Tuesday, November 23, 2004

Made in India

அமெரிக்கா, ஜப்பான், இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானிகளின் அறிவுத்திறன் போட்டி நடந்தது.

அமெரிக்க விஞ்ஞானி கோலி குண்டு அளவில் ஒரு அணுகுண்டை காட்டி இதை எந்த நாட்டுமேலேயாவது போட்டா எல்லா உயிரும் பொசுங்கி போய்விடும் என்றார்.

அடுத்து ஜப்பான் விஞ்ஞானி ஒரு செல்ஃபோனை கொண்டுவந்து இதில் பேசிக்கிடலாம், எதிர்முனையில் இருப்பவர்களை பார்த்துக்கிடலாம். அதுமட்டுமல்ல. எதிர்முனையில் உள்ள வாசனையையும் இதன்மூலம் நுகரலாம் என்றார்.

அடுத்து நம் ஆள் ஒரு போண்டாவை கொண்டுவந்து நடுவரிடம் கொடுத்துவிட்டு, இது என் தயாரிப்பு Made in India என்று சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொண்டார்.

போட்டி முடிவு:
போண்டாவில் எந்த துளையும் இடாமல் முட்டையை உள்ளே செலுத்தியிருப்பதாலும் முட்டை எந்தவித சேதமும் இல்லாமல் இருப்பதாலும் திருவாளர் போண்டா முதல் பரிசை தட்டிச் செல்கிறார்.

No comments: