Saturday, November 27, 2004

முதலிரவு டிப்ஸ் - 1

திருமணம் ஆனவர்கள் அனைவரும் தனது முதலிரவு நிகழ்வுகளை ஞாபகத்திற்கு கொண்டுவந்தால், அப்படி நடந்திருக்கலாமே, இப்படி நடிந்திருக்கலாமே, அவசரப்பட்டுவிட்டோமே என்று அங்கலாய்த்துக்கொள்வார்கள்.

இதில் யாரும் விதிவிலக்கில்லை. அப்படி அவசரப்படுவதே நம்ம Male Kind-தான் சார். (யாருக்கு முன் அனுபவம் இருந்ததோ அவர்களைத்தவிர).

நமது Male kind நண்பர்கள் பலர் திருமண நாளை எதிர்நோக்கியிருப்பதால், அவர்களுக்கு இந்த அறிவுரைகள் பயனளிக்கலாம். இதெல்லாம் எனது அனுபவம் என்று எண்ணிவிடவேண்டாம்.

ம்ம்... நீங்களாவது நல்லாயிருக்கனும் என்ற நல்ல எண்ணம்தான்.

சரி விஷயத்தை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

திருமணம் நடந்த அன்றே சாந்திமுகூர்த்தம் வைத்துக்கொள்வதை தள்ளிப்போடலாம். மாப்பிள்ளை பெண் இருவருக்கும் உள்ள ஏக்கங்கள் அளவுகடந்து இருந்தாலும் அவர்களின் உடம்பு அதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமா என்பதுதான் காரணம். திருமணத்திற்கு முந்தையநாள் கண்விழித்து தோழி தோழர்களுடன் அரட்டை அடித்தது. திருமண மண்டபத்திற்காக வெளியூர் பயணம், சம்பிரதாயங்கள் என்று பல்வேறு காரணங்களுக்கு மாப்பிள்ளை பெண் இருவரையும் பெண்டு கலட்டியிருப்பார்கள்.

சாந்திமுகூர்த்தம் அன்றே வைக்கவேண்டும் என்று யாராவது அடம்பிடித்தால் உங்கள் மனைவியிடம் ஒப்பந்தம் போட்டு இரண்டு நாட்களுக்கு தள்ளி போடலாம். இந்த ஒப்பந்த செய்தி உங்களுடன் இருக்கட்டும். செய்தி லீக் ஆகிவிட்டால் அவ்வளவுதான்.

சரி சார், அந்த இரண்டுநாளில் என்ன செய்வது என்கிறீர்களா? அதை அடுத்து பார்க்கலாமே.

No comments: