Sunday, December 26, 2004

அமைப்பின் நடவடிக்கைகள் தேச விரோதமானவை

(தொடர்...4)

ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோர் கூட, அவரிடம் இவர்கள் எத்தனையோ கருணை விண்ணப்பங்களைப் போட்டுப் பார்த்தார்கள்!

1948ம் ஆண்டு அப்போது ஆர்.எஸ்.எஸ்.தடை செய்யப்பட்டிருந்த நேரம். பிரதமர் ஜவஹர்லால் நேருவை நேரில் சந்தித்து எதைச் சொல்லியாவது தடையை நீக்கிடவேண்டும் என்று எத்தனையோ தீவிர முயற்சிகளில் முயன்று பார்த்தார்.

அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கர், என்னை சந்திக்க முயற்சிப்பதில் பயனே இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்து தானே கையெழுத்திட்ட ஒரு கடிதத்தையும் நேரு அனுப்பினார்.

இந்தக் கடிதத்தில் இருந்த வாசகங்கள் இது தான் "கடந்த ஆண்டு இறுதியில், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஆர்.எஸ்.எஸ்.நடவடிக்கைகள் பற்றி, ஏராளமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. நீங்கள் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருக்கிற சமாதானங்கள் அதற்கு சரியான பதில் ஆக முடியாது. நீங்கள் உங்கள் கொள்கையாக எதையெல்லாம் அறிவித்திருக்கிறீர்களோ, அதற்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. இந்திய பாராளுமன்றத்தின் கொள்கையையும் அமைய இருக்கும் அரசியல் சட்டத்தையும் எதிர்ப்பது தான் உங்கள் உண்மையான கொள்கை எங்களுக்குக் கிடைத்ததகவலின்படி, உங்கள் அமைப்பின் நடவடிக்கைகள் தேச விரோதமானவை, சூழ்ச்சியானவை, வன்முறையானவை. இதற்கு எதிராக நீங்கள் தரும் உறுதியை மட்டும் நான் நம்பிவிட முடியாது.

இவ்வாறு முகத்தில் அறைந்தது போல் பதில் எழுதினார் பண்டிதர் நேரு!

அதற்குப்பிறகும் அரசாங்கத்திடம் மன்றாடினவர்கள் கலாச்சார அமைப்பாகவே செயல்படுவோம் என்று உறுதிகூறி புதிய சட்ட விதிகளை ஏற்படுத்திக் கொள்வதாகவும் எழுதிக்கொடுத்தனர். அதற்குப் பிறகு 1949ம் ஆண்டு ஜுலை 11ம் தேதி தடை நீக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் போக்கில் ஏதாவது மாற்றம் இருந்ததா என்றால் இல்லை! அவர்களின் கலவரங்கள் தொடர்ந்து நீடிக்கத்தான் செய்தன. அதைத் தொடர்ந்து அவசரநிலை காலத்தில் 1974ம் ஆண்டு மீண்டும் ஆர்.எஸ்.எஸ்.தடைசெய்யப்பட்டது. ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்தத் தடை நீங்கியது.

ஜனதா கட்சி ஆட்சி பீடம் ஏறியவுடன் அதுவும் மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனவுடன் தங்களுக்கு புதிய உலகம் பிறந்து விட்டதாகவே கருதி அவர்கள் ஆனந்தக் கூத்தாடினர்.

அவசரநிலையை எதிர்த்துப் போராடிய மாவீரர்கள் நாங்களே என்று மார் தட்டிக்கொண்டார்கள். அரசியல் சட்டம் - குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை நிறுத்திவைத்து - அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த பிரகடனம்தான் 'அவசர நிலை' என்பதாகும்.

அப்போது, அதன் தலைவராக இருந்த தேவரஸ் உடனே நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தைத் துவக்கினார். நாட்டில் உள்ள பெரும் பணமுதலைகளை எல்லாம் சந்தித்தார். 'இருண்ட காலத்திலிருந்து உங்களை விடுவித்தது நாங்கள்தான்' என்று அவசர நிலையை எதிர்த்து இவர்கள் மட்டுமே போராடியது போல் ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டனர்.

ஜெயப்பிரகாசரின் முழு ஆசீர்வாதம் இவர்களுக்கு இருப்பதாகவே சொல்லிக் கொண்டனர். பெரும் பணக்காரர்கள் எல்லாம் நிதியை அள்ளிக்குவித்தனர்! அந்த நேரத்தில் தான் சென்னைக்கு தேவரஸ் வருகைத்தந்தார்.

ஜனதா ஆட்சியைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் அமைப்புக்கு உயிரூட்டும் திட்டமிட்ட செயல் திட்டங்களை அவர்கள் துவக்கினார்கள்.

No comments: