ராமா! ராமா!!
பிராமணீயத்தின் குருபக்தி!
பிராமணர்கள் ஏனைய இந்தியர்கள் பின்பற்றிடும் மதங்களையும், மார்க்கங்களையும் விமர்சிக்கின்றார்கள்.
அதே நேரத்தில் தங்களது மதத்தை, அதில் புனிதமாகப் போற்றப்படும் நூல்களை அறிவுக்கண்ணோடு பார்க்க மறுக்கின்றனர்.
அமெரிக்காவைச் சார்ந்த அறிஞர் சார்லஸ் என்பவர் ஹிந்து அல்லது பிராமணர் என்பதை இப்படி விரித்துரைக்கின்றார்.
ஹிந்து என்பதை வரையறுத்துக் கூறிவிடுவது மிகவும் எளிது. ஹிந்து என்பவன் கடவுளின் பெயரால் சொல்லப்படுகின்ற எதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவான். அதன் ஆதாரங்களைப் பற்றியோ உண்மையைப் பற்றியோ ஒரு போதும் கவலைப்பட மாட்டான்.
பிராமணர்கள் சொல்லுகின்றார்கள்:
கடவுள் இராமன அவதாரம் எடுத்து அதாவது மனிதனாகப் பிறந்து பூமிக்கு வந்தான். காரணம் அவன் மனிதர்களின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்து கொள்ள விரும்பினான்.
இராமன் உண்மையிலேயே கடவுளாக இருந்தால் அவன் மனிதர்களின் கஷ்ட-நஷ்டங்களை அவதாரம் எடுக்காமலே அறிந்திட இயலாதா?
கழுதை, பாச்சான், பல்லி இவற்றின் துன்பதுயரங்களை அறிந்திட கடவுள் கழுதையாகவும், பாச்சானாகவும் பல்லியாகவும் அவதாரம் எடுத்துத் தான் வரவேண்டுமா?
தன்னால் படைக்கப்பட்டவைகளின் பரிதாபத்தைப் படைத்தவனால் புரிந்திட இயலாதா?
இந்தக் கடவுள் இராமன் தான் இராமாயணம் என்ற கற்பனைக் காவியத்தின் கதாநாயகன்.
இந்தக் காவியத்தை படைத்தவர் எழுத்தாளர் - கவி வால்மீகி.
இந்தக் காவிய நாயகன் இராமன், தசரன் என்பவரின் மகன். தசரதன் பனாரஸ் என்ற மாநிலத்தின் அரசன்.
கடவுள் இராமனின் தகப்பனார் மன்னன் தசரதனுக்கு மூன்று மனைவிமார்கள்.
கவுசல்யா, கைகேயி, சுமித்ரா என்பவை அவர்களின் பெயர்கள்.
இந்த மூன்று மனைவிமார்களைத தவிர பலநூறு வைப்பாட்டிகளும் இருந்தனர். கடவுள் இராமனின் தந்தை அரசன் தசரதனுக்கு இந்த இராமாயணத்தின்படி கடவுள் இராமன் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை தன்னுடைய மனைவி சீதையைக் காப்பாற்றுவதிலேயே செலவு செய்ய வேண்டியதாயிற்று. தேவி சீதையோ இராவணன் என்ற வீரனிடம் சிக்கிக் கொண்டிருந்தாள்.
மனைவி மாற்றானிடம் மாட்டிக் கொண்டிருக்கும் போது கூட கடவுள் இராமன் எந்தக் குறையுமின்றி வாழ்க்கையை சொட்டு விடாமல் சுவைத்து கொண்டிருந்தான்.
சுக்ரீவனிடம் - கடவுள் இராமன்
கடவுள் இராமன் நாடு துறந்து காடு புகுகின்றான் தன் மனைவியோடு.
சுக்ரீவன் மான் வேடம் பூண்டு தோற்றந் தந்து கடவுள் இராமனை ஏமாற்றி விடுகின்றான்.
கடவுள் இராமனால் சாதாரண சுக்கிரீவன் பூண்டிருந்த மாறுவேடத்தைக் கூட கண்டு கொள்ள இயலவில்லை.
மனைவியை மீட்க மன்றாடிய கடவுள்
இராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கையேந்தி மனைவிப் பிச்சை கேட்டான்.
குரங்குக் கடவுள் ஹனுமான் மனிதக் கடவுள் இராமனின் மனைவியை மீட்டுத்தரும் மகத்தான சாதனையைச் சாதித்திட இசைகின்றான். ஆனால் ஒரு நிபந்தனையை விதிக்கின்றான்.
தான் மனைவியை மீட்டுத்தரும் இந்தச் சாதனையைத் துவங்குமுன் கடவுள் இராமன், குரங்குக் கடவுள் ஹனுமானின் சகோதரனை கொலை செய்திட உதவி செய்திட வேண்டும்.
இப்படி சகோதர கொலையை கைமாறாகக் கேட்கின்றான் ஒரு கடவுள் இன்னொரு கடவுளிடம்.
கடலுக்குக் குறுக்கே பாலங்கட்டி கடலைக் கடந்து தனது சொந்த மனைவியை மீட்க கடவுள் இராமணனுக்கு 12 ஆண்டுகள் ஆயின.
ஆனால் இந்தக் கடவுளின் மனைவியை கடத்தி செல்ல தீயவன் இராவணனுக்கு ஒரே நாள் தான் தேவைப்பட்டது. சொல்லுங்கள் இதில் யார் ஆற்றல் மிக்கவன்?
கடவுள் இராமனா? தீயவன் இராவணனா?
ஹனுமான் மலைகளைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றிடும் ஆற்றல் நிறைந்தவன் எனப் பேசப்படுகின்றது. இது உண்மையானால் அவன் இராமனையே தூக்கிக் கொண்டு லங்காபுரத்திற்குப் பறந்திருக்கலாம். இதன் மூலம் அவர்கள் சீதையை வெகு சீக்கரமாகவே மீட்டிருக்கலாம்.
இந்த 12 ஆண்டுகளாக இராவணன் சீதையை என்னென்ன செய்தான் என்பதை யாரறிவார்கள். ஒரு தீயவன் தீயனவற்றைத் தான் செய்திருப்பான்.
ஹனுமான் இராமனுக்கு உதவி செய்வதற்கு முன்னால் இராமனைக் கொண்டு தனது சசோதரனை கொலை செய்தான். பின்னால் இருந்து அம்பெய்துதான் ஹனுமானின் உடன் பிறப்பை வீழ்த்தினான் இராமன்.
இராமன் உண்மையிலேயே கடவுளாக இருந்தால் இந்த அற்பச் செயலைச் செய்திருப்பானா?
இறைச்சியுண்ட கடவுள் இராமன்
இராமன் வனவாசம் போக வெண்டும் என்ற நிலைவந்த போது இராமன் மெத்த வருத்தத்தோடு தன் தாயாரிடம் சொன்னான்.
"அம்மா நான் இராஜாங்கத்தையும் பரிபாலனத்தையம் இழக்க வெண்டும். மன்னர்களுக்கே உரித்தான எல்லா சுகங்களையும் இழக்க வேண்டும். சுவை மிகுந்த இறைச்சி உணவுகளையும் இழக்க வேண்டும். (அயோத்தியா காண்டம் 20, 26, 94 ஆகிய அத்தியாயங்கள்)
http://www.dalitstan.org/books/awake/index.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment