Friday, November 26, 2004

தீவிரவாதிகள்

பத்திரிகைகளில் நாமெல்லாம் இதுவரை படித்திருப்பது முஸ்லீம் தீவிரவாதிகளைப்பற்றிதான். கடந்த நாட்களில் புதிதாக பத்திரிக்கையாளர்கள் லிஸ்டில் சேர்ந்திருப்பது தமிழ் தீவிரவாதிகள். இன்னும் சேராமல் இருப்பது இந்து தீவிரவாதிகள். திரு ராமகோபாலன் புண்ணித்தில் அதனையும் விரைவில் சேர்க்கும் நாள் தூரத்தில் இல்லை போல் தெரிகிறது.

பெருமாநல்லூர் அருகே பொம்மநாயக்கன்பாளையத்தில் மளிகைக் கடை நடத்தி வந்த நாற்பது வயது ஜஸ்டின் மதப்போதகராகவும் இருந்து வந்துள்ளார். அங்குள்ள மக்களை அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றம் செய்து வருவதாக இந்து முன்னணி ஏற்றிவிட்ட வெறியில் 06-06-2003 அன்று ஜஸ்டினின் மளிகைக் கடைக்குள் இந்த 6 பேரும் புகுந்து, இரும்புக் கம்பி, அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். உயிர் ஊசலாட்டத்தில் இருந்த அவர் 01.07.2003 அன்று இறந்து போயிருக்கிறார். இவ்வழக்கில் பொம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த

சண்முகம் மகன் மோகன்ராஜ் என்ற சக்திவேல் (வயது 26)
கருப்புசாமி மகன் சுகு என்ற சுகனேஸ்வரன் (வயது 22)
முத்து மகன் பெருமாள் (வயது 25)
திருப்பூரைச் சேர்ந்த ஜீவானந்தம் மகன் ஜீவகணேஷ் (வயது 26)
சுப்பிரமணியம் மகன் மணிகண்டன் (வயது 26)
பரமசிவம் மகன் சங்கர் (வயது 24)

ஆகிய 6 இந்து முன்னணியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வியாழக்கிழமை திருப்பூர் விரைவு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இளைஞர்களை தனது தீவிரவாத பேச்சால் வழிகெடுக்கும் மத தலைவர்கள் ஒழிந்தால்தான் தமிழ்நாட்டுக்கு அமைதி திரும்பும். குறைந்த கால இடைவெளியில் 34 சாட்சிகளை விசாரித்து தீர்ப்பு கூறிய விரைவு நீதிமன்றத்தையும், காவலர்களையும், தமிழ்நாட்டு அரசையும் பாராட்டாமல் இருக்கமுடியாது.

No comments: