Friday, December 17, 2004

ஆர்.எஸ்.எஸ்-வுடைய வலைவீச்சு தந்திரம்

இப்படி ஹிட்லர், முசோலினியின் நாசிச, பாசிசப் படைகளோடு - ஆர்.எஸ்.எஸ்ஸை ஒப்பிட்டுக் கருத்துக் கூறிய காந்தியரை தங்களின் ஆதரவாளர் போல் சித்தரித்துக் காட்டிய பொய்யர்களின் கூடாரம்தான் ஆர்.எஸ்.எஸ்.!


http://kirukku.blogspot.com/2004/12/blog-post_08.html

தொடர்....2

"Mahatma Ganthi the last phase" என்ற காந்தியாரின் சுயசரிதையை அவரது உதவியாளர் பியாரிலாஸ் (pharilal) எழுதியிருக்கிறார். அந்த நூலின் 440வது பக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பற்றி காந்தியார் சொன்ன மேற்கண்ட கருத்துக்கள் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் அரசியல் அமைப்பாக முன்னால் ஜனசங்கமான, இந்நாள் பாரதீய ஜனதா கட்சி 1982 ஏப்ரல் 14ஆம் தேதி அய்தராபாத் நகரத்திலே ஒரு ஊர்வலம் நடத்தியது: அது என்ன ஊர்வலம் தெரியுமா?

டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி -சமூக சமத்துவ நாள் என்ற பெயரில் அவர்கள் ஊர்வலம் நடத்தினார்கள்.

குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து - ரத்த ஆறை ஓடவிட்ட அதே கூட்டம் தான் வெட்கம் இல்லாமல் அம்பேத்கார் பிறந்த நாள் ஊர்வலம் எடுத்து தாழ்த்தப்பட்டோர்களுக்கு வலைவீச்சு நடத்தத் திட்டமிட்டது.

பார்ப்பனீயத்தையும் இந்து ராஷ்டிரத்தையும் ஆழக்குழிதோண்டி புதைக்க வேண்டும் என்று அறை கூவல்விடுத்த அந்த மாமேதைக்கு அறிவு நாணயமற்ற இந்த வெட்கம் கெட்டவர்கள் ஊர்வலம் எடுப்பதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது.

1992ல் இவர்கள் அயோத்தியில் பாபர்மசூதியை இடிப்பதற்கு தேர்ந்தெடுத்த நாளே-டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதிதான்.

இந்துமதத்திலிருந்து தனது பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை விடுவித்துக் கொண்டு புத்த மார்க்கத்திலே இணைந்தவர் டாக்டர் அம்பேத்கர் என்பது இவர்களுக்குத் தெரியாதது அல்ல. ஆனாலும்-நாட்டிலே மற்ற மதத்தவர்களோடு மோதி, உயிர்பலியாவதற்கு தாழ்த்தப்பட்ட தோழர்களின் படை அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்ற ஒரே காரணத்தால் அந்தக் கூட்டம் இத்தகைய நாடகங்களை நடத்துகிறது.

No comments: