Tuesday, April 19, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-5)

1. கீழ்ஜாதி ஹிந்துக்களின் பரிதாபம்

தீண்டத்தகாதவர்கள் "ஹிந்துக்கள்" அல்ல - இப்படிப் பறை அறிவிக்கின்றார் பூரி சங்கராச்சாரியார்.

இந்த சங்கராச்சாரியாரைத் தான் இந்த பிராமணர்கள் தங்களுடைய மிகப்பெரிய தலைவராகக் கொண்டாடுகின்றார்கள். (Indian Express Aril 4, 1989)

"மனு" என்ற ஹிந்து தர்ம சாஸ்தரம் கூறுகின்றது.

சூத்திரன் - காகம், தவளை, நாய் இன்னும் இவை போன்ற மிருகங்களைப் போலாவான். இவற்றைப் போல் இவன் ஊனம் உள்ளவன். இவற்றிலுள்ள பலவீனங்கள் அனைத்தும் இவனுக்கு உண்டு.

சூத்திரர்களுடைய சொத்துக்களையும், செலவங்களையும் ஏய்த்துப் பறித்துக் கொள்வது உயர் ஜாதியினருக்கு அனுமதிக்கப்பட்டது.

சூத்திரர்களுக்கு செல்வத்தைச் சேர்த்து வைத்துக் கொள்ளும் உரிமையோ, அடுத்தவர்களைச் சார்ந்து வாழாத ஓர் நிலையை உருவாக்கிக் கொள்ளும் உரிமையோ இல்லை.

வெவ்வேறு ஜாதியினரும் வெவ்வேறு விகிதங்களில் வட்டி கொடுக்க வேண்டும். கீழ்ஜாதியனர் உயர்விகிதத்தில் வட்டி கொடுக்க வேண்டும்.

சூத்திரர்களின் "சாட்சியம்" சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

தங்களை இந்த நாட்டின் நிரந்தர ஆட்சியாளர்களாகவும் அதிகாரிகளாகவும் ஆக்கிக் கொள்ள இந்த நாட்டுக் குடிமக்களை பல்வேறு ஜாதியினர் எனப் பிரித்துப் பலவீனப்படுத்தி விட்டார்கள் ஆரியர்கள் - பிராமணர்கள்.

அண்மையில் அரசு மேற்கொண்ட ஓர் கணிப்பில் இந்தியாவில் 2000 ஜாதிகள் இருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு ஜாதியினரும் தனது ஜாதி தான் உயர்ந்து. ஏனைய ஜாதிகளெல்லாம் கீழானது எனப் பேசிப் பிரிந்து நிற்கின்றனர்.

ஒரு ஜாதியைச் சார்ந்தவன் இன்னொரு ஜாதியைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாட்டான். இரண்டு ஜாதியினர் ஒன்றாய் ஓரிடத்தில் குழுமுவதில்லை.



2. கொத்தடிமைகள்

பிராமணர்களும் - வேதங்களும் சேர்ந்து கொத்தடிமை முறையை இந்தியாவில் ஏற்படுத்தி விட்டார்கள். இந்தியா சுதந்திரமடைந்து ஏறத்தாழ 50 ஆண்டுகளாகியும் இந்தக் கொத்தடிமை முறையிலிருந்து விடுபட இயலவில்லை.

10-5-1987 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் இப்படி ஓர் செய்தியைத் தருகின்றது.

கொத்தடிமைகள் விடுதலை இயக்கத்தின் தலைவர் கூறுகின்றார்:
பீகார் மாநிலத்தின் தென் மாவட்டங்களான சாம்ரான், கோபால் கஞ்ச் போன்றவற்றில் மட்டும் 20000 ஹரிஜன மக்கள் கொத்தடிமைகளாக வாழ்ந்து வருகின்றார்கள்.

நாம் 20-ம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விஞ்ஞானத்துறையில் அரிய பல சாதனைகளை நித்தம் நித்தம் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனாலும் இந்தியாவின் பல பாகங்களில் கீழ் ஜாதியினர் சில தெருக்களில் போகவே இயலாது. இன்னும் சில தெருக்களில் அவர்கள் தங்கள் செருப்புக்களைக் கழற்றித் தலையில் வைத்துக் கொண்டுதான் நடக்க முடியும். இன்னும் பல டீ-கடைகளில் கீழ் ஜாதி ஹிந்துக்களுக்குத் தனி "டப்பாக்கள்" வைக்கப்படிருக்கின்றன.

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த இராஜ கோபாலாச்சாரியார் என்ற இராஜாஜி வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழித்திட ஓர் திட்டத்தைக் கொண்டு வந்தார். அது குலத்தொழில் திட்டம் என்பதாகும். இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு சமுதாயத்தினரும் அதாவது ஒவ்வொரு குலத்தினரும் தங்கள் மூதாதையர்கள் செய்து வந்த தொழில்களை அப்படியே செய்து வரவேண்டும் என்பதாகும்

இந்தத் திட்டத்தை அவர் அறிவித்தாரோ இல்லையோ பிராமணப் பத்திரிக்கைகள் அனைத்தும் ஒன்றாய் இணைந்து இந்தத் திட்டத்தைப் புகழ்ந்து எழுதின.

இந்தக் குலத்தொழில் திட்டத்தின் நோக்கம், கீழ்ஜாதியினர் தங்களது கீழான தொழிலைத் தொடர்ந்து செய்து வர வேண்டும். மேல் ஜாதியினர் தாங்கள் பிடித்து வைத்திருக்கின்ற உயர் பதவிகளில் நிரந்தரமாக அமர்ந்திட வேண்டும் என்பதாகும்.

கீழ்ஜாதியினர் என பிராமணர்கள் முத்திரைக்குத்தி மூடிப்போட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏன் ஏழைகளாகவே இருந்து கொண்டிருக்கின்றார்கள்?

பிராமணர்கள் அவர்களை எந்த நிலையிலும் எந்த வகையிலும் முன்னேறவிடுவதில்லை. அதிகாரம் அனைத்தும் இருக்கும் இரசு பதவிகள் எல்லாம் அவர்களின் கைகளில் இருக்கின்றன.

இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கின்து என்பதை மக்களுக்குச் சொல்லிட வேண்டிய செய்தி நிறுவனங்களான பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி இவை அனைத்தும் அவர்களின் கைகளில் இருக்கினறன. கல்வித்துறை அவர்களின் கைகளிலிருக்கின்றது.

இந்த நாட்டிலே புழங்கும் பணத்தில் பெரும்பகுதி அவர்களின் கைகளிலேயே புழங்குகின்றது. இத்தனையையும் தங்கள் கைகளிலேயே வைத்துக் கொண்டிருக்கும் அவர்கள் விஞ்ஞானிகளாகவும், டாக்டர்களாகவும் ஆகிவிடுகின்றார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

இத்தனை வசதிகளும், வாய்ப்புகளும், நிதிவளங்களும், எந்த சமுதாயத்தின் கைகளிலே இருந்தாலும் அந்தச் சமுதாயம் முன்னேறும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

நிச்சயமாக இன்று அமுக்கப்பட்டவர்களாகவும், நசுக்கப்பட்டவர்களாகவும் இருந்து கொண்டிருக்கும் மக்களிடம் இதே வசதிகள் இருக்கமேயானால் அவர்களும் முன்னேறி இருப்பார்கள். இந்த நாட்டையும் முன்னேற்றி இருப்பார்கள்.

http://www.dalitstan.org/books/awake/index.html

No comments: