Tuesday, April 26, 2005

இந்துக்களே! விழிமின்! எழுமின்!! (தொடர்-9)

இராமனுடைய மனைவிமார்கள்

வால்மீகி இராமாயணத்தை மொழி பெயர்த்தவர்களில் மிகவும் முக்கியமானர் உயர்திரு சீனிவாச அய்யங்கார். அவர் தன்னுடைய மொழி பெயர்ப்பில் இப்படிக் கூறுகின்றார்:

இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் தன்னுடைய காம இன்பத்திற்காக அரசப்பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார். (அயோத்தியா காண்டத்தின் 8ஆவது அத்தியாயம் பக்கம்- 28)

இராமனின் மனைவிமார்கள் என்ற சொல் இராமாயணத்தில் பல பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இராமன் தன் தந்தையை முட்டாள் மடையன் என்று பல நேரங்களில் கேவலமாகப் பேசியுள்ளான். (அயோத்தியா காண்டம் 53-வது அத்தியாயம்)

பெண்கள், குழந்தைகள் பற்றி கடவுள் இராமன்
இராமன் பல பெண்களின் மூக்கு மார்பு, காது ஆகியவற்றை வெட்டி சித்திரவதைப்படுத்தினான். அவர்களை நிரந்தரமாக மானபங்கப்படுத்தினான். எடுத்துக்காட்டாக சூர்பனகை, அய்யம்முகி.

கடவுள் இராமன் சொன்னான்:
"பெண்களை நம்பக்க கூடாது. மனைவியிடம் இரகசியங்களைப் பேசக் கூடாது". (அயோத்தியா காண்டம், அத்தியாயம் 100)

இராமன் சம்புகா என்பவனைக் கொலை செய்தான். காரணம் அவன் தவம் செய்தான். அவன் தவம் செய்வது அவனுக்கு தடை செய்யப்பட்டது. அதற்குக் காரணம் அவன் சூத்திரன். (உத்திர காண்டம், அத்தியாயம் 76)

இராமன் தன் கைகளைப் பார்த்து இப்படிக் கூறினான். வலதுகரமே! இந்தச் சூத்திரனைக் கொன்று விடு. ஏனெனில் இந்தச்சூத்திரனைக் கொல்வது தான் இறந்து போன பிராமண பாலகனை மீட்டுத் தரும்.

சூத்திரன் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் இராமன் "சம்புகா" என்பவனைக் கொன்றான். அந்தச் சூத்திரன் அப்போது செய்த தவறு அவன் தவம் செய்தான்.

இராமனின் மரணம்
இராமன் ஒரு சாதாரண மனிதனைப்போல் ஆற்றில் மூழ்கி அமிழ்ந்தான். இறந்தான் (உத்திர காண்டம், அத்தியாயம் - 106)

கடவுள் என்பவர் இறந்து விடுகின்றார். பாவம், கடவுள் எப்படி இறப்பார்? அவர் இறந்த பின் யார் இந்த உலகை நிர்வகிப்பார்?

எல்லாமே கேலிக் கூத்து. ஏன்? இவை எதுவுமே உண்மையல்ல என்பது தான் உண்மை.

இராமன் கடவுளே இல்லை.

ஒரு கவியின் கற்பனையில் உதித்த காவிய நாயகன்.

காமம் கரைபுரண்டோடும் சீதையும், ஆண்மை குன்றிய இராமனும்.

சீதை இராமனிடம் கூறினாள்: "தன் மனைவியைப் பிறருக்குக் கொடுத்து பிழைக்கும், பெண்களின் பின்னே அலையும் ஓர் மனிதனைவிட நீ எந்த விதத்திலும் உயர்ந்தவன் இல்லை. நீ என்னுடைய விபச்சாரத்தில் இலாபம் அடைய விரும்புகின்றாய்"

இராமனிடம் சீதை இன்னும் சொன்னாள்:

"நீ ஆண்மைக் குன்றியவனாகவும், இங்கிதம் இல்லாதவனாகவும் இருக்கின்றாய். நீ ஒரு வெகுளி"

இராவணனின் மாளிகையில் அடியெடுத்து வைத்ததும் இராவணனின் பால் அவள் அன்பு கொள்ள ஆரம்பித்தாள். (ஆதாரம்: ஆரிய காண்டம், அத்தியாயம் -54)

சீதையின் கற்பைப் பற்றி இராமன் விரிவாக வினவிய போது சீதை மறுத்தாள், மரணித்தாள். (உத்திர காண்டம், அத்தியாயம் - 97)

குருவதி - இராமனிடம் இப்படிச் சொன்னாள்: பெரியவரே! நீங்கள் எப்படி சீதையை உங்களை நீங்கள் நேசிப்பதை விட அதிகமாக நேசிக்கின்றீர்கள்? என்னொடு வாருங்கள் நீங்கள் அவ்வளவு ஆழமாக நேசிக்கும் மனைவியின் மனதில் இருக்கின்றது என்பதைப் பாருங்கள்.

இராவணனை இன்னும் அவளால் மறக்க இயலவில்லை. அவள் தன் கைவிசிறியில் இராவணனின் படத்தை வரைந்து வைத்திருக்கின்றாள். அதைத் தன் மார்போடு அடிக்கடி அணைத்துக் கொள்கின்றாள். அவள் படுக்ககையில் படுத்திருக்கின்றாள். ஆனால் கண்ணை மூடிக் கொண்டு இராவணனின் சிங்காரத்தை நினைத்து சிலிர்த்துக் கிடக்கின்றாள்.

இதனை செவிமடுத்ததும் இராமன் சீதையினிடம் ஓடினான். அங்கே சீதை படுத்திருந்தாள், மார்போடு அணைத்திருந்த கைவிசிறியில் இராவணனின் படம் இருந்தது.

(திருமதி சந்தரவதி என்ற பெண்மணி எழுதிய வங்காள மொழி இராமாயணத்தில் பக்கஙகள் 199, 200 ஆகியவற்றில் காணப்படுகின்றது)

கடவுள் இராமனைப் பற்றி தலைவர்கள் என்ன சொன்னார்கள்?

"என்னுடைய இராமன் இராமாயணத்தில் வருகின்ற இராமனல்ல" - மகாத்மா காந்தி

"இராமாயணம், மகாபாரதம் இவை அரேபிய இரவுகள் என்ற கதைகளே தவிர வேறல்ல" ஜவஹர்லால் நேரு.

"இராமன் கடவுளல்ல. அவன் ஒரு கதாநாயகன்!" -இராஜகோபாலாச்சாரியார்.

"இராமாயணம் தெய்வத்தின் கதை அல்ல. அது ஓர் இலக்கியம்." கலியுக கம்பன் டி.கே.சிதம்பரநாத முதலியார்.

http://www.dalitstan.org/books/awake/index.html

No comments: