சங்கர்ராமன் கொலைவழக்கில் கொலை செய்யப்பட்ட அன்று தம் வீட்டுக்கு வந்து தனது கணவரை தேடிச்சென்ற ரவுடிகளை திருமதி பத்மா சங்கர்ராமனும் அவரது மகளும் அடையாளம் காட்டியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது கொலை சம்பவத்தை நேரில் பார்த்த கோயில் ஊழியர் கணேஷும் குற்றவாளிகளை அடையாளம் காட்டியுள்ளார்.
அதேபோல், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகிய இருவரும் சென்னை மத்திய சிறைக்கு வந்து தங்களைத் தாக்கியவர்கள் பற்றி அடையாளம் காட்டியுள்ளார்கள்.
இந்த கொலையை தூண்டியவர்கள் யாராகவும் இருக்கலாம். அவர்களுக்கு தண்டனை கிடைக்கலாம் அல்லது வழக்கிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் கொலை கருவியாக பயன்பட்ட ரவுடிகள் வசமாக மாட்டியுள்ளார்கள். சட்டம் தன் கடமையை செய்ய அரசியல்வாதிகளின் இடைஞ்சல் இல்லாதிருந்தால் குற்றவாளிகள் தண்டனை பெறுவது உறுதி.
முதல்பக்கம்:
இந்த சம்பவங்களை படிக்கும்போது சென்னை உயிர்நீதி மன்ற வளாகத்தில் நேரில் கண்ட காட்சி என்கண்களில் நிற்கிறது. வழக்கிற்காக கொண்டுவரப்பட்ட ரவுடிகளை ஒரு இடத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அங்கு நடக்கும் கூச்சலும், கலாட்டாவும் விவரிக்க இயலாது. பிறகு குற்றவாளிகள் மத்திய சிறைக்கு அழைத்துச்செல்வதற்காக வேனில் அடைக்கப்படுகிறார்கள். அப்பொழுது சில பெண்கள் (உறவினராக இருக்கலாம்) பீ.டி. சிகரெட் போன்றவற்றை கொடுப்பதற்காக கம்பி போட்டு அடைக்கப்பட்ட வேனை சுற்றிவரவே போலீசார் விரட்டுகிறார்கள். வேன் புறப்பட்ட பின் அந்த வேனின் பின்னால் ஓடி காரியத்தை சாதித்துக்கொள்கிறார்கள்.
ரவுடிகளுக்கு எனது கேள்விகள்:
1) உங்கள் பெண்களும் மற்ற குடும்ப பெண்களைப்போல் மானம் ரோஷம் போன்றவைகள் உள்ளவர்கள் அல்லவா?
2) அவர்களை கோர்ட்டு வாசலில் உங்களுக்காக தவம் இருக்கச் செய்யும் காரியங்கள் எந்த வெள்ளையனை விரட்டுவதற்காக செய்தீர்கள்.
3) நீங்கள் செய்ததெல்லாம் யாரோ ஒரு அரசியல்வாதி, ஒரு ஆன்மீகவாதி அல்லது பேட்டை தாதா வாழ்வதற்காக செய்தவையே.
4) உங்களை ஏவிய அவர்கள் உள்ளே அல்லது வெளியே உல்லாசமாக இருக்கிறார்கள். ஆனால் உங்கள் கதியை நினைத்து பார்த்தீர்களா?
5) உங்கள் மனைவியின் பாதுகாப்பு குழந்தைகளின் கல்வி இவற்றைப்பற்றி நீங்கள் சிந்தித்திருந்தால் இவ்வாறு செய்வீர்களா?
6) நீங்கள் உள்ளே இருக்கும் நேரம் பொருளாதார பிரச்சனைகளுக்காக கற்பிழக்கும் உங்கள் மனைவி, மகள்களை நீங்கள் நினைத்து பார்த்தீர்களா?
7) உங்கள் மகன்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, உங்களைப்போல் ரவுடியாக மாற விரும்புகிறீர்களா?
8) இன்னும் சில கேள்விகளை நீங்களே கேட்டு திருந்திக்கொள்ளுங்கள்.
மறுபக்கம்:
சந்தேகவழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவரை சென்னையிலுள்ள ஒரு காவல்நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அழைத்துசெல்கிறார்கள். அவரை அழைத்துச்செல்லும் இரு காவலரும் பேசிக்கொள்கிறார்கள்:
"ஏம்ப்பா சீக்கிரம் இவரை கோர்ட்டுக்கு அழைச்சிட்டு போகனும். பெயில்ல எடுக்க ஆள்வந்துருக்காங்க".
"அடப்போப்பா இவனை சீக்கிரம் அழைச்சிட்டு போறதனால நமக்கு என்ன இலாபம். இவனுங்கல அலைகழிச்சாத்தான் எதனாச்சும் கறக்க இயலும். நான் முன்னால ரவுயாகத்தான் இருந்தேன். யாரிடம் எப்படி கறக்கிறதுன்னு எனக்கு தெரியும்".
காவல்துறையினருக்கு எனது கேள்விகள்:
1) நீங்கள் வாங்கும் சம்பளம் மக்களின் வரிப்பணத்தில் கொடுக்கப்பட்டது என்பதை நினைத்துப் பார்த்தீர்களா?
2) உங்களுக்கு முதலாளி மக்களா? அரசியல்வாதிகளா?
3) மக்களின் பாதுகாப்புக்கு நீங்கள் நியமிக்கப்பட்டிருக்கிறீர்களா? அல்லது ரவுடிகளின் பாதுகாப்புக்கு நீங்கள் நியமிக்கப்பட்டிருக்கிறீகளா?
4) நீங்கள் பிடித்திருக்கும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா?
5) காசு கொடுக்காமல் நீங்கள் சாப்பிடும் பிரியாணியும் குவார்ட்டரும் யாரை ஏய்த்து வாங்கியது.
6) நீங்கள் ரவுடித்தனமாக நடந்துக்கொண்டால் நிச்சயமாக நீங்களும் உங்கள் குடும்பமும் ரவுடிகளால் தாக்கப்படும் நாள் அருகில் இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.
8) இன்னும் சில கேள்விகளை நீங்களே கேட்டு திருந்திக்கொள்ளுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
There is absolutely no use in asking any QUESTIONS to the POLICE. Most of them are utterly corrupt, will never learn, barbaric in their approach and live at the feet of whoever is ruling at that point of time.
So, better not to ask any questions to them.
May be, you could ask some questions to the Rowdies which will make some of them think and mend their ways to become good individuals.
Post a Comment