதாகும் என்று போதிக்கின்றார்கள்.

பிராமணனுக்கு பணிவிடைகள் செய்வது அவனுக்கு காணிக்கைகள் தருவது - இவை இறைவனுக்கு பணிவிடை செய்வது, இறைவனுக்குக் காணிக்கை தருவது என்பதாகும்.

இந்த எண்ணங்கள் தாம் ஏனைய ஹிந்துக்களின் உள்ளங்களில் பதிய வைக்கப்பட்டுள்ளன.

இப்படி அவர்களைச் சிந்தனை அடிமைகளாக ஆக்கிவிட்ட பின்,

5 சதவீதம் பிராமணர்களும் 95 சதம் ஏனைய இந்தியர்களை ஆள்வது என்பது எளிதாகி விட்டது.

இந்தப் பிராமணர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியவிற்குள் ஊடுருவி ஆக்கிரமித்தவர்கள். கைபர் கணவாய் வழியாகத்தான் அவர்கள் தங்கள் ஊடுருவலையும் ஆக்கிரமிப்பையும் அரங்கேற்றினார்கள். மெல்ல மெல்ல இந்த நாட்டின் குடிமக்களை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் ஆதிக்கவாதிகளாகவும் ஆனார்கள்.

பிராமணர்களுக்கிடையே பிளவு:

தென்னிந்தியாவில் பிராமணர்களுக்கிடையேயுள்ள பிளவுகளில் முக்கியமானவை அய்யர் மற்றும் அய்யங்கார் என்பதாகும்.

இந்த இரண்டு பிரிவினரையும் முழுமையாகப் பார்த்தால் - இவர்களுடைய கடவுள்கள் - இவர்களுடைய இலக்கியங்கள் - இவர்களுடைய குடும்பங்கள் - இவர்களுடைய கலாச்சாரங்கள் இவையெல்லாம் வெளிச்சத்திற்கு வரும். இவற்றிற்கெல்லாம் மேலாக இவர்கள் ஆண்டாண்டு காலமாக பதவி, செல்வாக்கு ஆகியவற்றிற்காகத் தங்களுக்குள்ளேயே முட்டி மோதிக் கொண்டு வரும் வரலாறும் அம்பலமாகும்.

அய்யர்கள் - அவர்களின் உடல் அமைப்பால் ஆரிய ஆக்கிரமிப்பாளர்களின் நேரடி வாரிசுகளாவார்கள்.

அவர்கள் நல்ல நிறம் - நீண்ட மூக்கு இவற்றைக் கொண்ட ஜெர்மானியர்களைப் போல் தோற்றந் தருகின்றார்கள்.

மனுஸ்மிர்தி - மனுதர்மம் - அதாவது ஹிந்து மதத்தின் வேதநூல், பிராமணர்களைப் பற்றி இப்படிக் கூறுகின்றது.

அ). பிராமணன் தர்மத்தை நிறைவு செய்வதற்காகப் பிறந்தவன். இந்த உலகில் என்னென்னவெல்லாம் இருக்கின்றனவோ இவை அனைத்தும் ஒரு பிராமணனுக்குச் சொந்தம். அவன் பிறப்பால் அடைந்த உயர்வால் அவன் அத்தனைக்கும் சொந்தக்காரனாகின்றான். இந்த உலகில் இருப்பவை அனைத்தும் பிராமணனின் தயவால் ஜீவித்துக் கொண்டிருக்கின்றன.

ஆ). அறிவற்றவனோ அறிவாளியோ எந்த நிலையிலும் ஓர் பிராமணன் உயர்ந்தவனே!

மூன்று உலகங்களும் அவற்றிலிருக்கும் கடவுள்களும் பிராமணனால் இருந்து கொண்டிருக்கின்றன.

டாக்டர் அம்பேத்கார் அவர்கள் இப்படிக் கூறுகின்றார்கள்:

பிராமணர்களின் கொள்கைகள் ஆறு. அவை:

1. பல்வேறு வகுப்பாருக்கும் இடையே தராதரம் அது நிரந்தரம்.

2. சூத்திரர்களையும் தீண்டத் தகாதவர்களையும் நிராயுதபாணிகளாக ஆக்கிவிடுவது.

3. சூத்திரர்களுக்கும் தீண்டத் தகாதவர்களுக்கும் கல்வியை முற்றாக மறுத்துவிடுவது.

4. சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் அதிகாரங்களை முற்றாகத் தடை செய்துவிடுவது. அல்லது மறுத்துவிடுவது.

5. சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் சொத்து உரிமையை மறுத்துவிடுவது.

6. பெண்களுக்கு அடிப்படை உரிமைகளை மறுத்துவிடுவது. அவர்களை அமுக்கப்பட்டவர்களாகவே வைத்துக் கொண்டிருப்பது.

ஆக ஏற்றத்தாழ்வுகள் பிராமணர்களின் அதிகார பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட, அடிப்படைக் கோட்பாடு மனுஸ்மிர்தி. J.A. Duboils (டுபாயிஸ்) என்பவர் Hindu Manners Customs and Ceremonies என்ற நூலில் (Oxford Third Eidtion 1906, Page 139) ஹிந்து மந்திரம் ஒன்றை இப்படி மொழிபெயர்த்துள்ளார்.

இந்த பிரபஞ்சம் கடவுள்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றது.

கடவுள்கள் மந்திரங்களின் சக்தியின் கீழ் இருக்கின்றார்கள்.

மந்திரங்கள் பிராமணர்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றன.

எனவே பிராமணர்கள் நமது கடவுள்கள் அல்லது கடவுள்களை கைகளில் வைத்துக் கொண்டிருப்பவர்கள்.

(தொடரும்..)

இந்த புத்தகம் கிடைக்குமிடம்:
அறிவுலகம், 32, 3வது அவின்யூ, அசோக் நகர், சென்னை - 600 083
அச்சிட்டோர்: கலைவாணி அச்சகம், மதுரை 625 020

http://www.dalitstan.org/books/awake/index.html

No comments: