ஆப்பிரிக்காவின் (ஏழ்மையான) விலங்குக்காட்சி சாலையில் வசித்துவந்த சிங்கம் அதிகபட்சமாக தினமும் கிடைக்கும் ஒரு கிலோ இறைச்சியை எண்ணி மனவருந்தி, தனக்கு நல்லதொரு வழி பிறக்க கடவுளிடம் பிரார்த்தித்தது.
அங்கு வருகை தந்த சவுதி அரேபியாவின் விலங்குகாட்சி சாலை ஒன்றின் நிர்வாகி, அந்த சிங்கத்தை தன் நாட்டுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
சென்ட்ரல் ஏ.சி. யூனிட் தரும் குளுகுளு வசதி, உணவுக்காக தினமும் ஒன்று அல்லது இரண்டு ஆடு, சவுதி குடியுரிமை அட்டை என கனவு காண ஆரம்பித்தது சிங்கம்.
சவுதி வந்த முதல் நாள் காலை உணவுக்காக ஒரு பொட்டலம் சிங்கத்துக்கு அனுப்பப்பட்டது. பொட்டலத்தின் அழகைப் பார்த்து அதன் உள்ளே பிரத்யேக உணவு இருக்கும் என எண்ணி அவசரமாக பிரித்த சிங்கத்திற்கு சில வேர்கடலைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி.
தான் கடல்கடந்து வந்திருப்பதால் தன் வயிற்றுக்கு கேடு எதுவும் வரக்கூடாது என்பதற்காக வேர்கடலை கொடுத்திருக்கிறார்கள், ஆகா நம்மீது என்னே ஒரு பரிவு, என்று எண்ணியது. இரண்டாவது நாளும் அதே உணவுதான் அனுப்பி வைக்கப்பட்டது.
மூன்றாம் நாள் வேர்கடலை கொண்டுவந்த பையனிடம்,
"டேய் பொடியா என்னை யார்னு நினைச்சே! நான் காட்டுக்கே ராஜா தெரியுமா? உங்களின் நிர்வாகத்திற்கு பித்து பிடித்துக்கொண்டதா? இது உங்களுக்கே முட்டாள்தனமாக தெரியவில்லையா? எனக்கு ஏன் வேர்கடலையை அனுப்புகிறீர்கள்?" என்று கர்ஜித்தது.
அதற்கு பையன் மிக பவ்யமாக,
"ஐயா! எனக்கு தங்களின் அருமை பெருமைகளைப்பற்றி நன்றாகத் தெரியும். (தவறுதலாக) குரங்கிற்கு உரித்தான விஷாவில் உங்களை வரவழைத்திருக்கிறார்கள்" என்றான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment