Thursday, December 30, 2004
இந்து மதக்காப்பாளர்களாக வேடம்
அரசாங்கத்தின் பதவி எந்திரத்தை - தங்கள் வசமாக்கிக் கொள்ளும் ஏற்பாடுகள் நடந்தன. எல்.கே அத்வானி என்கிற ஆர்.எஸ்.எஸ்.-காரர் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சரானதும் - வானொலி, டெலிவிஷன், பத்திரிகைத் தகவல் தொடர்புத்துறைகளில் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் நுழைக்கப்பட்னர். (இவைகள் இந்திரா ஆட்சி காலத்திலே பார்ப்பனமயமாகித்தான் கிடந்தன. ஜனதா ஆட்சியில் நிலைமை மேலும் மோசமாகியது)வாஜ்பாய்-வெளிநாட்டுத்துறை அமைச்சரானதால் - ஆர்.எஸ்.எஸ். காரர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் சர்வசாதாரணமானது.
புதுடில்லியிலே வடநாட்டு ஆர்.எஸ்.எஸ். தலைவரான ஹேன்ஸ்ராஜ் குப்தா தலைமையில் மிகப்பெரிய சர்வதேச மாநாடு ஒன்றை வாஜ்பாய் ஆசீர்வதத்தோடு நடத்திக் காட்டினர். வெளிநாட்டுத்துறை அமைச்சகத்தின் மிகப்பெரிய பொறுப்பில் ஒரு முழுநேர ஆர்.எஸ்.எஸ்.காரர் அமர்த்தப்பட்டார்.
பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும், ஆராய்ச்சி நிலையங்களிலும் 'வித்தியார்த்தி பரிஷத்' (இது ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அமைப்பு) ஆதிக்கம் தலைவிரித்தாடியது. சரித்திர ஆராய்ச்சி பற்றிய இந்திய கவுன்சில் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு அதிலே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் புகுந்தனர். 'தீன்தயாள் உபாத்யாயா நிறுவனம்' என்ற பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்.நிறுவனத்தோடு இது இணைக்கப்பட்டது. வரலாற்றை இவர்கள் 'கருத்துக்களுக்கு' ஏற்ப - திரித்து நூல்களை எழுதினார்கள்.(வாஜ்பாய் தலைமையில் மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வந்த போதும் இதுவேதான் நடந்தது)
பிறகு மீண்டும் 1992ல் பாபர்மசூதி இடிப்புக்குப்பிறகு மூன்றாவது முறையாக ஆர்.எஸ்.எஸ்.தடைபோடப்பட்டது. அப்போதும் கூட விசுவ இந்து பரிஷத் என்ற பார்வையில் ஆர்.எஸ்.எஸ்.பகிரங்கமாக செயல்பட்டது தடைபற்றி ஆய்வுசெய்த, பக்ரி கமிட்டி. பிறகு அந்தத் தடையையும் நீக்கியது.
அவசரநிலையை இவர்கள் உண்மையாகவே எதிர்த்தார்களா? இந்த 'வீராதி வீரர்கள்' அப்போது செய்தது என்ன?" என்பதை எல்லாம் விரிவாக நாம் வேறு அத்தியாயத்தில் ஆராய இருக்கிறோம்!
'இந்து மதக்காப்பாளர்களாக இவர்கள் வேடம் போட்டுக் கொண்டாலும் உண்மையிலே இவர்கள் பார்ப்பனர்களின் பாதுகாவலர்கள்தான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் எடுத்துக் காட்டமுடியும்!
'இந்து அமைப்பின் தலைவர்களாக வந்திருக்கும் ஹெட்கேவர் யார்? அவர் ஒரு சித்பவன்பார்ப்பனர்! அடுத்த தலைவர் கோல்வாக்கர் யார்? அவரும் ஒரு சித்பவன் பார்ப்பனர்! அடுத்து வந்த தேவரஸ் என்பவரும் ஒரு சித்பவன் பார்ப்பனர்.
Sunday, December 26, 2004
அமைப்பின் நடவடிக்கைகள் தேச விரோதமானவை
ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோர் கூட, அவரிடம் இவர்கள் எத்தனையோ கருணை விண்ணப்பங்களைப் போட்டுப் பார்த்தார்கள்!
1948ம் ஆண்டு அப்போது ஆர்.எஸ்.எஸ்.தடை செய்யப்பட்டிருந்த நேரம். பிரதமர் ஜவஹர்லால் நேருவை நேரில் சந்தித்து எதைச் சொல்லியாவது தடையை நீக்கிடவேண்டும் என்று எத்தனையோ தீவிர முயற்சிகளில் முயன்று பார்த்தார்.
அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கர், என்னை சந்திக்க முயற்சிப்பதில் பயனே இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்து தானே கையெழுத்திட்ட ஒரு கடிதத்தையும் நேரு அனுப்பினார்.
இந்தக் கடிதத்தில் இருந்த வாசகங்கள் இது தான் "கடந்த ஆண்டு இறுதியில், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஆர்.எஸ்.எஸ்.நடவடிக்கைகள் பற்றி, ஏராளமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. நீங்கள் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருக்கிற சமாதானங்கள் அதற்கு சரியான பதில் ஆக முடியாது. நீங்கள் உங்கள் கொள்கையாக எதையெல்லாம் அறிவித்திருக்கிறீர்களோ, அதற்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. இந்திய பாராளுமன்றத்தின் கொள்கையையும் அமைய இருக்கும் அரசியல் சட்டத்தையும் எதிர்ப்பது தான் உங்கள் உண்மையான கொள்கை எங்களுக்குக் கிடைத்ததகவலின்படி, உங்கள் அமைப்பின் நடவடிக்கைகள் தேச விரோதமானவை, சூழ்ச்சியானவை, வன்முறையானவை. இதற்கு எதிராக நீங்கள் தரும் உறுதியை மட்டும் நான் நம்பிவிட முடியாது.
இவ்வாறு முகத்தில் அறைந்தது போல் பதில் எழுதினார் பண்டிதர் நேரு!
அதற்குப்பிறகும் அரசாங்கத்திடம் மன்றாடினவர்கள் கலாச்சார அமைப்பாகவே செயல்படுவோம் என்று உறுதிகூறி புதிய சட்ட விதிகளை ஏற்படுத்திக் கொள்வதாகவும் எழுதிக்கொடுத்தனர். அதற்குப் பிறகு 1949ம் ஆண்டு ஜுலை 11ம் தேதி தடை நீக்கப்பட்டது.
ஆனால் அவர்கள் போக்கில் ஏதாவது மாற்றம் இருந்ததா என்றால் இல்லை! அவர்களின் கலவரங்கள் தொடர்ந்து நீடிக்கத்தான் செய்தன. அதைத் தொடர்ந்து அவசரநிலை காலத்தில் 1974ம் ஆண்டு மீண்டும் ஆர்.எஸ்.எஸ்.தடைசெய்யப்பட்டது. ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்தத் தடை நீங்கியது.
ஜனதா கட்சி ஆட்சி பீடம் ஏறியவுடன் அதுவும் மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனவுடன் தங்களுக்கு புதிய உலகம் பிறந்து விட்டதாகவே கருதி அவர்கள் ஆனந்தக் கூத்தாடினர்.
அவசரநிலையை எதிர்த்துப் போராடிய மாவீரர்கள் நாங்களே என்று மார் தட்டிக்கொண்டார்கள். அரசியல் சட்டம் - குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை நிறுத்திவைத்து - அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த பிரகடனம்தான் 'அவசர நிலை' என்பதாகும்.
அப்போது, அதன் தலைவராக இருந்த தேவரஸ் உடனே நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தைத் துவக்கினார். நாட்டில் உள்ள பெரும் பணமுதலைகளை எல்லாம் சந்தித்தார். 'இருண்ட காலத்திலிருந்து உங்களை விடுவித்தது நாங்கள்தான்' என்று அவசர நிலையை எதிர்த்து இவர்கள் மட்டுமே போராடியது போல் ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டனர்.
ஜெயப்பிரகாசரின் முழு ஆசீர்வாதம் இவர்களுக்கு இருப்பதாகவே சொல்லிக் கொண்டனர். பெரும் பணக்காரர்கள் எல்லாம் நிதியை அள்ளிக்குவித்தனர்! அந்த நேரத்தில் தான் சென்னைக்கு தேவரஸ் வருகைத்தந்தார்.
ஜனதா ஆட்சியைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் அமைப்புக்கு உயிரூட்டும் திட்டமிட்ட செயல் திட்டங்களை அவர்கள் துவக்கினார்கள்.
Saturday, December 25, 2004
பாசிச இயக்கம் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்
இவர்களின் 'அம்பேத்கர் ஆதரவு நாடகத்தை' நாடு முழுவதும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்பதற்காக - அனுமதிக்கப்படாத வீதிகளில் ஊர்வலமாகப் போய் - கல்வீச்சு, வன்முறைக் கலவரங்களை நடத்தி கைதாகியிருக்கிறார்கள். கைது கலவரம் என்ற சூழ்நிலை வந்த பிறகு அவைகள் கட்டாயமாக செய்திகளாக்கப்படும் நிலை உருவாகிவிடுகிறது அல்லவா? அதுதான் அவர்கள் நோக்கம்.
1966-ஆம் ஆண்டு இந்த கூட்டத்தின் சதிவலையிலே மறைந்த ஜெயப்பிரகாசரும் (ஜெ.பி)சிக்கினார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் அவர்களின் சுயரூபத்தை உணர்ந்து கொண்டு விட்டார்.
1968-ஆம் ஆண்டில் ஜெயப்பிரகாசர் இவ்வாறு பிரகடனப்படுத்தினார். "ஆர்.எஸ்.எஸ். ஒரு வகுப்பு வாத பாசிச இயக்கம் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்."
புதுடில்லியிலே 1968ஆம் ஆண்டு வகுப்புவாத எதிர்ப்பு இரண்டாவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு ஜெயப்பிரகாசர் நாராயண் பேசிய பொழுது இவ்வாறு தெரிவித்தார். அவரது உள்ளத்தின் உணர்வுகள் பீறிட்டுக்கிளம்பின.
"ஜனசங்கம் தன்னை ஒரு மதச்சார்பற்ற அமைப்பு, என்று கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால்-இவர்கள் ஆர்.எஸ்.எஸ். எனும் எந்திரத்தால் இயக்கப்படுகிறவர்களாகவே இருக்கிறார்கள். அந்த ஆர்.எஸ்.எஸ். முடிச்சுக்களிலிருந்து, ஜனசங்கத்தினர் தங்களை முழுமையாக வெட்டிக் கொள்ளாதவரை இவர்கள் மதச்சார்பின்மை கொள்கைக்காரர்கள் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது" (ஆதாரம் 'Secular Democracy' ஆண்டு மலர் 1969)
மயிலிடம் இறகுக்குக் கெஞ்சுவது போல் வகுப்பு வாத்தைக் கைவிடுங்கள் என்று ஆர்.எஸ்.எஸ். காரர்களிடம் மனு போட்டு மனம் சலித்த ஜெயப்பிரகாஷ்... இறுதியில் அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கே ஒரு கடிதம் எழுதினார்.
1976-ம் ஆண்டு -மார்ச் 2-ம் தேதியிட்டு ஜெயப்பிரகாஷ்-நாராயண் அன்றைய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.
'அரசாங்கத்தில்-தலைமையைக் கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ்.முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டை என்னிடம் பல நண்பர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் தங்களை ஒரு கலாச்சார இயக்கம் என்று சொல்லிக் கொண்டு இந்த முகமூடியோடு அரசியலில் செல்வாக்கு பெறவிரும்புவதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஆர்.எஸ்.எஸ்.சின் இந்து ராஷ்டிரக் கொள்கையை நான் எப்போதுமே கண்டித்து விந்திருக்கிறேன். அது மிகவும் ஆபத்தான தத்துவம். நமது -பல்வேறு கலாச்சாரத்தைக் கொண்ட இந்திய நாட்டுக்கு நேர் எதிரான தத்துவம். (I have always condemned the Hindu Rastravad of R.S.S. because it is a dangerous idelogy and is contradictoy to our ideal of composite indian nation)
-என்று ஜெயப்பிரகாஷ் நாராயண் அந்தக் கடிதத்தில் தனது கருத்துக்களை மிகத்தெளிவாக எடுத்துக்காட்டியிருந்தார்!
ஜெயப்பிரகாசர் உளம் புழுங்கி-அன்றைய பிரதமர் மொரார்ஜிக்கு எழுதிய கடிதத்தை மொரார்ஜியிடம்-அனுப்புவதற்கு முன்பு அந்தக் கடைசி நேரத்தில் கூட ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஜெ.பி.யை சூழ்ந்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்.பற்றி சொல்லப்பட்டிருக்கிற வாசகங்களை அகற்றுமாறு வற்புறுத்தினர்! ஆனால் ஜெ.பி.அதற்குப் பணிந்து விடவில்லை. ஜெ.பி கடிதத்தின் கடைசி வரிகள் இப்படி எச்சரிக்கையோடு முடிந்தது.
'நீங்கள் இந்த நாட்டின் பிரதமர்.ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வகுப்பு வெறியை மாற்ற வேண்டியது உங்கள் கடமை. நீங்கள் அதைச் செய்யாவிட்டால், நாட்டில் உள்ள சிந்தனையாளர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.ஸை எதிர்த்துப் போராடி அதைச்செய்ய வேண்டிய நிலைவரும்'. (ஜெ.பி. கடிதத்தற்கான ஆதாரம்: "தினமான்" இந்திவார ஏடு -ஏப்ரல் 8, 1979)
Friday, December 17, 2004
ஆர்.எஸ்.எஸ்-வுடைய வலைவீச்சு தந்திரம்
http://kirukku.blogspot.com/2004/12/blog-post_08.html
தொடர்....2
"Mahatma Ganthi the last phase" என்ற காந்தியாரின் சுயசரிதையை அவரது உதவியாளர் பியாரிலாஸ் (pharilal) எழுதியிருக்கிறார். அந்த நூலின் 440வது பக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பற்றி காந்தியார் சொன்ன மேற்கண்ட கருத்துக்கள் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் அரசியல் அமைப்பாக முன்னால் ஜனசங்கமான, இந்நாள் பாரதீய ஜனதா கட்சி 1982 ஏப்ரல் 14ஆம் தேதி அய்தராபாத் நகரத்திலே ஒரு ஊர்வலம் நடத்தியது: அது என்ன ஊர்வலம் தெரியுமா?
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி -சமூக சமத்துவ நாள் என்ற பெயரில் அவர்கள் ஊர்வலம் நடத்தினார்கள்.
குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து - ரத்த ஆறை ஓடவிட்ட அதே கூட்டம் தான் வெட்கம் இல்லாமல் அம்பேத்கார் பிறந்த நாள் ஊர்வலம் எடுத்து தாழ்த்தப்பட்டோர்களுக்கு வலைவீச்சு நடத்தத் திட்டமிட்டது.
பார்ப்பனீயத்தையும் இந்து ராஷ்டிரத்தையும் ஆழக்குழிதோண்டி புதைக்க வேண்டும் என்று அறை கூவல்விடுத்த அந்த மாமேதைக்கு அறிவு நாணயமற்ற இந்த வெட்கம் கெட்டவர்கள் ஊர்வலம் எடுப்பதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது.
1992ல் இவர்கள் அயோத்தியில் பாபர்மசூதியை இடிப்பதற்கு தேர்ந்தெடுத்த நாளே-டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதிதான்.
இந்துமதத்திலிருந்து தனது பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை விடுவித்துக் கொண்டு புத்த மார்க்கத்திலே இணைந்தவர் டாக்டர் அம்பேத்கர் என்பது இவர்களுக்குத் தெரியாதது அல்ல. ஆனாலும்-நாட்டிலே மற்ற மதத்தவர்களோடு மோதி, உயிர்பலியாவதற்கு தாழ்த்தப்பட்ட தோழர்களின் படை அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்ற ஒரே காரணத்தால் அந்தக் கூட்டம் இத்தகைய நாடகங்களை நடத்துகிறது.
Saturday, December 11, 2004
நேஷ குமார் - சொல்ல மறந்த கதை
ஆர்.எஸ்.எஸ் - ஓர் அபாயம்
நன்றி: விடுதலை இராசேந்திரன்
சாதித்துவ நெருப்பில் நந்தனை எரித்த வரலாற்றுத் தொடர்ச்சியாய் - ஒரிசாவில் 'இந்துத்துவ' நெருப்புக்கு இறையாக்கப்பட்ட ஆஸ்திரேலியப் பாதிரியார் கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது அன்பு மகன்கள் பிலிப்ஸ் (வயது 9), திமோத்தி (வயது 7) நினைவுக்கு...
1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி! தமிழ்நாட்டில் - அன்றைய தினம், ஒரு கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி - இந்தியா முழுவதையுமே குலுக்க ஆரம்பித்தது!
திருநெல்வேலி மாவட்டத்திலே மீனாட்சிபுரம் என்ற கிராமத்தைச் சார்ந்த சுமார் 1000 தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள், தங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த சாதிக் கொடுமைகளால், இந்து மதத்துக்கே முழுக்குப் போட்டுவிட்டு அந்தத் தேதியில்தான் இஸ்லாம் மதத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
மத்தியில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த காலக்கட்டத்தில் - தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பைத் துவக்கிடும் முயற்சிகளில் நாடுமுழுவதும் தீவிரம் காட்டி செயல்பட்டனர் என்றாலும் அவர்கள் தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை.
அதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டிருந்த அவர்களுக்கு - இந்த மதமாற்றம் ஒரு வாய்ப்பாகப் பயன்பட்டது. டில்லியிலிருந்து - பல ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் இந்தக் கிராமத்திலே முகாமடிக்க ஆரம்பித்தனர். மத மாற்றம் ஒரு "தேசிய அதிர்ச்சியாக" பிரபலப்படுத்தப்பட்டது.
அவசர நிலை காலத்தில் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதே அவசரநிலை காலத்தில் தமிழ் நாட்டில் பார்ப்பன ஆலோசகர் ஆட்சி நடந்தபோது ஆர்.எஸ்.எஸ். தத்துவம்தான் இங்கே ஆட்சி புரிந்தது.
கெஞ்சினால் மிஞ்சுவதும் மிஞ்சினால் கெஞ்சுவதுமான இந்த தந்திரக்காரர்கள், தங்கள் அமைப்புக்கு பெரும் தலைவர்களின் ஆதரவெல்லாம் இருப்பதாக அப்பட்டமான பொய்ப் பிரச்சாரத்தில் இறங்கி- அதன் மூலம் அப்பாவிகளை மயக்கப் பார்ப்பது இவர்களின் நடைமுறைத் தந்திரம்!
இந்தக் கூட்டத்தின் வரலாற்றுக் கலாச்சாரமே இப்படித்தான் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துக்காட்ட முடியும்.
இதோ ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டுகிறோம். மத்தியில் ஆட்சிக்கட்டிலுக்கு வந்த ஜனதா கட்சி உடைந்து சிதறியதற்குக் காரணமாயிருந்தது இரட்டை உறுப்பினர் (Duel Membership) பிரச்சனை! அதாவது ஜனதா கட்சியிலே அங்கம் வகிப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஆகலாமா? என்ற பிரச்னை. இது அப்போது மட்டும் ஏற்பட்டது அல்ல. 1934ம் ஆண்டிலேயே அந்தப் பிரச்னை, காங்கிரஸ் கட்சியிலே ஏற்பட்டிருக்கிறது!
1934ம் ஆண்டிலேயே அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஒரு தீர்மானத்தையே நிறைவேற்றியது. என்ன அந்தத் தீர்மானம்?
"காங்கிரஸ் கட்சியிலே உறுப்பினராக இருக்கக் கூடியவர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பினராக இருக்கக் கூடாது"
இந்தத் தீர்மானம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் காங்கிரஸ் ஊடுருவலைத், தடுத்து நிறுத்தியது! உடனே காந்தியாருக்கு வலை வீசும் தந்திரங்களை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மேற்கொண்டார்கள்.
அதே ஆண்டு - 'வார்தா'விலே ஆர்.எஸ்.எஸ்.பயிற்சி முகாம் நடந்து கொண்டிருந்தது! அதைப் பார்வையிட வரவேண்டும் என்று காந்தியாரை அழைத்தார்கள். ஹெட்கேவர் காந்தியாரை நேரில் போய் சந்தித்துப் பேசினார். காந்தியாரும் முகாமைப் பார்வையிட்டார்!
உடனே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்கள் பிரச்சார சாதனங்கள் மூலம் திட்டமிட்ட ஒரு கருத்தைப் பரப்பினர்.
"ஆர்.எஸ்.எஸ்.சேவைகளை காந்தி அடிகள் நேரில் பார்த்து பாராட்டினார்" என்பதே அந்தப் பிரச்சாரம்!
ஆனால் - இது உண்மைக் கலப்பில்லாத பொய்ப் பிரச்சாரம்! காந்தியார் பாராட்டு எதுவுமே தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
அது மட்டுமல்ல, காங்கிரஸ்காரர்கள் - ஆர்.எஸ்.எஸ்.சில் சேரத்தடை விதித்து காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் அப்படியே இருக்கட்டும் என்றார் காந்தியார்.
காந்தியாரோடு வார்தா பயிற்சி முகாமுக்கு உடன் சென்ற சீடர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நல்ல சேவைகளைச் செய்கிறார்கள் என்று காந்தியாரிடம் சொன்னபோது - காந்தியார் அளித்த பதில் என்ன தெரியுமா?
"ஹிட்லரின் நாசிப்படையும் முசோலினியின் பாசிசப் படையும் இதே போல்தான் சேவை செய்தது என்பதை மறந்து விட வேண்டாம்."
இப்படி ஹிட்லர், முசோலினியில் நாசிச, பாசிசப் படைகளோடு - ஆர்.எஸ்.எஸ்-ஸை ஒப்பிட்டுக் கருத்துக் கூறிய காந்தியரை தங்களின் ஆதரவாளர் போல் சித்தரித்துக் காட்டிய பொய்யர்களின் கூடாரம்தான் ஆர்.எஸ்.எஸ்.
(தொடருவேன்.....)
நன்றி: 'விடுதலை' க. இராசேந்திரனின் ஆர்.எஸ்.எஸ். - ஓர் அபாயம் (வெளியீடு: விடியல் பதிப்பகம், கோவை)
Friday, December 10, 2004
பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்!
தொலைபேசி: 044-28360344
வெளியீடு: மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
ஜெகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்றழைக்கப்பட்ட சுப்பிரமணி, சங்கரராம அய்யர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முதல் குற்ற வாளியாகக் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். தீபாவளி, பொங்கள், புத்தாண்டு என எல்லாப் பண்டிகை நாட்களிலும் அதிகாலையிலேயே தொலைக்காட்சியில் தோன்றி, தனது ஊத்தைத் திருவாய் மலர்ந்து அருளும் இந்தக் கபட சந்நியாசி ஒரு "கிரிமினல்" என்பதைத் தமிழக அரசே பிரகடனம் செய்திருக்கிறது.
இ. பி. கோ. - 302 (கொலை), 201 (சாட்சி / குற்றவாளியை மறைப்பது), 205 (குற்றத்தை மறைக்க ஆள்மாறாட்டம் செய்தல்), 213 (குற்றத்தை மறைக்கப் பணம் தருதல்), 34 (கிரிமினல் நோக்கத்துக்காகக் கூடிச் செயல்படுதல்), 120 - பி (கொலை செய்ய சதித் திட்டம் தீட்டுதல்) ஆகிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார் இந்த ஜெகத்குரு.
கொலைக்கு முன்னும பின்னும கூலிப்படையுடன் சங்கராச் சாரி நடத்திய செல்ஃபோன் உரையாடல், சங்கரமடத்தின் வங்கிக் கணக்கிலிருந்து ஜெகத்குரு தனது பிரசாதமாகக் கொலைகாரர்களுக்கு வழங்கிய பணம், பொய்க் குற்றவாளிகளுக்குக் கொடுத்த பணம், சங்கராச்சாரிக்கு கொலைவெறியைத் தூண்டிய சங்கரராமனின் இறுதி எச்சரிக்கைக் கடிதம் போன்ற பல அசைக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் தான் இந்தக் கைது நடந்திருக்கிறது.
கொலை நடந்தவுடனேயே இதில் சங்கராச்சாரியின் தொடர்பை சூசமாக அம்பலப்படுத்தியது 'நக்கீரன்'. தன் மீதான சந்தேகம் வலுக்கத் தொடங்கி விட்டது என்று புரிந்து கொண்டு அதைத் திசைத் திருப்புவதற்காக சங்கராச்சாரி "நக்கீரன்" இதழுக்கு அளித்த பேட்டி சங்கராச்சாரியின் ஒப்புதல் வாக்குமூலமாகவே அமைந்திருந்தது.
என்னுடைய பக்தர்கள் யாரேனும் சங்கரராமனைக் கொலை செய்திருக்கக் கூடும் என்று ஒலிநாடாவில் பதிவு வெய்யப்பட்ட அந்தப் பேட்டியில் திமிராகவும் அலட்சியமாகவும் கூறியிருக்கிறார் சங்கராச்சாரி. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அன்றே சங்கராச்சாரியை போலீசு கைது செய்திருக்க வேண்டும்.ஆனால் ஆள்பலம், பணபலம், அதிகாரபலம் அனைத்தும் படைத்த இநத ஆன்மீக அடியாள் படையின் தலைவன், ஒரு பச்சைரத்தப் படுகொலையைச் செய்துவிட்டு, அந்தக் குற்றத்தின் சுவடு கூட முகத்தில் தெரியாமல் மறைத்துக் கொண்டு தீபாவளியன்று காலை வரை இந்துக்களுக்கு அருளாசி வழங்கியிருக்கிறார்.மறுக்கவும் மறைக்கவும் முடியாத அளவிற்கு ஆதாரங்கள் சிக்கி விட்டன என்று புரிந்து கொண்டவுடன் உலகின் ஒரே இந்து சாம்ராச்சியமான நேபாளத்திற்குத் தப்பியோட முயன்று பிடிபட்டிருக்கிறார் இந்தக் கிரிமினல்களின் ஜெகத்குரு.
குற்றவாளிக்கு இராஜ மரியாதை!ஜெயேந்திரர் சாதாரண குற்றவாளி அல்ல; ஆன்மீகம், அகிம்சை என்று நாட்டுக்கே உபதேசம் செய்து கொண்டு அதன் மூலம் தனது பணபரலத்தையும், அரசியல் செல்வாக்கையும் பெருக்கிக் கொண்ட ஒரு மடாதிபதி. சாதாரண மனிதர்கள் வநுமையின் காரணமாகவோ, உணர்ச்சி வயப்பட்டோதான் பல குற்றங்களை இழைக்கிறார்கள். ஆனால் இந்த ஜெகத் குருவோ தன்னுடைய வண்டவாளங்களைக் கேள்விக்குள்ளாக்கிய ஒரே காரணத்திற்காக ஒரு பச்சை ரத்தப் படுகொலையை ஆற அமரத் திட்டம் போட்டு நிறைவேற்றியிருக்கிறார் - அதுவும் மக்கள் மிகப் புனிதமாகக் கருதும் ஒரு கோயிலுக்குள்ளே! இந்தக் கொலையை மறைக்கவும் திசை திருப்பவும் தனது பணபலத்தையும் அதிகாரபலத்தையும் பயன்படுத்தியிருக்கிறார்.
தெருவில் அடித்து இழுத்துச் செல்லப்படும் ரவுடிகளைக் காட்டிலும் கடுமையான முறையில் நடத்தப்பட வேண்டிய இந்தக் குற்ற வாளிக்கு இங்கே ராஜமரியாதை நடக்கிறது; சாதாரண குற்றங்கள் புரிந்த ஏழைகளை உள்ளாடையுடன் நிறுத்தி பிடரியில் கைவைத்து கையில் விலங்கு மாட்டி இழுத்து வரும் போலீசு, ஜெகத்துருவிடம் 'தயவுசெய்து வாருங்கள்!' என்று மன்றாடுகிறது; 'நான் போலீசு வேனில் ஏறமாட்டேன்' என்று ஜெயெந்திரர் சொன்னவுடன் காரில் அழைத்து வருகிறது. 'சூத்திரன் தொட்டால் பார்பானுக்குத் தீட்டு' என்ற மனுதர்மத்தை மதித்து சங்கராச்சாரியின் மீது விரல் கூடப் படாமல் போலீசு எட்ட நிற்கிறது. 'ஜெயேந்திரருக்கு ஒரு பிரமாணரைக் கொண்டுதான் சமையல் செய்து தருகிறோம்' என்று நீதி மன்றத்திலேயே அறிவிக்கிறார் அரசு வக்குரைஞர் துளசி.
சிறையில் சாதாரண குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதிகளும் குற்றமே செய்யாமல் உள்ளே தள்ளப் பட்ட அப்பாவிகளும் சிறையைக் கூட்டுகிறார்கள், கக்கூஸ் கழுவுகிறார்கள், இடுப்பொடிய வேலை வாங்கப்படுகிறார்கள். சங்கராச் சாரியோ அங்கே மூணுவேளை பூஜை செய்கிறாராம்! அந்த அகிம்சா மூர்த்தி அன்றாடம் பூஜை செய்யவில்லை என்றால் உலகமே அழிந்து விடுமென்பதால் சிறை நிர்வாகமே தேங்காய், பூ, பழம், சூடம் சாம்பிராணி சப்ளை செய்கிறது. சாதாரணக் கைதிகளுககு அலுமினியத் தட்டில் வேகாத சோறு. இந்த நட்சத்திரக் கிரிமினலுக்கோ சில்வர் தட்டில் சோறு, சப்பாத்தி, பால், பழம்; குளிக்க வெந்நீர், அன்றாடம் மருத்துவச் சோதனை... இன்னபிற வசதிகள். நாட்டில் எந்தக் கொலைக் குற்றவாளிக்காவது இவ்வளவு மரியாதை நடந்ததுண்டா?
'நான் நீதிபதியிடம் வரமாட்டேன்', 'நீதிபதியை அங்கே வரச் சொல்!' 'ராகு காலத்தில் தீர்ப்பு சொல்லாதே!' என்று நீதிபதிக்கு ஒரு கிரிமினல் உத்திரவிடுவதை யாராவது கேள்விப்பட்டதுண்டா? கைதியையே கண்ணால் பார்க்காமல் ரிமாண்டு உத்தரவு போடும் நீதிபதிகள், ரத்தம் சொட்டச் சொட்டக் கொண்டு வந்து நிறுத்தினாலும் கைதியைத் தலைநிமிர்ந்து பார்க்க மறுக்கும் மாஜிஸ்ட்ரேட்டுகள் இதுதான் மக்களுக்கு நீதிமன்றத்தில் கிடைக்கும் மரியாதை! லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் சிறையில் அடைக்கப்பட்டபோதோ உயர்நீதி மன்றம் அவரசம் காட்டவில்லை. ஆனால், ஒரு கொலைக் குற்றவாளிக்காக விடுமுறை நாளில் உயர் நீதி மன்றத்தின் கதவுகள் திறக்கின்றன.மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கே போகாமல் உயர்நீதி மன்றத்தில் நேரடியாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுகிறது.
அரைநாளில் நூறு ஜாமீன் மனுக்களை விசாரித்துத் தீர்ப்பு சொல்லும் உயர்நீதிமன்றம் ஜெயேந்திரர் மனுவை அரண்டு நாள் விசாரிக்கிறது. 'நீதிபதிகளின் பங்களாவிலேயே இவரைச் சிறை வைக்கலாமே' என்று ஒரு திரிமினலுக்காக நீதிபதியே வாதாடுகிறார்.
காக்க . . . காக்க. . .
கிரிமினல் காக்க
இத்தனைச் சலுகைகள், அத்தனைச் சொகுசுகளுக்குப் பின்னரும் பார்ப்பன பாரதீய ஜனதா கும்பல் அலறுகிறது; 'அவரை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்' என்று மன்மோகன் சிங்கிடம் கண்ணீர் விடுகிறார் வாஜ்பாய்; சிறைவாசலில் சூடம் கொளுத்தி 'காக்க காக்க கனகவேல் காக்க!' என்று கொலைகாரனைக் காப்பாற்ற கந்தசஷ்டி கவசம் படிக்கிறார் இராம. கோபாலன். bள்ளைக்காரன் கூட சங்கராச்சாரியைக் கைது செய்ததில்லை என்று விம்மி வெடிக்கிறார் அத்வானி. அமெரிக்க அதிபரிடமும் ஐ. நா. சபையிடமும் முறையிடவேண்டியதுதான் பாக்கி!
சங்கரராமன் என்ற அந்துப் பார்ப்பனரைக் கொலை செய்ததற்காக, சுப்பிரமணி (ஜெயேந்திரர்) என்ற இன்னொரு இந்துப் பார்ப்பனர், ஜெயலலிதா என்ற அந்துப் பார்ப்பனரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் இது இந்து விரோத நடவடிக்கை என்கிறது இராமகோபாலய்யரின் இந்து முன்னணி. பார்ப்பனக் கிரிமினல்கள் மட்டும்தான் இந்துக்கள் என்று இவர்கள் அறிவிக்கும் பட்சத்தில் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளலாம். இந்த என்ற சொல்லுக்கு திருடன் என்று ஒரு அகராதியில் பொருள் சொல்லப் பட்டீருப்பதாக கருணாநிதி சொன்னவுடனே தாண்டிக் குதித்த இந்தக் கும்பல், இப்போது தங்கள் நடவடிக்கை மூலம் 'திருடர்களும் கொலைக்காரர்களும்மட்டும்தான் இந்துவாக இருக்க முடியும்' என்று நிரூபிக்கிறது.
ஒரு இந்துக் கோயிலின் உள்ளேயே வைத்து பட்டப்பகலில் ஒரு அந்து (பங்கரராமன்) கொலை செய்யப்பட்ட பொது வாய் திறக்காத இந்து முன்னணி இன்று ஜெயேந்திரர் என்ற அந்துக் திரிமினலுக்காக வாதாடுகிறது; ஒரு பாவமும் அறியாத சிறுபான்மை மக்களை வம்புக்கிழுத்து 'அவர்களுடைய வாக்குகளைக் கைப் பற்றத்தான் அந்தக் கைது நடவடிக்கை 'என்று கூறி கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறது.
ஜெகத்குரு கொலை செய்வார் ஜட்ஜ் விசாரிக்கக் கூடாதாம்!
ஆனால், பெரும்பான்மை இந்து மக்கள் அந்தப் பித்தலாட்டத்தை நம்பத் தயராக இல்லை. பாரதிய ஜனதா நடத்தும் ஆர்ப் பாட்டத்திலும் மனிதச் சங்கிலியிலும் பார்ப்பனக் குடுமிகளையும் மாமிகளையும் தவிர வேறு யாரையுமே பார்க்க முடியவில்லை. இதனால் ஆத்திரம் தலைக்கேறி 'துப்பாக்கி எடுப்போம், வெடி குண்டு வீசுவோம்' என்று கூச்சலிடுகிறது ஆர். எஸ. எஸ் கும்பல். நவம்பர் 13 ஆம் தேதியன்று உயர்நீதி மன்ற வளாகத்தில் கூட்டமாக வந்திருந்த அந்த துப்பாக்கி எடுக்கும் சூரப்புலிகளை உமது தோழர்கள் வெநும் பதினைத்தே பேர் விரட்டியடத்த காட்சியையும், வழக்குரைஞர்கள் விரட்ட இவர்கள் பின்னங்கால் குடுமியில் சிக்க தெறித்து ஓடிய காட்சியையும் நாடே பார்த்தது.
சங்கரராமன் கொலை வழக்கில் வெளிவரும் ஆதாரங்களை ஆர். எஸ. எஸ் கும்பலால் மறுக்க முடியவில்லை. தனது ஊழல்களையும் முறைகேடுகளையும் எதிர்த்த ராதாகிருஷ்ணன், மாதவன் என்ற இரு பார்ப்பனர்களைக் கொலை செய்வதற்கு ஜெயேந்திரர் கூலிப்படையை ஏவிவிட்ட கதையும் இப்போது வெளி வந்திருக்கிறது. இவற்றையெல்லாம் ஆதாரபூர்வமாக மறுத்து வாதிடுவது சாத்தியமில்லை என்பதால் ஆர். எஸ். எஸ் கும்பல் தடாலடியாக அனைத்தையும் மறுக்கிறது.
'இந்துமதத்தின் தலைவரான ஒரு ஜெகத்குரு இத்தகைய இழி செயல்களில் ஈடுபட்டிருக்க முடியாது என்று நாங்கள் நம்புகிறோம். யார் விசாரணை நடத்தி எந்த நீதிமன்றம் தீர்ப்பு சொன்னாலும் உங்கள் நம்பிக்கையை யாரும் மாற்ற முடியாது' என்பது தான் அவர்களுடைய வாதம். ஒரு மடத் தலைவரின் மீதான தங்களது நம்பிக்கையை இறை நம்பிக்யை போன்ற ஒரு மத நம்பிக்கையாகச் சித்தரித்து, தங்களது இந்த நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குவது 'இந்து மத உணர்வைப் புண்படுத்ததுவதாகும்' என்று வாதிடுகிறது இந்தப் பார்ப்பன பாசிசக் கும்பல்.
இவர்களுடைய வாதப்படி 'நான்தான் கொலை செய்தேன்' என்று ஒருவேளை ஜெயேந்திரரே ஒப்புக் கொண்டாலும், 'ஒரு ஜெகத்குரு கொலை செய்ய முடியாது' என்ற விசுவ. இந்து பரிசத்தின் நம்பிக்கையின் காரணமாக அத்வானி வகையறாக்கள் அதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.'அகழ்வாராய்ச்சி கூடாது, வரலாற்று ஆதாரம் தேவையில்லை, பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் இராமன் பிறந்தான், இது எங்களுடைய நம்பிக்கை, இதன் மீது எந்த நீதிமன்றமும் தீர்ப்புக் கூற முடியாது' என்பதுதான் அயோத்தி பிரச்சினையில் ஆர். எஸ. எஸ் இன வாதம் இப்போது ஜெயேந்திரர் கொலை வழக்கில் ஆர். எஸ. எஸ் முன்வைக்கும வாதமும் இதுதான்.
வேண்டுமென்றே நள்ளிர;ல கைது செய்தார்கள், பங்களாவில் கைக்காமல் சிறையில் வைத்தார்கள் மோசமாக நடத்தினார்கள்... என்று இவர்கள் கூறுவதெல்லாம் சரக்கில்லாத சப்பைக் கட்டுகள். 'ஜெகத்குருவும் அவரை ஒத்த விசுவ இந்து பரிசத்தின் காவி உடைக் கிரிமினல் கூட்டமும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள். இந்தச் சட்டமோ, நீதிமன்றமோ அவர்களைத் தண்டிக்க முடியாது; தண்டிக்கக் கூடாது' - இதுதான் இவர்களுடைய கோரிக்கை. உனவேதான் 'மங்களுக்குள்ளும கோயில்களுக்குள்ளும் போலீசு நுழைவதைத் தடைசெய்ய சட்டம் இயற்ற வேண்டும்' என்று கோரியிருக்கிறது அனத்திந்திய சாமியார்கள் சங்கம். இதனை அத்வானியும் சுஷ்மா °வராஜும் வழிமொழிந்துள்ளனர்.
சதுர்வேதி - மோசடி சாமியார், ஜெயேந்திரர் - சுவாமிகளாம்!
பார்ப்பனச் சங்கராச்சாரி கைது செய்யப்பட்டவுடனேயே இப்படித் துள்ளிக் குதிக்கும் இந்தக் கூட்டம் சதுர்வேதி, பிரேமானந்தாபோன்ற 'சூத்தி'ச் சாமியார்கள் கைது செய்யப்பட்டபோது குதிக்கவில்லை; கொந்தளிக்கவுமில்லை. செக்ஸ் சாமியார் பிரேமானந்தா, மோசடி சாமியார் சதுர்வேதி என்று எழுதும் தினமலர் போன்ற பார்ப்பன பத்திரிக்கைகள் ஜெயேந்திரரை கொலைகாரச் சாமியார் ஜெயேந்திரன் என்று எழுதுவதில்லை. °வாமிகள் என்று மிகுந்த மரியாதையுடன் அழைக்கிறார்கள்.
கிரிமினல் என்றும் கூலிப்படைத் தலைவனென்றும் அரசால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு கொலைக் குற்றவாளியை மகான் என்றும் உலகை உய்விக்க வந்த உத்தமன் என்றும் வருணித்து பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறது காஞ்சி மடம். அவை தினமணி, இந்து நாளிதழ்களில் வெளியிடப்படுகின்றன. பிரேமானந்தாவும் சதுர்வேதியும் தங்களைப் பற்றி இப்படி விளம்பரம் கொடுத்திருந்தால் இவர்கள் வெளியிட்டிருப்பார்களா?
'ஒரு குலத்துக்கு ஒரு நீதி' என்ற பார்ப்பனச் சாதிவெறிக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இந்த மனுநீதியைச் சட்டமாகவே ஆக்கி பார்ப்பன மடங்கள், ஆதீனங்கள் போன்ற கிரிமினல் கூடாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது தான் பாரதிய ஜனதாவின் கோரிக்கை.ஜெகத்குரு நியமனம் எப்படி?
இந்த மடாதிபதிகளும் ஆதீனகர்த்தர்களும் 'தெய்வப் பிறவி'களா?
வானத்திலிருந்து குதித்தவர்களா? அன்றாடம் உழைத்து நேர்மையாக வாழும் கடவுள் நம்பிக்கையுள்ள கோடிக் கணக்கான பக்தர்களின் கால் தூசுக்குக் கூடச் சமமாக முடியாத கயவர்கள்தான் இந்த மடாதிபதிகள்.
நூறு கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் இந்த ஆள்தான் ஜெகத்துக்கே குரு என்றால், இத்தனைக் கோடிப் பேரையும் ஒரு சல்லடையில் போட்டுச் சலித்து இந்த ஆள்தான் 'பெ°ட்' என்று பொறுக்கி எடுத்தார்களா? ஜெகத் குருவைத் தேர்ந்தெடுக்கும் வழி முறையைச் சொல்லுங்களய்யா மடாதிபதிகளே என்று கேட்கும் உரிமை பக்தர்களுக்கு உண்டா? பத்திரிக்கைகள் தான் கேட்ட துண்டா?
வேத ஆகமங்கள், உபநிடதங்கள், சாத்திரங்களை ஐயந்திரிபு அறக் கற்றவர்கள், அத்யயனம், பாராயணத்தில் கரை கண்டவர்கள் மெய்கண்ட சாத்திரங்களையும், சிவஞான போதத்தையும், பதிகங்களையும், புராணங்களையும் கசடறக் கற்றவர்கள்தான் மடத்துக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அது உங்கள் அறியாமை.
'இவனை மடத்தில் சேர்த்தால் ஊழலுக்கு உடந்தையாக இருப்பான். இங்கு நடக்கும் ஒழுக்கக் கேடுகளை வெளியே கசிய விடமாட்டான்' என்ற கிரிமினல் பயோடேட்டாவின் படி தான் இவர்களின் தேர்வே நடக்கிறது. அப்படியிருக்கையில் இப்படிப் பட்ட கிரிமினல்கள் பஞ்சமாபாதங்களையும் செய்யாமல் இருந்தால்தான் நாம் அதிர்ச்சியடைய முடியும்.
'இந்தியாவில் தகுதி தேவைப்படாத ஒரே தொழில் புரோகிதத் தொழில்' என்றார் அம்பேத்கர். சங்கரமடத்தில் பரமாச்சாரியையும், சைவ மடத்தில் ஆதினத்தையும் தெரிவு செய்ய முதல் தகுதி சாதி. கிரிமினலுக்கான தகுதிகள் வளப்பிலேயே தம் சாதிக்காரனுக் குத்தான் உண்டு என்பதில் அவாளுக்கு அவ்வளவு அசாத்திய நம்பிக்கை. இரண்டாவது தகுதி, பத்துக் கொலை செய்தாலும் தட்டமிட்டாமல் முகத்தைப் பராமரிக்கின்ற 'தெய்வீகக் களை' மூன்றாவதாக, மடத்தின் மாஃபியா வேலைகள் மற்றும் மடாதிபதியின் சிற்றின்ப லீலைகள் பற்றிய இரகசியங்களைக் பாப்பாற்றும் திறமை. நான்காவதாக, பெரியவர் சமாதி அடைந்து அதிகாரம் தன் கைக்கு வரும்வரை அடக்கி வாசிக்கும் 'பொறுமை'.
'ஆண்மீகத்' தரகுப் பணி
சின்ன பெரியவாள்களும், இளைய சன்னிதானங்களும் இப்படித்தான் பொறுக்கி எடுக்ப்படுகிறார்கள். இவர்கள் பட்டினத்தானையும் வள்ளலாரையும் பேலப் பரதேசியாய்த் திரிகிறார்களா? கோயில் கோயிலாய்ச் சென்று பதிகம் பாடுகிறார்களா? அல்லது சங்கரராமனுக்கு முடிவுரை எழுதிய ஜெயேந்திரர், அத்வை தத்துக்குப் பொழிப்புரை எழுதியிருக்கிறாரா?
ஒரு வெங்காயமுமில்லை. தின்பதும் தூங்குவதும் தான் இவர்களது ஆன்மீகம் நடவடிக்கைகள். இதைப் படித்து ஆத்திரப்படும் அம்பிகள் சின்ன பெரியவாளை எடை மிசினில் ஏற்றிப் பார்க்கட்டும்!இந்து சமயப் பணி என்ற பெயரில் அரசியல் புரோக்கர் வேலை செய்யும் காஞ்சி மடத்தின் 'சமயத் தொண்டு' பற்றி இண்டியன் எக்°பிரஸில் மாய்ந்து மாய்ந்து துதி பாடும் அம்பிகளுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? இருந்தாலும் தங்கள் சாதி பிராண்டைத் தூக்கிப் பிடிப்பதில் அப்படியொரு பத்திரிகா தர்மம். 'சங்கரமடத்திலிருந்து ளஒரு துண்டு சீட்டு வந்தால் உடனே டிரான்°பர், உடனே புரமோஷன், உடனே லைசன்°. . .' என்று 'பெரியவாளுடைய' செல்வாக்கை விதந்து போற்றுகிறார்களே, அது ஆன்மீகப் பணியல்ல, அரசியல் தரகு வேலை என்று அவர்களுக்குப் புரியாமலா இருக்கிறது?ஜெயேந்திரரின் யோக்யதை என்ன? அங்கே சொந்த மனைவியோடு nhகிறவருக்கும் ஆசி! அடுத்தவன் மனைவியோடு போகிறவனுக்கும் ஆசி! காமக் கொடூரன் சரவணபவன் அண்ணாச்சிக்கும் ஆசி! யோக்கியமான அந்துவுக்கும் ஆசி! சாராய மல்லையாவுக்கும் ஆசி! சம°கிருதப் பாசாலைக்கும் ஆசி! மக்கள் யாரையெல்லாம் களவாணி, சாராயக் கடைக்காரண், பொறுக்கி அரசியல்வாதி என்று காறித் துப்புகிறார்களோ அனைவரும் சங்கராச்சாரியிடம் வரிசையாகப் போய்க் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்கள்.
அம்பானி நோய்வாய்ப்பட்டுக் கிடக்கையில் தனி விமானம் ஏறி அவசர அவசரமாகப் போய் சங்கராச்சாரி ஆசீர்வாதம் வழங்குகிறார். அம்பானியோ ஜெயேந்திரர் கைதானவுடன் பதறுகிறார். 30 ஆண்டுகளில் குறுக்கு வழியில் பணக்காரனான குற்றவாளி அம்பானியுடன் சுவாமிகளுக்கு என்ன ஆன்மீக உறவு?ஊர் தாலி அறுத்து துறவிகள் சேர்த்த சொத்து!
தேர்தலில் நிற்கும் ஓட்டுச்சீட்டு அரசியல்வாதியை தேர்தல் கமிசன் 'நீ கிரிமினலா? சொத்து விவரம் என்ன? காவல் நிலையத் தில் வழக்கு உண்டா?' உன்று விளக்கம் கேட்க வேண்டும் என்கிறது தேர்தல் கமிசன். இது வாக்காளர்களின் தகவல் பெறும் உரிமை என்கிறது உச்சநீதி மன்றம்.கோடிக்கணக்கில் சொத்துக்களைப் புரட்டும் இந்த மடாதிபதிகள் யாராவது தங்களைப் பின்பற்றும் அல்லது தங்களோடு மதம் என்ற வகையில் இணைந்த பக்த கோடிகள் யாருக்காவது 'இவ்வளவு கோடி சொத்து, இன்றைய தேதிக்கு இலாபம் இவ்வளவு' என்று எணக்கு காட்டுவதுண்டா? இன்று காஞ்சி மடத்தின் சொத்து 6000 கோடி (1.2 பில்லியன் டாலர்கள்) என்று இந்துமதம் சார்ந்த இணையத்தளங்கள் கணக்கு சொல்கின்றன. திருவாவடுதுறைக்கு 1500 கோடி, மதுரை ஆதீனம் 1000 போடியாம்! சமீபத்தில் முளைத்து வளர்ந்த மாதா அம்ருதானந்தா மாயிக்கு 1600 கோடியாம்! இன்னும் பங்காரு அடிகள், சாயிபாபா, கல்கி, வைணவ ஜீயர்கள், ரவிசங்கர்ஜி, சிவசங்கர் பாபா, பலவகையான 'ஆனந்தா'க்கள் இருக்கிறார்கள். சேலம் குட்டி சாமியார் மூக்கு வெளிப்பதற்குள் 300 கோடியாவது சேர்ந்து விடுவார்.
ஜெகத்குருக்களும், ஆதீனங்களும் கழனியில் இறங்கி நாத்து நட்டு அறுப்பு அறுத்தா மடத்திற்குச் சொத்து சேர்த்தார்கள்?
ஒவ்வொரு மடத்துக்கும் அதன் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களும், மன்னர்களும், வணிகர்களும் தங்க வைடூரியங்களையும் நிலங்கடிளயும் தங்களின் கீழ் வேலை செய்த கூலி விவசாயிகளுடன் சேர்த்தே கொடுத்து 'குடிநீங்கா தேவதானம்' என்ற பெயரில் அடிமைப்படுத்தினர். பருவநிலை பொய்த்தாலும் மேல்வாரம், கீழ் வாரம் என்று கடுமையான வரிகளைப் போட்டு, குத்தகை இடத்தில் தென்னங்கன்றை நட்டு வைத்த மடங்களின் 'சிவத் தொண்டை' இன்றும் மக்கள் வாய்வழிக் கதையாகப் பேசி வருகின்றனர்.ஊரே எறும்பு புற்றிலும், எலி வளையிலும் அரிசியெடுத்துப் பசிபோக்கிய பஞ்சகாலத்திலும் குகைக்குள் தானியங்களையும், செல்வங்களையும் பதுக்கி வைத்து, மக்களை வரிபோட்டுக் கசக்கிப் பிழிந்த இந்த மடங்களின் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்கள் கலகம் செய்த வரலாறு திருத்துறைப்பூண்டிக் கல்வெட்டில் 'குகையிடிக் கலகம்' என்று குறிப்பிடப்படுகிறது.
ஆன்மீகவாதிகளல்ல ஆளும் வர்க்க ஏஜெண்டுகள்அன்று முதல் இன்று வரை மங்களையும் ஆதீனங்களையும் தீனி போட்டு வளப்பவர்கள் ஆளும் வர்க்கங்கள்தான். நிலப் பிரபுக்களின் கொடுங்கோன்மையையும், சுரண்டலையும் சாதி ஆதிக்கத்தையும் நியாயப்படுத்தவும், கருமவினை யென்றும் தலை விதியென்றும் கூறி தங்கள் துன்பத்தைச் ககித்துக் கொள்ளுமாறு மக்களை மூளைச் சலவை செய்யவும் மடாதிபதிகளுக்கு மன்னர்கள் கொடுத்த லஞ்சம்தான் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள்.
பார்ப்பனக் குருமார்களையும் ஆதீனங்களையும் மன்னர்கள் பணிந்து வணங்கக் காரணம் அவர்களின் தெய்வீக ஆற்றல் மீது கொண்ட மரியாதை அல்ல; அது ஒரு நாடகம். 'நாடாளும் மன்னனே பணிந்து வணங்கும்போது மடாதிபதிகள் தெய்வத்தின் அவதாரமாகத்தான் இருக்கவேண்டும்' என்று மக்களை நம்ப வைப்பதற்காக நடத்தப்பட்ட நாடகம்.
அந்த நாடகம் இன்றும் தொடர்கிறது. மல்லையாவும், அம்பானியும், பிர்லாவும் கோடி கோடியாய்க் கொட்டியளந்து விட்டு ஜெயேந்திரரின் காலிலும் விழுகிறார்களே, அவர்களுக்குத் தெரியாதா அந்தத் 'துறவி'யின் யோக்கியதை? அப்துல்கலாம் முதல் அமைச்சர்கள், அதிகாரிகள் வரை எல்லோரும் ஜெயேந்திரரின் முன் பணிவாகத் தரையில் உட்பார்கிறார்களே, பீடத்தில் அமர்ந்திருக்கும் சுப்பிரமணி 'முழு மூடன்' என்ற உண்மை அவர்களுக்குத் தெரியாதா?
சங்கரமடம் எனும் சோம்பேறிப் பார்ப்பனக் கூட்டத்தை ஆளும் வர்க்கம் சும்மா தீனி வோட்டு வளர்க்கவிலலை. மக்களை மழுங்கடிக்கும் அருள்வாக்கு, மக்களை அடிமைப்படுத்தும் சாதி வெறி, மக்களைப் பிறவுபடுத்தும் மதவெறி என்பதையெல்லாம் சங்கராச்சாரி ஆளும் வர்க்கத்துக்குத் திருப்பிச் செலுத்தும் நன்றிக் கடன்.
'சிவன் சொத்து குல நாசம்' என்று மிரட்டுகிறார்களே, இவர்கள் சேர்த்திருப்பது தான் பல குலங்களை நாசம் செய்து பிடுங்கிய சொத்து. இப்படி ஊர்தாலி அறுத்துச் சேர்த்த சொத்தை நிர்வாகம் செய்வதற்கு வள்ளலாரையும் பட்டினத்தாரையுமா நியமிக்க முடியும்?
அதனால்தான் திருவாவடுதுறை பெரிய ஆதீனத்துக்குச் சின்ன ஆதீனம் மருந்து வைக்கிறார். சின்ன ஆதீனமாக நியமித்த சுவாமி நாதனுக்கு குருபக்தி இல்லையென்று நாலே நாளில் விரட்டியடித்துவிட்டுப் போலீசில் புகாரும் கொடுக்கிறார் மதுரை ஆதீனம்.
'மற்ற ஆதீனங்கள் சாமியார்களைப் போல் அல்ல, நாங்கள் ஒரிஜினல் ஆதிசங்கரன் பரம்பரை' என்று பார்ப்பனத்திமிருடன் பீற்றிக் கொண்டிருந்த சங்கரமடம் இன்று சந்தி சிரிக்கிறது. ஜனாதிபதிகள், பிரதமர்கள், நீதிபதிகள், பத்திரிக்கைகள் அனைவரையும் கைக்குள் போட்டுக் கொண்டு, தங்களது லீலைகளைச் சாமர்த்தியமாக அமுக்கி வந்த காம கோடிகள் இன்று சிக்கிக் கொண்டு விட்டார்கள்.
'ஜெயேந்திரர் விஜயேந்திரரின் தம்பிககளும் அவர்களது உறவினர்களும் தான் சங்கரமடத்தின் சொத்தை ஆதிக்கம் செய்கிறார்கள்' என்று 'இந்து' பத்திரிக்கையே எழுதுகிறது. வாரிசு அரகியல், ஊழல் அரசியல் என்று அரசியல்வாதிகளைச் சாடும் முற்றும் துறந்த முனிவர்களின் யோக்கியதை இது.
ஜெகத்குருவே, கடவுளை ஏன் கைவிட்டீர்?
குற்றம் சாட்டப்பட்டுக் கூண்டில் நிற்கும் ஜெயேந்திரர் 'நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்' என்று மாஜி°டிரேட்டிடம் முழங்கவில்லை. 'நான் நீதிபதியை நம்புகிறேன்; போலீசை நம்ப மாட்டேன்' என்று புலம்புகிறார். 'துனபங்களுக்குக் காரணம் கருமவினை' என்று ஊருக்கு உபதேசம் செய்யும் லோக குரு, தனக்குத் துன்பம் வந்தவுடனே உலகத்திலேயே சிறந்த வக்கீலைத் தேடிப் பிடித்து ஜாமீனுக்காக வாதாடுகிறார்.
பெண்டாட்டி பிள்ளையுடன் இல்லற வாழ்வு றடத்தும் ஏராளமான கட்சித் தரைலவர்களும் தொண்டர்களும், மக்கள் பிரச்சினை களுக்காகப் போராடி மாதக்கணக்கில் சிறையில் இருக்கிறார்கள். லோக nக்ஷமத்துக்காப் பாடுபடும் இந்த முற்றும் துறந்த முனிவருக்கோ மூணு நாள் சிறையில் தங்க முடியவில்லை. நெய்யும், தயிரும், திராட்சையும், முந்திரியும் தின்று ஏ. சி. ரூமில் வளர்ந்த உடம்பு பங்களா கேட்கிறது.இறை நம்பிக்கை கொண்ட பக்தர்கள், தாங்கள் கொண்டிருக்கும் பற்றுதலை நிரூபிக்கத் தம்மைத் தாமே வருத்திக் கொள்கிறார்கள். விரதமிருக்கிறார்கள். விரதமிருக்கிறார்கள், தீ மிதிக்கிறார்கள், அலகு குத்துகிறார்கள், உழைத்துச் சேர்த்த பணத்தைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.
வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல் தவிக்கும மக்கள் கோயில் கோயிலாகச் சுற்றுகிறார்கள். வேலை கிடைக்காத இளைஞர்கள், வேலையிழந்த தொரீலாளர்கள், கடன் சுமை தாளாத விவசாயிகள், வரதட்சிணைக் கொடுமையால் திருமணமாகாத பெண்கள், மருத்துவம் பார்க்க வசதியின்றித் தவிக்கும நோயாளிகள். . . என்று பரிதவிக்கும மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மடாதிபதிகள் போதாதெண்று குட்டிச் சாமியார்களும் சதுர்வேதிகளும் பிணந்தின்னிகள் போல மக்களை மொய்க்கிறார்கள்.
தங்களுடைய கையறு நிலையையும் கடவுள் பக்தியையும் பயன்படுத்திக் கொண்டு கொள்ளையடிக்கத்தான் அந்தச் சாமியார்களும் மடாதிபதிகளும் அவதரித்துக் கொண்டேயிருக்கிறார்கள் என்ற உண்மையை உணராத வரை மக்களுக்கு விடிவில்லை.
சங்கராச்சாரி முதல் சதுர்வேதி வரை எந்தச் சாமியாருக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது. 'எல்லோருக்கும் மேலே ஒருவன் இருக்கிறான் நியாய அநியாயங்களைச் சீர்தூக்கிப் பார்த்துக் கூலி கொடுக்கிறான்' என்று நம்பும் பக்தர்கள் தான் பழிபாவத்துக்கு அஞ்சுகிறார்கள். 'நான்தான் கடவுள்' என்று நொல்லிக் கற்பழிக்கிறான் சதுர்வேதி; கோயிலில் வைத்துக் கொலை செய்யத் திட்டம் போட்டுத் தருகிறான் சங்கராச்சாரி. இதுதான் சாமியார்களின் யோக்கியதை.
பக்தர்களை மொய்க்கும் பிணந்தின்னிகள்!மக்களிடம் நிலவுவது கடவுள் பக்தி; மடாதிபதிகளிடம் இருப்பதோ காணிக்கை பக்தி. பக்தனைக் கைது செய்து இழுத்துப் போவதைப் பற்றி இந்து முன்ணிக்குக் கவலை இல்லை. பரமாச்சார்யளைப் பிடித்து இழுத்தால் பல ஆயிரம் கோடி சொத்தும் சேர்த்து வருகிறதே, அதனால்தான் பதறுகிறது இந்து முன்னணி; 'என்பது கோடி இந்துக்களின் தலைவரைக் கைது செய்வதா?' என்று எகிறுகிறார் அத்வானி; மடத்துக்குள்ளே போலீசு நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று முழங்குகிறது பாரதிய ஜனதா.'bருவோர விலை மாதர்களைக் கைது செய்லாம். ஆனால், நட்சத்திர ஓட்டல் விபச்சார விடுதிகளில் போலீசு நுழையக் கூடாது' என்பதைப்போல, 'சதுர்வேதியைக் கைது செய்து கொள் சங்கராச்சாரி மீது கை வைக்காதே' என்கிறார்கள் இவர்கள்.
'ஜெயேந்திரர் கொலை செய்திருப்பார்' என்பதில் இந்த முன்னணிக்கும், கூலிப்படைக்கும பணம் கொடுத்ததாகக் கூறப்படும் டி. வி. எஸ். முதலாளிக்கும், விமானம் வழங்கிய விஜய்மல்லையாவுக்கும எந்தச் சந்தேகமும் இருக்காது. இப்படிச் 'சொதப்பி' விட்டாரே என்ற வருத்தமிருக்கலாம், அவ்வளவு தான்.இருந்தாலும் சினிமாக் கதாநாயகிகளை 'கைபடாத மலர்கள்' என்று ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யும் சினிமா முதலாளிகளைப் போல, 'சங்கர மடம்' என்ற தங்களுடைய பக்திப் படத்தின் கதாநாயகனான சங்கராச்சாரியை உத்தமனாகச் சித்தரிக்க இவர்கள் முயல்கிறார்கள். ஆனால் மக்கள் இதனை நம்ப மறுக்கிறார்கள் என்பது தான் இவர்களுடைய பிரச்சினை.
ஜெயேந்திரரின் தண்டிக்கப்படாத குற்றங்கள்! ஏனென்றால் சங்கரமடம் என்பது பார்ப்பன மடம். கிரிமினலாக இருந்தாலும் ஒரு பார்ப்பான்தான் அங்கே சங்கராச்சாரியாக முடியுமே தவிர, எப்பேர்ப்பட்ட பக்தனாக இருந்தாலும் சூத்திரரோ, பஞ்சமரோ சங்கராச்சாரியாக முடியாது.செத்துப்போன சங்கராச்சாரியின் காலத்தில் பார்ப்பனரல்லாத சாதாரண மக்கள் யாரும் அந்த மடத்தைத் திரும்பிப் பார்த்தது கூட இல்லை.
'இந்து ஒற்றுமை' என்ற பெயரில் பார்ப்பனப் பாசிசக் கும்பலான ஆர். எஸ. எஸ் தாழ்த்தப்பட்ட ஒருக்கப்பட்ட சாதி மக்களை வளைக்கத் தொடங்கியபோதுதான் ஜெயேந்திரருக்கு 'சேரிப்பாசம்' வந்தது. சிறுபான்மை மக்களுக்கெதிரான கூலிப்படையாக தலித் மக்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காகத்தான் ஜெயேந்திரரின் 'சேரி விஜயம்' தொடங்கியது.
அப்போது தன்னுடைய சாதித் திமிரை ஜெயேந்திரர் கடுகளவும் விடவில்லை. கூத்திரம் பாக்கம் தலித் மக்கள் கோயிலில் நுழைய உரிமை கேட்டபோது 'நீங்கள் சுத்தமில்லை' என்று கூறியது, தன்கைத் 'தரிசிக்க' வந்த மராத்திய முதல்வர் ஷிண்டே, தலித் என்பதால் அவரைப் பத்தடி தள்ளி நிறுத்தியது, சங்கராச்சாரி நடத்தும் கல்லூரியில் பார்ப்பனரல்லாத மானவர்களுக்குத் தனிப் பந்தியில் சோறு, தலித் மக்களை ஒடுக்கும் மதமாற்றத் தடைச் சட்டம் என்று ஜேயேந்திரர் இழைத்துள்ள தீண்டாமைக் குற்றங்களுக்காக வழக்கு தொடர்ந்திருந்தால் சாகும்வரையில் இந்தச் சங்கராச்சாரி உள்ளேயே கிடக்க வேண்டியிருக்கும்.
கிறித்தவ, இசுலாமிய மக்களுககு எதிரான மதவெறியைத் தூண்டும் பேச்சு, குஜராத் படுகொலை நாயகன் மோடிக்கு ஆதரவு, அயோத்தி விவகாரத்தில நடத்திய அயோக்கியத்தனங்கள் ஆகிய வற்றுக்காகத் தண்டிப்தாக இருந்தால் ஜெயேந்திரர் இன்னொரு பிறவி எடுத்துச் சிறை செல்ல வேண்டும்.சங்கரராமன் கொலையைக் காட்டிலும் கொடியவை மேற்கூறிய குற்றங்கள். தன்னுடைய காமலீலைகளுக்கும், ஊழல்களுக்கும் எதிராகக் கேள்வி எழுப்பிய ஒரே குற்றத்துக்காக சொந்த சாதிக் காரனை, சங்கரமடத்தில் பக்தனைக் கொலை செய்யத் துணியும் ஒரு கிரிமினல் மற்ற சாதி மத மக்களை மயிருக்குச் சமமாகக் கூட மதிக்க மாட்டான் என்பதில் ஐயம் வேண்டுமா?
காறி உமிழிகிறார்கள் மக்கள்!இன்று தினமலர், போன்ற பார்ப்பனப் பத்திரிக்கைகள் ஜெயேந்திரருக்கு ஆதரவாக வரிந்து எழுதினாலும், இநது முன்னணிக்கு கும்பல் கரடியாய்க் கத்தினாலும் அதைக் கேட்க நாதியில்லை. பெரும் பான்மை மக்கள் நாத்திகர்களாகி விட்டார்கள் என்று இதற்குப் பொருளல்ல; சங்கராச்சாரி ஒரு பார்ப்பனக் கிரிமினல் என்பதைத் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
பார்ப்பனர்களிலேயே கணிசமான பிரிவினர் ஜெயேந்திரர் கொலை செய்திருக்கக் கூடும் என்பதைத் தயக்கத்துடன் ஒப்புக் கொள்கிறார்கள்.
இந்தக் கிரிமினலுக்கு ஆதரவாக வாதாடுவதற்கு வட நாட்டிலிருந்து வந்து இறங்குகிறார்கள் அத்வானி, தொகடியா, அசோக்சிங்கால் போன்ற ஆர். எஸ. எஸ் பாசிசக் கிரிமினல்கள். பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் பார்ப்பனப் பாசிசத்தை விதைக்க வெறி கொண்டு முயற்சிக்கிறார்கள்.
ஆனால், ஜெயேந்திரரைத் தங்களது மதத் தலைவராக பெரும் பான்மை 'இந்து' மக்கள் கருதவில்லை; அவர் நிரபராதி என்று நம்பவுமில்லை; மாறாக, எல்லாக் குற்றவாளிகளையும் விசாரிப்பதைப் போல நன்றாகக் 'கவனித்து' விசாரித்தால்தான் சங்கராச்சாரி குற்றத்தை ஒப்புக் கொள்வார் என்று வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.
இனி, ஜெயேந்திரருக்கு ஆதரவாகக் கூட்டம் சேர்க்க ஆர். எஸ. எஸ் கும்பல் தமிழகத்தில் மதவெறியைத் தூண்டும்; வதந்திகளைப் பரப்பி ஆங்காங்கே காவரத்தைத் துவக்கி வைக்கும். நாத்திகர்களும் கம்யூனி°டுகளும் சங்கரமடத்தின் நொத்தையும் இந்து மத நிறுவனங்களின் சொத்தையும் அபகரிக்க சதி செய்வதாகப் பிரச்சாரம் செய்யும் கிறித்தவர்களும முசுலீம்களும இந்து மதத்தை இழவுபடுத்து வதற்காகத்தான் இவர்களைத் தூண்டி விடுகிறார்கள் என்று கூசாமல் புளுகும்.
மொத்தத்தில் கிரிமினல் ஜெயேந்திரருக்கு மக்கள் ஆதரவைத் திரட்ட முடியாத காரணத்தால் வெறி பிடித்த நாயின் நிலையில் இருக்கிறது பார்ப்பனப் பாசிச ஆர். எஸ். எஸ். கும்பல். வெறிநாய் களைச் சொல்லித் திருத்த முடியாது.
போராட்டம் தான் இதற்கு விடை. வழக்கை போலீசு விசாரிக்குமங தண்டனை வழங்கும்' என்று நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும ஜெயேந்திரர் என்ற குற்றவாளி, இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரான பார்ப்பனப் பாசிச்க் கும்பலின் தலைவன். எனவே இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரர் தண்டிக்கப்படி வேண்டும் என்பதில் அநர்மையுணர்ச்சி கொண்ட ஒவ்வொருவரும் அக்கறை காட்ட வேண்டும்.
ஜெயேந்திரரால் ஏமாற்றப்பட்டிருப்பவர்கள் நாத்திகர்களல்லர்; இறை நம்பிக்கை கொண்ட பக்தர்கள். காவி உடையணிந்த ஒரு கிரிமினலை ஆன்மீகத் தலைவரென்று நம்பி அவர் காலில் விழுந்த ஒவ்வொருவரும் ஜெயேந்திரரால் அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கிரிமினல் தண்டிக்கப்பட வேண்டுமெனக் கோருவது பெரும்பான்மை இந்துக்களின் கடமை.
மடங்கள், ஆதீனங்கள் என்ற பெயர்களில் மக்களின் துயரத்தைக் காசாக்கிக் கொள்ளும் இத்தகைய பிரிமினல்களை ஒழித்துக் கட்ட வேண்டுமானால் ஜெயேந்திரர் தண்டிக்கப்பட்டாக வேண்டும்.ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதைச் சாக்காகக் கொண்டு பார்ப்பன மதவெறியைப் பரப்பவும், தமிழகத்தை குஜராத் ஆக்கவும் சதி செய்கிறது ஆர். எஸ். எஸ். கும்பல்.
இச்சதியை முறியடிக்க இறைநம்பிக்கை கொண்ட மக்களும், பெரியாரின் தொண்டர்களும், ஜனநாயகவாதிகளும், கம்யூனிஸ்டுப் புரட்சியாளர்களும் இணைந்து போராடுவோம்!
சங்கர மடத்தை இழுத்து மூடு!
விஜயேந்திரையும் சங்கரமடத்துப் பார்ப்பனக் கும்பலையும் கைது செய்!ஜெயேந்திரருக்குச் சிறப்புச் சலுகை வழங்காதே!
கொலைக் குற்றவாளியாக நடத்து!
நீதி விசாரணை முடியும் வரை ஜாமீனில் விடாதே!
இந்தக் கிரிமினல் கும்பலின் சதி ஆலோசகர்களான ஆர்.வி., சேசன் உள்ளிட்ட பார்ப்பன அதிகார வர்க்கக் கும்பலைக் கைது செய்து விசாரணை நடத்து!
சங்கரமடத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்!
சொத்து விவரங்களை வெளியிடு!
Friday, December 03, 2004
அப்பு கைதா?
http://www.vikatan.com/vc/2004/dec/vc0111.asp
ஏ அப்பு
யார் மேல தப்பு
நீ தப்பிக்கலாம்னு நப்பு
கொடுக்கப்போறாங்க ஜெயில்ல கப்பு
அப்படியே விகடனின் நையாண்டியையும் படிச்சுப்போட்டு போக்கண்ணு:
http://www.vikatan.com/av/2004/dec/05122004/av0302.asp
One side வேண்டுகோள்
தவறு நடந்துவிட்டது
ஒட்டு மொத்தமாக
எல்லாரும் இப்படி என்று
கணக்கு போடாதீர்கள் என்று
மாற்றான் வேண்டுகோளிட்டால்
ஒட்டு மொத்தமாக
எல்லாரும் இப்படி இல்லை என்று
சொல்லி தப்பிக்க பார்க்காதீர்கள் என்று
போங்கப்பா நீங்களும்
உங்க கூறுகெட்ட விவாதமும்
Tuesday, November 30, 2004
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாது
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
http://kumudam.com/reporter/mainpage.php
முதல்முறையாக தமிழக பி.ஜே.பி. மேடைகளில் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய இருபெரும் திராவிடக்கட்சிகளுமே கடுமையாக வறுபடத் தொடங்கியிருக்கின்றன. காரணம், சங்கராச்சாரியார் கைது விவகாரம்தான். மாறியிருக்கும் இந்தப் புதிய சூழ்நிலையில் தமிழக பி.ஜே.பி. தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணனைச் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.
‘சட்டத்தின் முன்பு எல்லோரும் சமம்’ என்கிறபோது, சங்கராச்சாரியார் கைதுக்காக பி.ஜே.பி. இவ்வளவு ஆக்ரோஷப்படுவது சரியா?
‘‘சங்கராச்சாரியார் கைதை நாங்கள் தேசத்தின் தன்மானப் பிரச்னையாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். நூறு கோடி மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பெரியவர் அவர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவரை, ஒரு குற்றவாளியைப் போல் நடத்துவது முறையா? நாளை அவர் மீதான புகார்கள் பொய்யென நிரூபணமாகும்போது, அவருக்கு இழைக்கப்பட்ட அவமானங்களை இந்த அரசால் முழுமையாகக் களைய முடியுமா? என்பதே எங்கள் கேள்வி.’’
சட்டரீதியான இந்தப் பிரச்னையை சட்டரீதியாகவே எதிர்கொள்வதுதானே முறை?
‘‘சட்டபூர்வம் என்பது அவர் மீது போடப்பட்டிருக்கும் வழக்கு. அதை சட்டரீதியாகத்தான் எதிர்கொண்டு வருகிறார். அதேசமயம் அவரது அடிப்படை உரிமைகள் மறுக்கப்படக்கூடாது அல்லவா?
அரசியல்வாதிகளுக்கு சிறையில் கேட்டதெல்லாம் கிடைக்கிறது. பல சிறைகளே பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஆனால், காஞ்சி சுவாமிகளுக்குக் கழிப்பறை வசதிகூட செய்து கொடுக்க மறுக்கிறார்கள். ஒரு சட்டியைத் தூக்கிக் கொடுக்கிறார்களாம். இது எவ்வளவு பெரிய அவலம்? எமர்ஜென்சி காலத்தில் கூட கைது செய்யப்பட்ட பல தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு மரியாதையாக நடத்தப்பட்டார்கள். இப்போது அதைவிட மோசமாக நடக்கிறது.’’
அப்படியானால் ‘பி.ஜே.பி., சங்கராச்சாரியார் கைதைக் கண்டிக்கவில்லை; அவர் நடத்தப்படும் விதத்தைத்தான் எதிர்க்கிறது’ என எடுத்துக்கொள்ளலாமா?
‘‘கைது நடவடிக்கையே தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் நிலை. அவர்தான் எப்போதும் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருந்தாரே!’’
இந்த விவகாரத்தில் இந்துத்வா அமைப்புகள் நடத்தும் பந்த் உள்ளிட்ட போராட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவு கிடைத்ததாகத் தெரியவில்லையே?‘‘
தமிழகத்தைப் பொறுத்தவரை மாநாடு, ஆர்ப்பாட்டம் போன்றவற்றிற்கு பி.ஜே.பி. ஏற்பாடு செய்திருந்ததால் பந்த் கடைப்பிடிக்கப்படவில்லை. மேலும், குறிப்பிட்ட அந்த நாளில் அத்வானி தமிழகத்திற்கு வந்திருந்தார். எனவே அன்று எப்படி பந்த் நடத்த முடியும்? ஆனால், தேசிய அளவில் ‘பந்த்’க்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கவே செய்தது.’’
சரி.. சங்கராச்சாரியார் கைதுக்காகப் போராடும் இந்து அமைப்புகள் சங்கர்ராமன் கொலைக்காக என்ன செய்தன?
‘‘சங்கர்ராமன் கொலையில் சம்பந்தப்பட்ட உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. அந்தக் கொலையைக் கண்டித்து அப்போதே இந்து அமைப்புகள் அறிக்கை விட்டிருக்கின்றன. அதேசமயம், தேசமே மதிக்கும் ஒரு பெரியவரை அவமானப்படுத்துவது என்பது சீரியஸான விஷயம்.’’
இப்போது ஜெயலலிதாவைத் தாக்கித்தள்ளும் இதே இந்து அமைப்புகள்தானே அண்மைக்காலம்வரை அவரை மோடிக்கு இணையாக வைத்துப் போற்றிக் கொண்டாடின?
‘‘சிலர் அப்படிப் பேசியிருக்கலாம். உண்மையில் ஜெயலலிதா எப்போதுமே இந்துக்களின் பாதுகாவலராக இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், திராவிடக் கட்சிகள் எதுவுமே இந்துக்களுக்கு அனுசரணையான கட்சிகள் அல்ல. அந்தந்தத் தேர்தல்களுக்குத் தகுந்தாற்போல் ஜாதி, மத பிரச்னைகளைக் கிளறிவிட்டு ஆதாயம் தேடுவதுதான் திராவிடப் பாரம்பரியம். ஜெயலலிதா மதமாற்ற தடைச்சட்டத்தைக் கொண்டு வந்தாரென்றால், அதற்குக் காரணம் மக்களிடையே பி.ஜே.பி. உள்ளிட்ட அமைப்புகள் உருவாக்கி வைத்திருந்த விழிப்புணர்வுதான்.’’
சங்கராச்சாரியார் விவகாரத்தில் கலைஞர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறதே?
‘‘கலைஞர் தனது வாக்கு சாதுர்யத்தால் ‘வாக்குகள்’ வாங்கும் நோக்கோடு பேசிக்கொண்டிருக்கிறார். உண்மையில் அவர் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. ‘இரண்டு மாதங்களுக்கு முன்பே சங்கராச்சாரியாரைக் கைது செய்திருக்கலாமே? அதுவரை வேறு ஏதேனும் பேரம் நடந்ததா?’ என்றெல்லாம்தான் தனக்கேயுரிய பாணியில் அவர் கேட்கிறார். எனவே, அவரது பேச்சு ஏமாற்று வேலை. மேலெழுந்த வாரியாக அதைப் பார்ப்பவர்கள் ஏமாந்து போவார்கள்.’’
தமிழக அரசியலில் பி.ஜே.பி. இப்போது தனிமைப்படுத்தப்பட்டது போல் உணர்கிறீர்களா?
‘‘இல்லை. மக்களோடு நாங்கள் ஐக்கியப்பட்டிருக்கிறோம்.’’
சங்கராச்சாரியார் விவகாரம் எதிர்கால தமிழக அரசியலை எந்த அளவுக்குப் பாதிக்கும் என நினைக்கிறீர்கள்?
‘‘பி.ஜே.பி. ஆதரவு இல்லாமல் இங்கே யாரும் ஆட்சியமைக்க முடியாது என்ற நிலையை உருவாக்கும்.’’
_______________________________________________
Related news links
http://dinakaran.com/daily/2004/Nov/30/others/topstory5.html
http://dinakaran.com/daily/2004/Nov/30/others/topstory4.html
http://dinakaran.com/daily/2004/Nov/30/others/topstory0.html
http://www.dinakaran.com/daily/2004/Nov/30/flash/flasnews0.html
http://www.thatstamil.com/news/2004/11/30/cancer.html
http://arunviews.blogspot.com/2004/11/blog-post_30.html
Monday, November 29, 2004
ஐயோ கடவுளே! எனக்கு என்னாச்சு?
ஐயோ உன் மானம் கப்பலேறப்போகிறதே என்று நம்ம Male kind, மீண்டும் மீண்டும் ட்ரை பண்ணுவார். ம்ஹும். ஒன்றும் ஒத்து வரவேயில்லை. தலையில் கைவைத்துக்கொண்டு என் சோக கதையை கேளு தாய் குலமே! அட தாய்குலமே! என்று மனதுக்குள் புலம்பும் நேரத்தில் எப்போதே தினதந்தியில் பார்த்த "உங்களுக்கு ஆண்மை குறைவா! கவலை வேண்டாம். இவரின் அப்பா, அப்பப்பா, பெரியப்பா, சித்தப்பா, தாத்தா, பாட்டனார் எல்லாரும் இதே டாக்டர் தொழில் செய்து (குலதொழில் போலும்) சென்சுரி அடித்ததோடு நிற்காமல் மாதம் அனைத்து தேதிகளிலும் ஒவ்வொரு டவுனாக வந்து மருத்துவம் பார்க்கிறார். பிரதி 29-ந் தேதி மயிலாடுதுறை காளியாகுடி லாட்ஜிக்கு விஜயம் செய்யப்போகிறார், 30-ந்தேதி சிதம்பரம் போகப்போகிறார் பராக்! பராக்!" என்ற அரை பக்க விளம்பரம் ஞாபகத்திற்கு வரும்.
தலையில் துண்டைப்போட்டுக்கொண்டு யாருக்கும் தெரியாமல் அவரைப் போய் பார்த்து ஆயிரம் ரூபாயிக்கு அவர் கொடுத்த மாத்திரை மருந்துகள் வாங்கி சாப்பிட்ட பிறகு இரண்டு நாளில் விஷயம் சரியாகிவிடும். இதற்கு காரணம் அந்த டாக்டர்தான் என்று நினைத்துக்கொள்வார். (இதில் ஸ்பெஷல் பேக்கேஜ் மெடிஸன் தேவை என்றால் ஐந்து ஆயிரம்). ஒரு ஆண் தன்னை ஆண்மையற்றவன் என்று சொல்வதை தாங்கிக்கொள்ள மாட்டான். அதனை பெறுவதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் ரகசியமாக செலவு செய்வான் என்ற மனித பலவீனம் தெரிந்து செய்யும் வியாபாரம் இது. யாரும் இவர்களிடம் ஏமாந்துவிடாதீர்கள்.
உங்களுக்கு தெரியுமா? வயாகரா போன்ற மாத்திரைகள் ஏற்படுத்தும் கில்மா-க்கள் மனது சம்பத்தப்பட்ட விஷயம் என்பதை தெரிவிப்பதற்காக, மாத்திரை தயாரிக்க உதவும் டியூப்களில் அரிசி மாவை அடைத்து "வயகராவெல்லாம் சும்மா. இது வயகராவின் அம்மா" என்று 100 பேருக்கு கொடுத்து டெஸ்ட் செய்தபோது, மூன்றில் இரண்டுபகுதியினர் மாத்திரை சூப்பராக வொர்க்அவுட் ஆனது என்றார்களாம்.
முதலில் ஒன்றை தெரிந்துக்கொள்ள வேண்டும். பத்திரிகையில் சினிமா நடிகையின் கவர்ச்சி விளம்பரத்தை பார்த்தவுடன் ஏற்படுகின்ற கிளுகிளுப்பு திருமணம் ஆனபுதிதில் உங்கள் மனைவியுடன் இருக்கும்போது வராது. காரணம் மேற்சொன்ன பதட்டமே தவிர வேறொன்றும் இல்லை. மனது பதட்டம் இல்லாமல் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும். யு அல்ரெடி ஃபிட் ஃபார் செக்ஸ்.
Sunday, November 28, 2004
முதலிரவு டிப்ஸ் - 2
நகராட்சியில் பிறந்த பதிவு வாங்குவதற்கு எத்தனை அலைச்சல் தெரியுமா? பியூன் நம்மிடம் "25 ரூவா கொடுசார் 10 நிம்சத்தில பெர்த் சர்டிஃபிகேட் தர்றேன்" என்று கொடுத்தால் இதுக்குபோயா 25 ரூபாய் என்போம். உங்களை அலையவிட்டு, பிறகு 25 ரூபாய் கேட்டால் அதன் பெருமதி விளங்கும். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் பொருளின் மதிப்பு விளங்க வேண்டும். அட பசித்து சாப்பிட வேண்டும் அவ்வளவுதான்.
மனைவியிடம் உங்களைப்பற்றி உங்கள் குணநலன்களைப் பற்றி சொல்லுங்கள். பொய்யாக பீற்றிக்கொள்ள வேண்டாம். உங்களின் வாழ்க்கை துணைவி உங்களுடனே எப்பொழுதும் இருக்கப்போகிறவள். அவளிடம் நான் தங்க பாத்திரத்தில்தான் சாப்பிடுவேன், பன்னீரில்தான் குளிப்பேன் என்று கப்ஸாவிட்டீர்கள் என்றால் சீக்கிரத்தில் உங்களின் சாயம் வெளுத்துப்போய்விடும்.
சிலர் தன்னைப்பற்றிய வண்டவாளத்தை எல்லாம் பிரத்யேக ஸ்டேட்டஸ் என நினைத்து மனைவியிடம் சொல்லி வாங்கிக்கட்டிக் கொள்வார்கள். இப்படிதான் முதலிரவு அன்று தன் மனைவியிடம் ஒவ்வொரு பிள்ளையார் கோயிலாக போய் சைட் அடித்தது, தண்ணி அடித்தது, பெண்பழக்கம் உள்ளது எல்லாவற்றையும் திருமணமான இரவு மனைவிடம் சொல்லவே, அவள் அலறி அடித்துக்கொண்டு தன் தந்தையிடம் சென்று "போயும் போயும் குடிகாரனை எனக்கு கல்யாணம் பண்ணிவைத்துவிட்டீர்களேப்பா" என்றாளாம்.
அப்படியென்றால் மனைவியிடம் உண்மையை சொல்லக்கூடாதா என்று கேட்கலாம். நிச்சயமாக சொல்லலாம். இப்பொழுது அல்ல. உங்களின் நற்குணங்களை தெரிந்துக்கொண்ட பின்னர் சொல்லலாம். அப்படியில்லையென்றால் உங்களின் மைத்துனியைக்கூட உங்கள் அருகில் வர அனுமதிக்கமாட்டாள் உங்கள் மனைவி.
இதையே இன்னொருவிதமாக நினைத்துபாருங்கள். திருமணத்திற்கு முந்தைய அவளின் இருண்ட வாழ்க்கையைப்பற்றி நீங்களோ அல்லது உங்களின் இருண்ட வாழ்க்கையைப்பற்றி அவளோ தெரிந்துக்கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள். பிறிதொரு காலத்தில் உன்னையைப்பற்றி தெரியாதா? என்னைப் பற்றி தெரியாதா? என்று சொற்போருக்காகவா? பழையவைகளை கிளறுவதைவிட இனி நடக்கப்போகிறதை பாருங்கள் சார்.
இதற்கு மேல் கட்டுரையை நீட்ட விரும்பவில்லை. தேவையான விஷயங்களை பிரிதொரு சமயத்தில் பல்வேறு தலைப்புகளில் தர முயற்சி செய்கிறேன். அதற்குமுன் உங்களுக்கு ஒரு புத்தகத்தை மட்டும் சிபாரிசு செய்கிறேன். அது சுவாமி சுகபோதானந்தாவின் "அகமே ரிலாக்ஸ் ப்ளீஸ்". இந்து, முஸ்லிம், கிருஸ்துவர் என்று சாதிமதம் பார்க்காமல் திருமணத்திற்கு முன்பு படிக்கவேண்டிய புத்தகம்.
(இதற்கு முன் அவர் வெளியிட்டது "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்". இணையத்தில் கூட இப்புத்தகம் கிடைக்கிறது) மனிதம், மனிதம் என்று சொல்லிக்கொண்டு மறுபுறம் மதத்தின் பெயரால் வெட்டிக்கொள்ளும் இக்காலத்தில், அனைத்து மதத்தில் இருந்தும் நல்ல கருத்துக்களை, கதை வடிவில் நகைச்சுவையாக சொல்பவர் சுவாமிஜி. நான் சுவாமி சுகபோதானந்தாவை சந்யாஸியாக பார்க்கவில்லை. மனிதர்களின் குணநலன்களை அறிந்த உளவியல் மருத்துவராக பார்க்கிறேன்.
Saturday, November 27, 2004
முதலிரவு டிப்ஸ் - 1
இதில் யாரும் விதிவிலக்கில்லை. அப்படி அவசரப்படுவதே நம்ம Male Kind-தான் சார். (யாருக்கு முன் அனுபவம் இருந்ததோ அவர்களைத்தவிர).
நமது Male kind நண்பர்கள் பலர் திருமண நாளை எதிர்நோக்கியிருப்பதால், அவர்களுக்கு இந்த அறிவுரைகள் பயனளிக்கலாம். இதெல்லாம் எனது அனுபவம் என்று எண்ணிவிடவேண்டாம்.
ம்ம்... நீங்களாவது நல்லாயிருக்கனும் என்ற நல்ல எண்ணம்தான்.
சரி விஷயத்தை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
திருமணம் நடந்த அன்றே சாந்திமுகூர்த்தம் வைத்துக்கொள்வதை தள்ளிப்போடலாம். மாப்பிள்ளை பெண் இருவருக்கும் உள்ள ஏக்கங்கள் அளவுகடந்து இருந்தாலும் அவர்களின் உடம்பு அதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமா என்பதுதான் காரணம். திருமணத்திற்கு முந்தையநாள் கண்விழித்து தோழி தோழர்களுடன் அரட்டை அடித்தது. திருமண மண்டபத்திற்காக வெளியூர் பயணம், சம்பிரதாயங்கள் என்று பல்வேறு காரணங்களுக்கு மாப்பிள்ளை பெண் இருவரையும் பெண்டு கலட்டியிருப்பார்கள்.
சாந்திமுகூர்த்தம் அன்றே வைக்கவேண்டும் என்று யாராவது அடம்பிடித்தால் உங்கள் மனைவியிடம் ஒப்பந்தம் போட்டு இரண்டு நாட்களுக்கு தள்ளி போடலாம். இந்த ஒப்பந்த செய்தி உங்களுடன் இருக்கட்டும். செய்தி லீக் ஆகிவிட்டால் அவ்வளவுதான்.
சரி சார், அந்த இரண்டுநாளில் என்ன செய்வது என்கிறீர்களா? அதை அடுத்து பார்க்கலாமே.
Friday, November 26, 2004
உள்ளே, வெளியே இருக்கும் அத்தனைபேரும்...
அதேபோல், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகிய இருவரும் சென்னை மத்திய சிறைக்கு வந்து தங்களைத் தாக்கியவர்கள் பற்றி அடையாளம் காட்டியுள்ளார்கள்.
இந்த கொலையை தூண்டியவர்கள் யாராகவும் இருக்கலாம். அவர்களுக்கு தண்டனை கிடைக்கலாம் அல்லது வழக்கிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் கொலை கருவியாக பயன்பட்ட ரவுடிகள் வசமாக மாட்டியுள்ளார்கள். சட்டம் தன் கடமையை செய்ய அரசியல்வாதிகளின் இடைஞ்சல் இல்லாதிருந்தால் குற்றவாளிகள் தண்டனை பெறுவது உறுதி.
முதல்பக்கம்:
இந்த சம்பவங்களை படிக்கும்போது சென்னை உயிர்நீதி மன்ற வளாகத்தில் நேரில் கண்ட காட்சி என்கண்களில் நிற்கிறது. வழக்கிற்காக கொண்டுவரப்பட்ட ரவுடிகளை ஒரு இடத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அங்கு நடக்கும் கூச்சலும், கலாட்டாவும் விவரிக்க இயலாது. பிறகு குற்றவாளிகள் மத்திய சிறைக்கு அழைத்துச்செல்வதற்காக வேனில் அடைக்கப்படுகிறார்கள். அப்பொழுது சில பெண்கள் (உறவினராக இருக்கலாம்) பீ.டி. சிகரெட் போன்றவற்றை கொடுப்பதற்காக கம்பி போட்டு அடைக்கப்பட்ட வேனை சுற்றிவரவே போலீசார் விரட்டுகிறார்கள். வேன் புறப்பட்ட பின் அந்த வேனின் பின்னால் ஓடி காரியத்தை சாதித்துக்கொள்கிறார்கள்.
ரவுடிகளுக்கு எனது கேள்விகள்:
1) உங்கள் பெண்களும் மற்ற குடும்ப பெண்களைப்போல் மானம் ரோஷம் போன்றவைகள் உள்ளவர்கள் அல்லவா?
2) அவர்களை கோர்ட்டு வாசலில் உங்களுக்காக தவம் இருக்கச் செய்யும் காரியங்கள் எந்த வெள்ளையனை விரட்டுவதற்காக செய்தீர்கள்.
3) நீங்கள் செய்ததெல்லாம் யாரோ ஒரு அரசியல்வாதி, ஒரு ஆன்மீகவாதி அல்லது பேட்டை தாதா வாழ்வதற்காக செய்தவையே.
4) உங்களை ஏவிய அவர்கள் உள்ளே அல்லது வெளியே உல்லாசமாக இருக்கிறார்கள். ஆனால் உங்கள் கதியை நினைத்து பார்த்தீர்களா?
5) உங்கள் மனைவியின் பாதுகாப்பு குழந்தைகளின் கல்வி இவற்றைப்பற்றி நீங்கள் சிந்தித்திருந்தால் இவ்வாறு செய்வீர்களா?
6) நீங்கள் உள்ளே இருக்கும் நேரம் பொருளாதார பிரச்சனைகளுக்காக கற்பிழக்கும் உங்கள் மனைவி, மகள்களை நீங்கள் நினைத்து பார்த்தீர்களா?
7) உங்கள் மகன்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, உங்களைப்போல் ரவுடியாக மாற விரும்புகிறீர்களா?
8) இன்னும் சில கேள்விகளை நீங்களே கேட்டு திருந்திக்கொள்ளுங்கள்.
மறுபக்கம்:
சந்தேகவழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவரை சென்னையிலுள்ள ஒரு காவல்நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அழைத்துசெல்கிறார்கள். அவரை அழைத்துச்செல்லும் இரு காவலரும் பேசிக்கொள்கிறார்கள்:
"ஏம்ப்பா சீக்கிரம் இவரை கோர்ட்டுக்கு அழைச்சிட்டு போகனும். பெயில்ல எடுக்க ஆள்வந்துருக்காங்க".
"அடப்போப்பா இவனை சீக்கிரம் அழைச்சிட்டு போறதனால நமக்கு என்ன இலாபம். இவனுங்கல அலைகழிச்சாத்தான் எதனாச்சும் கறக்க இயலும். நான் முன்னால ரவுயாகத்தான் இருந்தேன். யாரிடம் எப்படி கறக்கிறதுன்னு எனக்கு தெரியும்".
காவல்துறையினருக்கு எனது கேள்விகள்:
1) நீங்கள் வாங்கும் சம்பளம் மக்களின் வரிப்பணத்தில் கொடுக்கப்பட்டது என்பதை நினைத்துப் பார்த்தீர்களா?
2) உங்களுக்கு முதலாளி மக்களா? அரசியல்வாதிகளா?
3) மக்களின் பாதுகாப்புக்கு நீங்கள் நியமிக்கப்பட்டிருக்கிறீர்களா? அல்லது ரவுடிகளின் பாதுகாப்புக்கு நீங்கள் நியமிக்கப்பட்டிருக்கிறீகளா?
4) நீங்கள் பிடித்திருக்கும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா?
5) காசு கொடுக்காமல் நீங்கள் சாப்பிடும் பிரியாணியும் குவார்ட்டரும் யாரை ஏய்த்து வாங்கியது.
6) நீங்கள் ரவுடித்தனமாக நடந்துக்கொண்டால் நிச்சயமாக நீங்களும் உங்கள் குடும்பமும் ரவுடிகளால் தாக்கப்படும் நாள் அருகில் இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.
8) இன்னும் சில கேள்விகளை நீங்களே கேட்டு திருந்திக்கொள்ளுங்கள்.
தீவிரவாதிகள்
பெருமாநல்லூர் அருகே பொம்மநாயக்கன்பாளையத்தில் மளிகைக் கடை நடத்தி வந்த நாற்பது வயது ஜஸ்டின் மதப்போதகராகவும் இருந்து வந்துள்ளார். அங்குள்ள மக்களை அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றம் செய்து வருவதாக இந்து முன்னணி ஏற்றிவிட்ட வெறியில் 06-06-2003 அன்று ஜஸ்டினின் மளிகைக் கடைக்குள் இந்த 6 பேரும் புகுந்து, இரும்புக் கம்பி, அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். உயிர் ஊசலாட்டத்தில் இருந்த அவர் 01.07.2003 அன்று இறந்து போயிருக்கிறார். இவ்வழக்கில் பொம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த
சண்முகம் மகன் மோகன்ராஜ் என்ற சக்திவேல் (வயது 26)
கருப்புசாமி மகன் சுகு என்ற சுகனேஸ்வரன் (வயது 22)
முத்து மகன் பெருமாள் (வயது 25)
திருப்பூரைச் சேர்ந்த ஜீவானந்தம் மகன் ஜீவகணேஷ் (வயது 26)
சுப்பிரமணியம் மகன் மணிகண்டன் (வயது 26)
பரமசிவம் மகன் சங்கர் (வயது 24)
ஆகிய 6 இந்து முன்னணியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வியாழக்கிழமை திருப்பூர் விரைவு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இளைஞர்களை தனது தீவிரவாத பேச்சால் வழிகெடுக்கும் மத தலைவர்கள் ஒழிந்தால்தான் தமிழ்நாட்டுக்கு அமைதி திரும்பும். குறைந்த கால இடைவெளியில் 34 சாட்சிகளை விசாரித்து தீர்ப்பு கூறிய விரைவு நீதிமன்றத்தையும், காவலர்களையும், தமிழ்நாட்டு அரசையும் பாராட்டாமல் இருக்கமுடியாது.
காஸ்ட்லியான மூளை எது?
டேய் போன வாரம் மார்க்கெட் போயிருந்தப்ப மனித மூளைகளை விற்றாய்ங்க. இந்தியர்களின் மூளை டாலருக்கு ஐந்து என்று கூவி கூவி விற்றாய்ங்க. எங்க நாட்டுக்காரன் மூளைதான் ரொம்ம்ம்ப காஸ்ட்லி என்றான்.
மாம்ஸ் உங்க நாட்டுக்காரங்களோட மூளை காஸ்ட்லியா விற்றதற்கு காரணம் இருக்கு. எங்க ஆட்கள் (இந்தியர்கள்) மூளையை யோசிக்க பயன்படுத்துறாய்ங்க. பயன்படுத்திய மூளை என்பதால் மட்டமான விலை. உங்க நாட்டுக்காரன் அப்படியா? பயன்படுத்தாம அப்படியே ஃபிரஸ்ஸா வச்சிருக்கான் என்றான்.
Thursday, November 25, 2004
அப்பாவைப் பற்றி பிள்ளைகளின் எண்ணங்கள்
At 4 Years My daddy is great.
At 6 Years My daddy knows everybody.
At 10 Years My daddy is good but is short tempered
At 12 Years My daddy was very nice to me when I was young
At 14 Years My daddy is getting fastidious.
At 16 Years My daddy is not in line with the current times.
At 18 Years My daddy is becoming increasingly cranky.
At 20 Years Oh! Its becoming difficult to tolerate daddy. Wonder how Mother puts up with him.
At 25 Years Daddy is objecting to everything.
At 30 Years It's becoming difficult to manage my son. I was so scared of my father when I was young.
At 40 Years Daddy brought me up with so much discipline. Even I should do the same
At 45 Years I am baffled as to how my daddy brought us up.
At 50 Years My daddy faced so many hardships to bring us up. I am unable to manage a single son.
At 55 Years My daddy was so far sighted and planned so many things for us. He is one of his kind and unique.
At 60 Years My daddy is great.
Thus, it took 56 years to complete the cycle and come back to the 1st stage!
So, Don't waste time and Never forget your parents.
அரசியல் சதுரங்கம்
பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற இயக்கங்கள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை கண்டித்து அறிக்கை விடுவதில் அவர்கள் கடைபிடிக்கும் மென்மையான போக்கு கூர்ந்து பார்த்தால் தெரியும். தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை என்றார் அத்வானி. இனி தங்களின் கூட்டணியில் அ.தி.மு.க.வுக்கு எந்த காலத்திலும் இடமில்லை என்று தீர்மானம் இயற்றினால் நன்றாக இருக்கும்.
திரு ஜயேந்திரரின் கைதுக்கு சதுர்வேதி சாமியார்தான் சந்தோசப்பட்டிருப்பார். காரணம் பிரேமானந்தாவுக்கு எழுதப்பட்டதுபோல் சதுர்வேதி சாமியாரின் அம்பலத்தொடர் பத்திரிக்கையாளர்களால் எழுத முடியாமல் நின்று போனதுதான். இதில்
சட்டமன்ற கல்லூரியில் MLA மாணவர்கள் பெஞ்ச் தட்டி அம்மாவின் சாதனை பாட்டு பாடுகிறார்கள். வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டது அம்மாவின் சாதனை என்றால், ஜயேந்திரர் கைதுக்கு காரணம், சட்டம் தன் கடமையை செய்கிறது என்று சொல்வானேன். அதையும் தங்கள் ஆட்சியின் சாதனை என்று சொல்வாரா அம்மா?.
சட்டம் தன் கடமையை செய்கிறது என்று சொல்லும் முதலமைச்சர் அவர்களே! அதற்கு இடையூறாக இருக்கும் பி.ஜே.பி-யிடம் இனியாவது கூட்டு சேராமல் இருப்பீர்களா?
திரு ஜயேந்திரர் கைதுக்கு உள்நோக்கம் இருக்கலாம் என்ற கலைஞர் சொன்னதற்கு காரணம் அம்மாவுக்கு அவப்பெயர் ஏற்படவேண்டும் என்பதற்காக என்றார் ஒரு காவி கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர். அப்படியென்றால் திரு ஜயேந்திரரை கைது செய்தது சரி என்கிறாரா? அப்படி சரி என்றால் ஏன் உண்ணாவிரதமும், பந்த்-ம் நடத்தவேண்டும்.
இந்தியாவில் உள்ள சட்டத்தின் ஓட்டைகளை பி.ஜே.பி. வகையறாக்கள் அறியாதவர்களல்ல. ஆனாலும் அம்மா எப்பொழுது எந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார். தெரிந்தோ தெரியாமலோ திரு ஜயேந்திரரை கைது செய்துவிட்டார். பிடி நழுவினால் அம்மாவின் நிலை சும்மாதான்.
இந்த இடத்தில் கலைஞர் மட்டுமல்ல. அம்மா இருந்தாலும் உள்நோக்கம்தான் கற்பிப்பார். ஏன் இதையும் தாண்டி செய்தாலும் மறுப்பதற்கில்லை. கலைஞர் சொன்ன உள்நோக்கத்திற்கு காரணங்களை வெளியிட்டிருக்கிறார். ஆக மொத்தத்தில் அரசியல்வாதிகள் தனக்கு பிடிக்காதவரை மட்டுமே உள்ளே தள்ளுவது என்று வழக்கமாக்கி இருக்கிறார்கள்.
தலைவர்களுக்கு ஓட்டு போட்டு எதற்காக சட்டமன்றத்திற்கு அனுப்புகிறார்கள்? மக்களுக்கு சேவை செய்யத்தானே. ஆனால் இன்றைய தலைவர்கள் எதிர்கட்சியினரை பழிவாங்கவேண்டும், பழிதூற்ற வேண்டும், பணம்புரட்ட வேண்டும் அல்லது கருப்பு பணங்களை காப்பாற்ற வேண்டும் என்றே ஆட்சிக்கு வருகிறார்கள்.
மக்களுக்கு Best from Worst தேர்ந்தெடுப்பதே தற்போதைய விதி என்றாகிவிட்டது. இன்று தமிழ்நாட்டுக்கு தேவை மக்களுக்காக உழைக்கும் தன்னலமற்ற தலைவர்.
Wednesday, November 24, 2004
டேய்! என்னை யார்னு நினைச்சே
அங்கு வருகை தந்த சவுதி அரேபியாவின் விலங்குகாட்சி சாலை ஒன்றின் நிர்வாகி, அந்த சிங்கத்தை தன் நாட்டுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
சென்ட்ரல் ஏ.சி. யூனிட் தரும் குளுகுளு வசதி, உணவுக்காக தினமும் ஒன்று அல்லது இரண்டு ஆடு, சவுதி குடியுரிமை அட்டை என கனவு காண ஆரம்பித்தது சிங்கம்.
சவுதி வந்த முதல் நாள் காலை உணவுக்காக ஒரு பொட்டலம் சிங்கத்துக்கு அனுப்பப்பட்டது. பொட்டலத்தின் அழகைப் பார்த்து அதன் உள்ளே பிரத்யேக உணவு இருக்கும் என எண்ணி அவசரமாக பிரித்த சிங்கத்திற்கு சில வேர்கடலைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி.
தான் கடல்கடந்து வந்திருப்பதால் தன் வயிற்றுக்கு கேடு எதுவும் வரக்கூடாது என்பதற்காக வேர்கடலை கொடுத்திருக்கிறார்கள், ஆகா நம்மீது என்னே ஒரு பரிவு, என்று எண்ணியது. இரண்டாவது நாளும் அதே உணவுதான் அனுப்பி வைக்கப்பட்டது.
மூன்றாம் நாள் வேர்கடலை கொண்டுவந்த பையனிடம்,
"டேய் பொடியா என்னை யார்னு நினைச்சே! நான் காட்டுக்கே ராஜா தெரியுமா? உங்களின் நிர்வாகத்திற்கு பித்து பிடித்துக்கொண்டதா? இது உங்களுக்கே முட்டாள்தனமாக தெரியவில்லையா? எனக்கு ஏன் வேர்கடலையை அனுப்புகிறீர்கள்?" என்று கர்ஜித்தது.
அதற்கு பையன் மிக பவ்யமாக,
"ஐயா! எனக்கு தங்களின் அருமை பெருமைகளைப்பற்றி நன்றாகத் தெரியும். (தவறுதலாக) குரங்கிற்கு உரித்தான விஷாவில் உங்களை வரவழைத்திருக்கிறார்கள்" என்றான்.
Tuesday, November 23, 2004
Made in India
அமெரிக்க விஞ்ஞானி கோலி குண்டு அளவில் ஒரு அணுகுண்டை காட்டி இதை எந்த நாட்டுமேலேயாவது போட்டா எல்லா உயிரும் பொசுங்கி போய்விடும் என்றார்.
அடுத்து ஜப்பான் விஞ்ஞானி ஒரு செல்ஃபோனை கொண்டுவந்து இதில் பேசிக்கிடலாம், எதிர்முனையில் இருப்பவர்களை பார்த்துக்கிடலாம். அதுமட்டுமல்ல. எதிர்முனையில் உள்ள வாசனையையும் இதன்மூலம் நுகரலாம் என்றார்.
அடுத்து நம் ஆள் ஒரு போண்டாவை கொண்டுவந்து நடுவரிடம் கொடுத்துவிட்டு, இது என் தயாரிப்பு Made in India என்று சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொண்டார்.
போட்டி முடிவு:
போண்டாவில் எந்த துளையும் இடாமல் முட்டையை உள்ளே செலுத்தியிருப்பதாலும் முட்டை எந்தவித சேதமும் இல்லாமல் இருப்பதாலும் திருவாளர் போண்டா முதல் பரிசை தட்டிச் செல்கிறார்.
ஊர் வரும் முன்னே...
மற்ற இரண்டு கிறுக்கர்களுக்கும் ஆச்சரியம். எப்படி பாய் கண்டுபிடிச்சீங்கன்னாய்ங்க. அட செம கூலா இருக்கு அதவைத்து கண்டுபிடிச்சேன் என்றான்.
வண்டி பம்பாய் மேலே பறந்துகிட்டிருக்கிற சமயமா பார்த்து மூனு கிறுக்கனுங்களும் கைகளை வெளியிள நீட்டினாய்ங்க. பம்பாய் கிறுக்கன் எங்க ஊரு வந்துடிச்சிடான்னு கத்தினான்.
மற்ற இரண்டு கிறுக்கர்களும் ஆச்சரியமாய் எப்படி ஜீ கண்டுபிடிச்சீங்கன்னாய்ங்க. என் கைகடிகாரத்தை எவனோ அடிச்சிட்டானுவப்பா என்றான்.
ஃபிளைட் மெட்ராஸ் மேலே பறந்துச்சி. நம்ம ஆளு ஃபிளைட் ஜன்னல்கதவ திறந்தான். கூவம் நாற்றம் பொறுக்கமுடியாம காஷ்மீரியும் பம்பாய் வாலாவும் மூக்கைப் பொத்துனது பார்த்து அப்பாடா எங்க மெட்ராஸ் வந்துடிச்சி அப்படின்னான்.
Sunday, November 21, 2004
நான் கிறுக்க நினைப்பதெல்லாம்
நினைப்பதெல்லாம்
நீ படிக்க வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
மறுமொழியிட வேண்டும்
மறுமொழியிட வேண்டும்
ம்...ம்ஹும்
வலைப்பதிவு அமைப்பதற்கு
பிளாக்கர்தான் வேண்டும்
பிளாக்கர்தான் வேண்டும்
ம்...ம்ஹும்
திரட்டி இன்றி கிறுக்கியதெல்லாம்
குப்பைக்கு போகும்
குப்பைக்கு போகும்
ம்...ம்ஹும்
மூன்று முறை கிறுக்கிவிட்டு
பதிவு செய்ய வேண்டும்
தமிழ்மணத்தில் பதிவு செய்ய வேண்டும்
ம்...ம்ஹும்