Thursday, December 30, 2004

இந்து மதக்காப்பாளர்களாக வேடம்

(தொடர்...5)

அரசாங்கத்தின் பதவி எந்திரத்தை - தங்கள் வசமாக்கிக் கொள்ளும் ஏற்பாடுகள் நடந்தன. எல்.கே அத்வானி என்கிற ஆர்.எஸ்.எஸ்.-காரர் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சரானதும் - வானொலி, டெலிவிஷன், பத்திரிகைத் தகவல் தொடர்புத்துறைகளில் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் நுழைக்கப்பட்னர். (இவைகள் இந்திரா ஆட்சி காலத்திலே பார்ப்பனமயமாகித்தான் கிடந்தன. ஜனதா ஆட்சியில் நிலைமை மேலும் மோசமாகியது)வாஜ்பாய்-வெளிநாட்டுத்துறை அமைச்சரானதால் - ஆர்.எஸ்.எஸ். காரர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் சர்வசாதாரணமானது.

புதுடில்லியிலே வடநாட்டு ஆர்.எஸ்.எஸ். தலைவரான ஹேன்ஸ்ராஜ் குப்தா தலைமையில் மிகப்பெரிய சர்வதேச மாநாடு ஒன்றை வாஜ்பாய் ஆசீர்வதத்தோடு நடத்திக் காட்டினர். வெளிநாட்டுத்துறை அமைச்சகத்தின் மிகப்பெரிய பொறுப்பில் ஒரு முழுநேர ஆர்.எஸ்.எஸ்.காரர் அமர்த்தப்பட்டார்.

பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும், ஆராய்ச்சி நிலையங்களிலும் 'வித்தியார்த்தி பரிஷத்' (இது ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அமைப்பு) ஆதிக்கம் தலைவிரித்தாடியது. சரித்திர ஆராய்ச்சி பற்றிய இந்திய கவுன்சில் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு அதிலே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் புகுந்தனர். 'தீன்தயாள் உபாத்யாயா நிறுவனம்' என்ற பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்.நிறுவனத்தோடு இது இணைக்கப்பட்டது. வரலாற்றை இவர்கள் 'கருத்துக்களுக்கு' ஏற்ப - திரித்து நூல்களை எழுதினார்கள்.(வாஜ்பாய் தலைமையில் மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வந்த போதும் இதுவேதான் நடந்தது)

பிறகு மீண்டும் 1992ல் பாபர்மசூதி இடிப்புக்குப்பிறகு மூன்றாவது முறையாக ஆர்.எஸ்.எஸ்.தடைபோடப்பட்டது. அப்போதும் கூட விசுவ இந்து பரிஷத் என்ற பார்வையில் ஆர்.எஸ்.எஸ்.பகிரங்கமாக செயல்பட்டது தடைபற்றி ஆய்வுசெய்த, பக்ரி கமிட்டி. பிறகு அந்தத் தடையையும் நீக்கியது.

அவசரநிலையை இவர்கள் உண்மையாகவே எதிர்த்தார்களா? இந்த 'வீராதி வீரர்கள்' அப்போது செய்தது என்ன?" என்பதை எல்லாம் விரிவாக நாம் வேறு அத்தியாயத்தில் ஆராய இருக்கிறோம்!

'இந்து மதக்காப்பாளர்களாக இவர்கள் வேடம் போட்டுக் கொண்டாலும் உண்மையிலே இவர்கள் பார்ப்பனர்களின் பாதுகாவலர்கள்தான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் எடுத்துக் காட்டமுடியும்!

'இந்து அமைப்பின் தலைவர்களாக வந்திருக்கும் ஹெட்கேவர் யார்? அவர் ஒரு சித்பவன்பார்ப்பனர்! அடுத்த தலைவர் கோல்வாக்கர் யார்? அவரும் ஒரு சித்பவன் பார்ப்பனர்! அடுத்து வந்த தேவரஸ் என்பவரும் ஒரு சித்பவன் பார்ப்பனர்.

No comments: